சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னை தி.நகரில் உள்ள கட்சியின் மாநில குழு அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

ஒட்டு மொத்த தமிழகத்தின் கவனத்தை ஈர்த்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள அனைவருக்கும் பிணை வழங்கப்பட்டிருப்பதையும், பிணை உத்தரவில் உயர்நீதிமன்றம்
தெரிவித்திருக்கும் கருத்துக்களையும் பார்க்கும் போது பெரும் அதிர்ச்சி ஏற்படுவதோடு, ஸ்ரீமதி மரணம் தொடர்பான பிரதான வழக்கு விசாரணை நிலைகுலைந்து பாதிப்பு ஏற்படுமோ என அச்சம் உருவாகியுள்ளது.
2004 ஆம் ஆண்டு சமன்லால் எதிர் உத்திரப் பிரதேச மாநில அரசு வழக்கின் (896/2004) தீர்ப்பில், 'குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்கப்படும் போது குற்றத்தின் தன்மையை கணக்கில் கொள்ள வேண்டுமெனவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டால் அவர்களால் சாட்சியங்கள் மற்றும் தடயங்களை அழிக்க வாய்ப்புள்ளதா என்பது போன்ற அம்சங்களை கணக்கில் கொள்ள வேண்டுமெனவும்' உச்சநீதிமன்றம் தெளிவாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் 'பிணை மனுவினை விசாரிக்கும் போது வழக்குத் தொடர்பான தகுதி குறித்து விவாதிக்க கூடாது' எனவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் அழுத்தமாக கூறியுள்ளது. இத்தகைய வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகள் எதையும் இந்தப் பிணை மீதான விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்றம் பின்பற்றவில்லை என்பது மிகவும் அதிர்ச்சிகரமாக உள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக சிபிஎம் சார்பிலான மனித அமைப்பின் உண்மை கண்டறியும் குழுவினரின் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தற்கொலை இல்லை. திட்டமிட்ட கொலைக்கே வாய்ப்பு இருக்கிறது என்றும் பள்ளி நிர்வாகம் மூடி மறைக்கும் பணிகளை மட்டுமே செய்துள்ளது என்றார்.
மேலும் 'பிணை மனுவினை விசாரிக்கும் போது வழக்கு தொடர்பான தகுதி குறித்து விவாதிக்க கூடாது' எனவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் அழுத்தமாக கூறியுள்ளது. இத்தகைய வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகள் எதையும் இந்த பிணை மீதான விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்றம் பின்பற்றவில்லை என்பது மிகவும் அதிர்ச்சிகரமாக உள்ளது. கள்ளக்குறிச்சி வன்முறை கண்டிக்கத்தக்கது தான். ஆனால் ஏன் நடைபெற்றது என ஆழ்ந்து கவனிக்க வேண்டி உள்ளது. தடையங்களை அழிக்க வன்முறைக்கு பின்னால் பள்ளி நிர்வாகமே இருக்கலாம். நீதிமன்றத்தின் தீர்ப்பால் புலன் விசாரணை ஒரு மாதம் முடங்கி போய் உள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. சில தேர்வுக்கு போன மாணவர்களை கூட காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குறிப்பாக பட்டியலின மாணவர்களை சொல்லி சொல்லி கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.
மேலும் கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தற்கொலை இல்லை. திட்டமிட்ட கொலைக்கே வாய்ப்பு இருக்கிறது என்றும் பள்ளி நிர்வாகம் மூடி மறைக்கும் பணிகளை மட்டுமே செய்துள்ளது என்றார்.கள்ளக்குறிச்சி வன்முறை கண்டிக்கத்தக்கது தான். ஆனால் ஏன் நடைபெற்றது என ஆழ்ந்து கவனிக்க வேண்டி உள்ளது.
