இந்திய மருத்துவத்துக்கான ஃபார்மோகபிய ஆணையம்
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருந்தகக் குழுவை, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருந்தியல் ஆணையம், மற்றும் இரு மத்திய ஆய்வகங்களான இந்திய மருத்துவத்துக்கான ஃபார்மோகபிய ஆய்வகம் மற்றும் ஆகியவற்றை ஒன்றிணைத்து, ஆயுஷ் அமைச்சகத்தின்கீழ் துணை அலுவலகமாக இந்திய அரசு நிறுவியுள்ளது.
இந்த ஆணையம், ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருந்துகளின் தரத்தை உயர்த்துவதில் ஈடுபட்டுள்ளது. மேலும், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோதிக்கான ஃபார்மோகபிய ஆணையம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி அமைப்புகளுக்கான மத்திய மருந்து சோதனை மற்றும் மேல்முறையீட்டு ஆணையமாகவும் செயல்படுகிறது.
இது மீண்டும் நிறுவப்பட்ட பின்னர், ஜூலை 6 2020 முதல், இதுவரை மொத்தம் 1483 ஆயுஷ் மற்றும் ஹோமியோபதி மருந்துகளுடைய மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இந்த தகவலை மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்