சென்னை வங்கிக் கொள்ளையர்கள் சிக்கினர்.
சென்னை அரும்பாக்கத்தில் தனியார் வங்கியில் கொள்ளை போன நகைகளில், 18 கிலோ மட்டுமே மீட்கப்பட்டதாகத் தகவல்
சென்னை அரும்பாக்கம், ஃபெட் பேங்க் ஃபாஸ்ட் கோல்டு லோன் வழங்கும் தனியார் வங்கிக்குள் புகுந்த கும்பல், ஊழியர்களைக் கத்தி முனையில் மிரட்டி வங்கியிலிருந்து 32 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் விசாரணை
சென்னை அரும்பாக்கம் நூறடிச் சாலையில் உள்ள ஃபெடரல் வங்கியில். நேற்று முன் தினம் நகைப் பிரிவில் ஊழியர்கள் பணியாற்றி கொண்டிருந்த நிலையில் இங்கு பொதுமக்களும் வங்கி சார்ந்த பணிகளுக்காக வருவதும் போவதுமாக இருந்த நிலையில் பகல் நேரத்தில் சில மர்மநபர்கள் புகுந்து அங்கிருந்த ஊழியர்களை கத்திமுனையில் கட்டிப் போட்ட பின்னர், ரூபாய் 15 கோடி மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்து சென்றனர்.
அது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் சக்திவேல் மற்றும் சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாகிய சூர்யா, முருகன் ஆகியோர் குறித்து துப்புக் கொடுத்தால் ஒரு லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படுமென டிஜிபி சைலேந்திர பாபு அறிவித்தார். மேலும் வங்கியிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தப்பட்டது. இச் சம்பவம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
அந்த வகையில் நேற்றைய தினம் முருகனின் உறவினர் பாலாஜி என்பவர் கைது செய்யப்பட்டார். அதையடுத்து செந்தில் முருகன், சந்தோஷ் ஆகியோரையும் தனிப்படைக் காவல்துறை கைது செய்தனர்
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளியைத் தேடி வந்த நிலையில் முருகன் என்ற நபரைக் கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்க நகையிலிருந்து 18 கிலோவை பறிமுதல் செய்தனர்.
மேலும் தலைமறைவான சூர்யா என்ற நபரை தனிப்படையினர் தேடி வருகிறார்கள்.
கருத்துகள்