பள்ளி நிர்வாகத்தின் பிள்ளைகளை இன்னும் காவல்துறை, சிபிசிஐடி என எந்த விசாரணை அமைப்பும் விசாரிக்காதது சந்தேகம் அளிக்கிறது. கள்ளக்குறிச்சி விவரகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை முறையாக செயல்படவில்லை. ஆர்எஸ்எஸ் பாஜகவின் மேலிடம் அழுத்தத்தால் தான் காவல்துறை செயல் இழந்தது என குற்றம்சாட்டினார். தஞ்சாவூர் மைக்கேல்பட்டிக்கு சென்ற அண்ணாமலை ஏன் கள்ளக்குறிச்சி சென்று பெற்றோர்களைச் சந்திக்கவில்லை என்றும் பள்ளி நிர்வாகம் பாஜக ஆர்.எஸ்.எஸ் என்பதால் அந்த விவகாரம் தொடர்பாக அதனை கண்டு கொள்ளாமல் கல்ல நாடகம் போடுகிறார் அண்ணாமலை என்றார். ஸ்ரீமதி மரணித்து 42 நாட்களாகிய நிலையில், இது வரை எந்த சிறிய முன்னேற்றமும் காவல்துறை விசாரணையில் இல்லை. மாணவி மரணத்திற்கான சிபிசிஐடியின் விசாரணைத் தகவல் நீதிமன்றத்திற்கே தெரிவிக்கவில்லை. காவல் துறையின் கைகள் கண்ணுக்கு தெரியாத ஒரு அதிகார மையத்தால் கட்டப்பட்டு உள்ளதோ என்ற கவலை பலருக்கும் உண்டு அதைத் தான் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்
தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடி அதிகாரத்தில் தான் தமிழக காவல் துறை உள்ளது. சைலேந்திரபாபு தமிழக டிஜிபியாக உள்ளார். முதலில் பள்ளிக் கூடத்திற்கு ஆதரவாக வெளிப்படையாகவே கருத்துச் சொன்ன டிஜிபி. சைலேந்திரபாபு மக்களின் பெருங் கோபத்தை அடுத்தும், அடுத்தடுத்து வெளி வரும் தகவல்களையடுத்தும் சைலண்ட் நிலைக்கு போய்விட்டார்!
இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு 38 நாட்கள் ஆகிய நிலையில் கைதானவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தற்போது மனுவில், ”தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லை. இன்னும் தங்களை நீதிமன்ற காவலில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.எனவே தங்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று கூறியுள்ளது.
இதற்கு தமிழக காவல்துறை வழக்கறிஞரால் பதில் சொல்ல முடியவில்லை என்பது நீதிபதிக்கே கோபத்தை உருவாக்கிவிட்டது. காவல்துறை பதில் தரவில்லை காரனம் என்ன? அதன் கைகளை கட்டிப் போட்டிருக்கும் அந்ததிகார மையம் எது?
குற்றவாளிகளை விடுவிப்பது தான் காவல் துறையின் நோக்கமா..? என்பது புரியாத புதிர்.இத்தனை நாட்களில் காவல்துறை இவர்களின் மீதான குற்றத்தை ஒரளவேனும் உறுதிபடுத்தி, நீதிமன்றத்திற்கு அறிக்கை தந்திருந்தால், இந்த ஜாமீன் அவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருந்திருக்காது!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கீழ் செயல்படும் காவல்துறை இந்த வழக்கில் ஆரம்பம் முதலே சுதந்திரமாக இயங்க முடியாத நிலையில் உள்ளதை பார்த்து வருகிறோம். அதன் விளைவாக இன்று குற்றவாளிகளுக்கு பிணை விடுதலை சாத்தியமாகி உள்ளது!
மக்களின் சத்திய ஆவேசம் மிகுந்த போராட்டத்தின் விளைவால் தான் கைது செய்தனர். தற்போது மக்கள் வேறு பிரச்சினைகளில் இதை மறந்து போயிருக்கலாம்
மக்கள் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பல அப்பாவிகள் இன்னும் சிறையில்! ஆனால், உண்மையான குற்றவாளிகளுக்கோ விடுதலைக்கான வாய்ப்பு என்று மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது.
