அ.தி.மு.க பிளவுக்கு பின்னணியில் தி.முக இருப்பதாகத்தான் நினைக்கிறேன்.அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நடராஜன் குற்றச்சாட்டு
காலம்சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாயத்தேவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது குடும்பத்தினருடன் துக்கத்தை பகிர்ந்து பின்னர் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நடராஜன்,
"நான்'40 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன். நான் பெங்களூரிலிருந்து வந்ததிலிருந்து அ.தி.மு.க-விலிருந்து யார்... யார் பிரிந்து சென்றார்களோ, அவர்களெல்லாம் ஒன்றிணைந்து செல்லவேண்டும் என்றுதான் சொல்லி வருகிறேன்.நான் 40 ஆண்டுகளாக இந்த இயக்கத்தில் இருக்கிறேன். எல்லா அரசியல் சூழ்நிலைகளையும் பார்த்துத் தான் வந்திருக்கிறேன். அ.தி.மு.க பிளவு தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க-வுக்கு தான் சாதகமான பயனைக் கொடுக்கும்.
அதனால் அ.தி.மு.க பிளவுக்கு பின்னணியில் தி.முக இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன். கட்சியிலிருந்து யார் யார் பிரிந்திருக்கிறார்களோ அவர்களையெல்லாம் ஒன்றிணைப்பதுதான் என்னுடைய வேலை. அவர்களையெல்லாம் நான் ஒன்றிணைப்பேன். 2024 -ல் ஆட்சியமைப்போம், அதை நோக்கித்தான் என்னுடைய பயணம் உள்ளது அதிமுக ஒன்றாக விடாமல் சிலர் தடுக்கிறார்கள். அதிமுக பிரிந்தால் லாபம் திமுகவுக்கே. எனவே இதன் பின்னணியில் திமுக தான் இருக்கிறது. இதற்கு டெல்லி காரணமில்லை.' என்றார். இதுவே தற்போதைய அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது. காலம்சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாயத்தேவருக்கு அஞ்சலி செலுத்தத் தொடர்ந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் அவருடைய ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் வைத்தியநாதன், வெல்லமண்டி நடராஜனுடன் வந்து அஞ்சலி செலுத்திச் சென்றார்.
கருத்துகள்