குறைந்தபட்ச ஊதியத்தின் அமலாக்கம்
1948-ம் ஆண்டு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் அம்சங்கள் மத்திய, மாநில அரசுகளால் அவற்றுக்குரிய எல்லை வரம்புகளுக்குள் அமலாக்கப்படுகின்றன. இந்த சட்டத்தை செயல்படுத்தாவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதன்படி மத்திய அரசுக்கு உட்பட்ட எல்லைவரம்புக்குள் 2021-22-ல் தொழிலாளர்களிடம் இருந்து 5297 உரிமைகோரல்கள் பெறப்பட்டு, 2102 குறித்து முடிவு செய்யப்பட்டன. இவற்றின் மூலம் 7487 தொழிலாளர்களுக்கு ரூ. 17,77,22,490 பைசல் செய்யப்பட்டது.
மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.
மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.
கருத்துகள்