மத்தியில் ஆளும் தரப்பு தாங்கள் நினைத்தை சாதிக்கும் அரசியல் சூழல் தமிழகத்தில் அவர்களுக்கு சாத்தியமாகி வருவதன் அறிகுறியாகவே இதை அனைத்து மக்களும் பார்க்கும் நிலை.ஒரு 'ஜாமீன் மனு' விசாரிக்கும் போது, குற்றம் சாட்டப்பட்டவர், மேற்கொண்டு வழக்கு விசாரனைக்கு ஒத்துழைப்பாரா, சாட்சிகளை களைப்பாரா அல்லது தலைமறைவாகி விடுவாரா என்பதை எல்லாம் விசாரித்து, போதுமான உறுதியின் அடிப்படையில் பிணை கொடுப்பதா? வேண்டாமா? என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும்.
போதுமான நம்பிக்கை நீதிமன்றத்திற்கு ஏற்படும்போது பிணை கொடுத்து விடும். இதுதான் இதுவரை பிணை வழக்கில் கையாளப்படும் வழக்கமான நடைமுறை.
எந்த நீதிமன்றமும் வழக்கு விசாரணையில் இருக்கும்போது, குற்றப்பத்திரிக்கை (161 ஸ்டேட்மென்ட்) தாக்கல் செய்து, அதன்பேரில் வாத பிரதிவாதங்கள், சாட்சி விசாரணைகள் எல்லாம் நடைபெறுவதற்கு முன்பே..கைது செய்யப்பட்ட நபர்களின் ஜாமின் மனு மீதான விசாரணையில், குற்றவாளி அல்லது குற்றமற்றவர் என்று வழக்கு நடத்தும் கோர்ட் முடிவு செய்ய வேண்டியதை,
ஜாமின் மனு மீதான விசாரணையிலேயே தீர்ப்பை அறிவிப்பது என்பது அனுபவத்தில் நாம் கண்டவரை இதுதான் முதல்முறை.என பல மூத்த வழக்கறிஞர்களால் பேசப்படுகிறது. ஆனால் இந்த வழக்கில் அவசர அவசரமாக முந்துவது மக்களுக்கு இன்னும் ஆழமான சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது... முக்கியமாக அரசு வழக்கறிஞர் குற்றவாளிக்கு எதிராக வலுவான வாதத்தை வைக்காமல் இருந்ததும் அதிகமான சந்தேகத்தை கொண்டு வருகிறது.கள்ளக்குறிச்சி வழக்கு காவல்துறை விசாரணையில் உள்ளது! ஜிப்மர் கொடுத்தது ஒரு மருத்துவ ஒபினியன் தானே! அதை பொதுவெளியில் வைக்க மறுத்து, தன்னிச்சையாக கருத்துரைப்பதா? இது விசாரணையின் போக்கை கடுமையாக பாதிக்குமே! என் பலர் பேசுவது
‘ஆட்சியாளர்கள் தப்பு செய்தாலும், காவல்துறை தப்பு செய்தாலும் கூட கடைகோடி மனிதனின் கடைசி புகழிடமாக விளங்கி வருவது நீதித் துறை தான்! கோடானு கோடி மக்களின் அந்த மகத்தான நம்பிக்கையை ஒரு போதும் சீர்குலைந்து விடக் கூடாது’ என்பதே நம் ஆதங்கம்!
கள்ளக் குறிச்சி வழக்கில் ஆரம்பம் முதலே தப்பாட்டம் ஆடத் துவங்கி விட்டன சில அதிகார மையங்கள்! என்பதைத் தான் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கே பாலகிருஷ்ணன் தனது செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள கருத்து
ஜிப்மர் மருத்துவமனை அறிக்கை என்னவோ அதை பொது வெளியில் வைத்துவிட்டு போக வேண்டியது தானே…! அதை மறைத்துவிட்டு, ரகசியப்படுத்திக் கொண்டு
சிபிசிஐடி விசாரணை அறிக்கை இன்னும் வெளிவரவே இல்லை. அதற்குள் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை ‘நிரபராதி’ என உறுதிபடுத்த இவ்வளவு அவசரம் எதற்கு.
வரம்பு மீறிப் பேசி வழக்கை திசை திருப்ப நடக்கும் முயற்சியா என்பதே இப்போது உள்ள வினா இதற்கு விடை தமிழகத்தின் முதல்வர் கையில் அதனால் தான் அவரிடம் தற்போது மனு அளித்தனர். என்பது பலர் அறிவர்.
கருத்துகள்