முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீதியரசர் அருணா ஜெகதீசனின் விசாரணை ஆணையத்தின் அறிக்கையின் முக்கியப் பகுதிகளை ஆங்கில இதழில் வெளிவந்தது

 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்த நீதியரசர் அருணா ஜெகதீசன்


தலைமையிலான ஆணைய அறிக்கையின் முக்கியப் பகுதி :  "தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காவலர் சுடலைக்கண்ணு மட்டும் 17 ரவுண்ட்டுகள் சுட்டுள்ளார் எனவும், ஒரே காவலரை நான்கு இடங்களில் வைத்துச் சுட வைத்ததன் மூலம், அவரை அடியாள் போல காவல்துறை பயன்படுத்தியுள்ளதெனவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மறைந்து நின்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனரெனவும்

,அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை  தேவை தான். நடிகர் ரஜினிகாந்த் சொன்னது போல சமூக விரோதிகள் ஊடுருவியதற்கான ஆதாரம் ஏதுமில்லை.  பிரண்ட் லைன் இதழ் செய்தியாளர் கூறும் போது "சங்கடப்பட்டுத்தான் போனேன் மாண்புமிகு நீதியரசர் அருணா ஜெகதீசனின் விசாரணை ஆணையத்தின் அறிக்கையின் முக்கியப் பகுதிகளை ஆங்கில இதழில் வெளியிட்டதற்கு.

அவரது 30 வருட பத்திரிகை அனுபவத்தில் எத்தனையோ இரகசிய மற்றும் மந்தன விஷயங்களை அரசாங்கத் தரவுகள் மறைக்க முற்பட்டதை, அல்லது மறைத்ததை வெளிக் கொணர்ந்த பலர் உண்டு  கிடப்பில் போடப்பட்ட மற்ற  ஆணைய அறிக்கைகளையும் சிரமப்பட்டு எடுத்துத் தான் வெளிக் கொணர்ந்த நிலை. பால் கமிஷன் அறிக்கை போலபாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓரளவாயினும் நியாயம் கிடைக்க அவைகள் வழிவகை செய்யும் என்ற நம்பிக்கையில். 

தென் மாவட்ட சாதியம் மற்றும் அதைச் சார்ந்த கலவரங்களில் காவல்துறையின் அனுகுமுறைகளை நேரில் பார்த்து, பகுத்தறிந்து எழுதியிருக்கும் பலர் உண்டு. 

எத்தனையோ உயிர் இழப்புகளை கண்கூடாக கண்டுள்ளேன். மறைத்த நிகழ்வுகள் வெளிவந்த நிகழ்வு உண்டு 

அன்றைய காவல் துறையினர் சற்று ஓரளவிற்கு நிதானத்துடன் தான் இந்த மாதிரி சட்டம், ஒழுங்குப் பிரச்சனைகளை கையாண்டார்கள். துப்பாக்கி சூடு நடப்பது அரிது. உயிர் இழப்புகளும் குறைவு. தர்மம் நியாயக்கணக்கு ஓரளவிற்கு இருந்தது. காவலர் ஒருவர் ஒரு சாதியக் கலவரத்தில் mob lynching ஆன போதும், பொது மக்கள் மத்தியில் உயிரிழப்பு இல்லை. காவல் துறையின் barbaric செயல்களில் ஒன்று தாமிரபரணி அவலம். ஆனால் துப்பாக்கி பிரயோகம் இல்லை என நினைக்கிறேன். 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு என்பது not an act of reaction. It looked an act of retribution. ஒரே நாளில் 13 உயிர் சேதங்கள் என்பது நினைக்க முடியாத பயங்கரம். இதற்கு ஆணைய அறிக்கை தேவையி்ல்லை. Frontline, June, 2018, லவ் வெளிவந்த கட்டுரையே போதும். 

மீடியா reports களுக்கு legal validity பெரும்பாலும் கிடைப்பதில்லை. ஆகையால் தெரிந்தே risk எடுத்து ஒரு வருட உழைப்பிற்கு பின் கிடைத்தது தான் இந்த ஆணைய அறிக்கையின் பகுதி. அதில் முக்கியமான தகவல்களைப் படித்தவுடன் வெளி்க் கொணர்வது ஊடகவியாளரான எனது தார்மீக கடமையாய் கருதினேன்.

