ஜல்சக்தி அமைச்சகம் ஊரகப் பகுதி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர்
2024-ம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து ஊரகப்பகுதி வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக ஜல்ஜீவன் இயக்கத்தை மாநில அரசுகளுடன் இணைந்து கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அமல்படுத்தி வருகிறது.
இத்திட்டம் அறிவிக்கப்பட்ட போது 3.23 கோடி வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. கடந்த 36 மாதங்களில் மேலும் 6.70 கோடி ஊரகப்பகுதி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் 19.11 கோடி ஊரகப்பகுதி வீடுகள் உள்ள நிலையில், அதில் 9.94 கோடி (51.99%) வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை மாநிலங்களவையில் மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் திரு பிரஹலாத் சிங் பட்டேல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.ஜல்சக்தி அமைச்சகம்
ஜல்ஜீவன் இயக்கத்தின் தற்போதைய நிலை
இந்திய அரசு ஆகஸ்ட் 2019 முதல், மாநில அரசுகளுடன் இணைந்து, 2024-க்குள், கிராமப்புறத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் விநியோம் செய்வதற்காக ஜல்ஜீவன் இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது.
ஜல்ஜீவன் இயக்கம் தொடங்கப்பட்டபோது, 3.23 கோடி கிராமப்புற வீடுகள் குடிநீர் குழாய் இணைப்புகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த 35 மாதங்களில், இதுவரை மொத்தம் 6.70 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 3 2022 அன்றைய நிலவரப்படி, நாட்டிலுள்ள 19.11 கோடி கிராமப்புற குடும்பங்களில், 9.93 கோடி குடும்பத்தினர் தங்கள் வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்புகள் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் திரு.பிரஹலாத் சிங் படேல், மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்.ஜல்சக்தி அமைச்சகம்
கழிப்பறைகள் கட்டப்பட்டதற்கான செலவு
தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள 2016-17-ம் நிதியாண்டில் இருந்து 2019-20 ஆம் நிதியாண்டு வரை மத்திய அரசு ஒதுக்கிய நிதி குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2020-ம் நிதியாண்டு வரை வீடுகளில் கழிப்பறைகள் கட்டுவதற்காக மத்திய, மாநில அரசுகள் ரூ.83,863.91 கோடியை செலவழித்துள்ளன. இதில் மத்திய அரசின் பங்களிப்பு மட்டும் ரூ. 51,800 கோடியாகும்.
இத்தகவலை மாநிலங்களவையில் மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் திரு பிரஹலாத் சிங் பட்டேல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்