பார்சி புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
பார்சி புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:
“பார்சி புத்தாண்டு வாழ்த்துகள். வரும் ஆண்டு மகிழ்ச்சி, வளம், நல்ல ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!”எனத் தெரிவித்துள்ளார்.பார்சி அல்லது பார்சீ என்பது இந்தியாவின் ஜோரோஸ்ட்ரிய சமுதாயத்தினரைக் குறிப்பதாகும்.
இவர்களின் புனித நூல் அவெத்தா துவக்கத்தில் பார்சி எனும் சொல்லைப் பண்டைய பெர்சியர்களைக் குறிப்பிடுவதற்காகக் கொண்டனர். கி.பி. 10 ஆம் நூற்றாண்டின் போது ஈரானில் இஸ்லாமியர்களால் ஏற்பட்ட தொல்லைகளால் மேற்கத்திய இந்தியாவிற்குக் குடிபெயர்ந்த ஈரானிய ஜோரோஸ்ட்ரியன்ஸின் குழுவே இன்றைய பார்சியர்களின் வழித்தோன்றலாக உள்ளது. இப்பிரதேசத்தில் நீண்டகாலம் வாழ்ந்திருக்கும் பார்சிகளிடமிருந்து மிகவும் அண்மையில் இங்கு குடிபெயர்ந்த இரண்டு சிறிய இந்திய-ஜோரோஸ்ட்ரிய சமுதாயங்களை வழிநடத்தும் ஈரானியர்கள் வேறுபடுத்திக் காட்டப்படுகின்றனர்.
கருத்துகள்