ஆனால் சில ஊடகத்துறையினரின் அணுகுமுறை மிகவும் மன வேதனையை அளித்துள்ளது. ஒரு டிவி debateல் பத்திரிக்கையாளர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் ஆணைய அறிக்கையில் கூறப்பட்ட மிக முக்கிய விஷயங்களைக் கருத்தில் கொள்ளாமல் இதை நம்ப முடியுமா என்றும், யார் கசிய விட்டது என்றும், Official Secrecy Act ல் இவர்கள் மீது் action எடுக்க வேண்டும் என்றும் ஒரே கூச்சல். கிஞ்சித்தும் அறிவு, அறம் இரண்டும் இல்லை. நம்பத்தன்மை இல்லை என்றால் பேச வரக் கூடாது.

ஆமாம் இருக்கட்டும். நான்தான் இளவரசன் ஆணைய அறிக்கை, சகாயம் மணல் கொள்ளை அறிக்கை கூட expose பண்ணினேன். இரண்டும் இன்று வரை அரசாங்கம் வெளியிடவில்லை. மற்றும் குண்டுப்பட்டி மற்றும் O.வெங்கடாசலம் ஆணைய அறிக்கைகளையும் நான் தான் வெளிக் கொணர்ந்தேன்.

ஏன், எல்லாவற்றிற்கும் சேர்த்து நடவடிக்கை எடுக்க recommend பண்ண வேண்டியதுதானே? " எனத் தெரிவித்துள்ளார்.   


தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி அருணா ஜெகதீசன், விசாரணையை முடித்து அரசிடம் அறிக்கையை சமர்பிக்கும் வரை அவருக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகம்  தூத்துக்குடி கடற்கரை சாலையிலுள்ள சர்க்யூட் ஹவுஸில் தான் இருந்தது.  அந்த சாலையில் செல்லும் போது அந்த பங்களாவை எப்போதும் பார்த்துவிட்டு பெருமூச்சு விட்டு தான் சிலர் கடந்து செல்வர். தூத்துக்குடி மக்களும் அப்படி தான் கடந்து செல்வர் 

"இந்தம்மா என்னத்த விசாரிச்சு, என்னைக்கு அதிகாரிகளுக்கு தண்டனை கிடைக்கும்" என்று தான் அந்த சாலையில் நடந்து செல்பவர்கள் பேசிக் கொண்டே செல்வார்கள். பொதுவாக அதிகாரிகளையும், ஆட்சியாளர்களையும் காப்பாற்றத் தான் விசாரணை ஆணையங்கள் அமைக்கப்படும். இந்தக் கமிஷன் விசாரணையை அவ்வளவு சீச்கிரம் முடிக்காது, அப்படியானால் முடித்தாலும் அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தாது என்று தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் அறிக்கையில் உள்ள தகவல்கள் காவல்துறை உயர் அதிகாரிகளை  அம்பலப்படுத்தியுள்ளது. பணியில் அன்றிருந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் வெங்கடேசன், காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திரன், தெற்கு மண்டல ஐ.ஜி ஆக இருந்த சைலேஷ் குமார் என அனைவரும் கலவரத்தைத் தடுக்கத் தவறிவிட்டார்கள் என அறிக்கையில் கூறியுள்ளார் நீதிபதி அருணா ஜெகதீசன். 


அலட்சியமாக இருந்த அதிகாரிகள் அத்தனை பேர் மீதும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைத்தது மட்டுமல்லாமல் சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேர் குடும்பத்துக்கு அரசு 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் தமிழ் நாடு அரசுக்கு பரிந்துரைத்திருக்கிறார் நீதிபதி அருணா ஜெகதீசன். 


3000 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் உள்ள சாரம்சங்கள் பற்றி Frontline இதழ் பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரன்  கட்டுரையில் பல அதிர்ச்சியான தகவல்கள் உள்ளன. காவல்துறை போராட்டக்காரர்களை எவ்வாறு ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்றது என்பதை படிக்கும் போது கையெல்லாம் நடுங்கியது. 

