ஒரு குடும்பப் பிரச்சனையை, வரதட்சணை வழக்காக மாற்றிய பெண் காவல்துறை ஆய்வாளருக்கு அபராதம்.
கோயமுத்தூர் மாவட்டம் சிறுமுகை எஸ்ஆர்எஸ் நகர் விஜயகுமார்.. ஒரு பொறியாளர். சில வருடங்களுக்கு முன் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில், 2019-ஆம் ஆண்டில் விஜயகுமார் மீது அவர் மனைவி துடியலூர் மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை பெற்றுக் கொண்ட ஆய்வாளர் மீனாம்பிகை விஜயகுமார் மீது வரதட்சணைக் கொடுமை உள்ளிட்ட பல சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை விசாரணை செய்யாமல் உடனடியாகக் கைது செய்தார். ஆனால், வழக்கு பதிவு செய்த பிறகும் விஜயகுமாரை விசாரிக்கவில்லை எனத் தெரிகிறது. விஜயகுமார் ஐந்து நாட்கள் சிறையிலடைக்கப்பட்டார். இது குறித்து மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு அளித்தார் விஜயகுமார்.அதில், 'என் மனைவி என் மீது கொடுத்த புகார் சாதாரணமானது தான்..
அது வெறும் குடும்பத் தகராறு தொடர்பானது. ஆனால் அந்தப் புகாரை முறையாக விசாரிக்காமல் என் மீது வரதட்சணைக் கொடுமை பிரிவில் தவறாக வழக்குப்பதிவு செய்து ஜெயிலிலும் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை கைதும் செய்த நிலையில் சிறையில் அடைத்தனர் அதனால், மனஉளைச்சலை ஏற்படுத்திய ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தாக்கல் செய்த மனுவை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணையம், ஆய்வாளர் மீனாம்பிகைக்கு ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்து. அந்தத் தொகையை பாதிக்கப்பட்ட விஜயகுமாருக்கு 4 வார காலத்துக்குள் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டு இதற்கான நடவடிக்கையை மாநில அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் வழங்கிய உத்தரவில் தெரிவித்துள்ளது.
கருத்துகள்