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரத்தை எவ்வித விருப்பு, வெறுப்பின்றி விசாரித்து, காவல்துறை உயர்அதிகாரிகளின் அலட்சியப்போக்கையும், காட்டுமிராண்டிதனத்தையும்  அம்பலப்படுத்திய நீதிபதி அருணா ஜெகதீசனுக்கு தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி கலந்த நன்றி கூற. இந்த அறிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட வேண்டும். என்று கோரிக்கை விடப்பட்டது. நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் குற்றம் சுமத்தியுள்ள அத்தனை அதிகாரிகளும் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.    துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஆணையம் ஆய்வறிக்கை வெளியானது எப்படி ? என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்புகிறார்.  ஆனால் அவர்கள் ஆட்சியின் போது தான் துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடந்தது. அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி கே. பழனிச்சாமியே டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என சொன்னது வெட்கக் கேடானது. அன்று நான் உங்கள் ஆட்சியின் மானம் உலக அளவில் அசிங்கப்பட்டுப் போனது.


அவர்கள் வீட்டில் உள்ள யாராவது ஒருவரை காவல்துறை இப்படி சுட்டுக்கொலை செய்தால் இப்படித் தான் பேசுவீர்களா? ஜெயக்குமார் அவர்களே ! உங்களை வீடு புகுந்து கைது செய்ததற்கே அச்சோ , அராஜக அரசு என புலம்பினீர்களே ! அதை மறந்து விட்டீர்களா? பதவியும் , அதிகாரமும் மக்கள் போட்ட பிச்சை என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள். என் பலதரபட்ட குரல்கள் வருகிறது.


ஆணைய அறிக்கை என்பது மக்கள் மட்டுமல்ல உலகமே தெரியத்தானே தவிர அதை மூடி மறைக்க அல்ல. உங்களது கடந்து போன ஆட்சியில் சொந்த மக்களைச் சுட்டுக்கொலை செய்தவர்களுக்கு உடந்தையாக இருந்த நீங்களும் , முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமியும் கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளிகள் தான். 

ஒரு அட்டூழியம் நடந்தால் அதை தடுக்க வேண்டும். அதை செய்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதை அரசே செய்திருக்க வேண்டும். மாறாக மூடி மறைத்தீர்கள். அதை துணிச்சலாக வெளிக்கொண்டு வந்த The Front Line உதவி ஆசிரியர் இளங்கோவன் ராஜசேகரனை அரசே பாராட்டி விருது கொடுத்திருக்க வேண்டும். 

எங்கே நம்து ரகசியம் வெளியில் அம்பலமாகி விடும் என்ற பயத்தில் உலறிக் கொட்டுகிறீர்கள். உங்க ஆட்சியில் நீங்கள் நடத்திய வஞ்ச லாவண்ய  ஊழலையும், அட்டூழியங்களையும் அம்பலப்படுத்துகிறார் இளங்கோவன் ஆம் அப்போது என்ன செய்வீர்கள்?

நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை அனைத்து மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து ஊடகங்கள், சமூக அக்கறை கொண்ட பதிவு பெற்ற பத்திரிகைகளில் வெளியிட வேண்டும். அதை சமூக ஊடகங்கள்  மக்கள் முன் சேர்க்க வேண்டும்.தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு  சம்பவம் தொடர்பாக விடுபட்ட பலர் தங்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். 

யார் சுட உத்திரவிட்டது? என்பது இதுவரை தெரியாது நாட்டு மக்கள் அறியாத நிலையில். நீதி ஒரு போதும் சாகக் கூடாது. உண்மை மக்களுக்குத் தெரிய வேண்டும். அதை தமிழ்நாடு அரசு உடனே செய்ய வேண்டும் என்பதை பலரும் கோரிக்கையாக்க  அதை ஏற்றுக் கொண்டு மாநிலத்தில் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அறிக்கை சட்டமன்ற அவையின் பார்வையில் வைக்கப்பட்டு நடவடிக்கை வரும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...