அறிவியல் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் ஜெனரலாக முதன்முறையாக தமிழகப் பெண் நியமனம்.
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) இயக்குநர் ஜெனரலாக மூத்த விஞ்ஞானி கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். சி.எஸ்.ஐ.ஆர் இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் இந்தியாவில் செயல்பட்டுவரும் 40 தேசிய ஆய்வுக் கூடங்களில் ஒன்றாகும். அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் (CSIR) கீழ் இயங்கும் ஒரு முதன்மையான ஆய்வுக் கூடம். 1948, ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் தேதியில் தமிழ்நாட்டின் பழைய இராமநாதபுரம் ஜில்லாவில் இருந்து தற்போது பிரிக்கப்பட்டுள்ள சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி நகரில் நிறுவப்பட்டு, 1953 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதியன்று இந்தியக் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் காலத்தில் திறந்து வைக்கப்பட்டது. ஆய்வு மையம் அமையவதற்கு டாக்டர் வள்ளல் அழகப்பச் செட்டியார் 300 ஏக்கர் நிலமும், 15 இலட்ச ரூபாய் பணமும் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இந்த ஆய்வு மையம் கடந்த 50 வருடங்களில் மின் வேதியியல் தொழில்நுட்பத்தில் இந்தியாவில் மட்டுமல்லாமல் தென் கிழக்கு ஆசியாவிலும் முதன்மையான ஆராய்ச்சி மையமாகத் திகழ்கிறது. மொத்தமாக 755 காப்புரிமைகள் இவ்வாராய்ச்சி மையத்தின் மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய மின்வேதியல் ஆராய்ச்சி மையம், மெட்ராஸ் யூனிட், சென்னை தரமணி. 2. துரு நீக்குதல் ஆராய்ச்சி மையம், மண்டபம் முகம், இராமநாதபுரம். 3. தூத்துக்குடி மையம், தூத்துக்குடி ஹார்பர், தூத்துக்குடியிலும் செயல்படுகிறது. CSIR அமைப்பின் டைரக்டர் ஜெனரலாக (D.G) தன் பொறுப்பேற்கும் காரைக்குடி (CECRI) சிக்ரி இயக்குனர் டாக்டர் என்.கலைச்செல்வி திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சேர்ந்தவர்.
மத்திய அறிவியல் ஆய்வகங்கள் அடங்கிய குழுமத்தின் தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்
காரைக்குடியை சேர்ந்த விஞ்ஞானி. டாக்டர்.என்.கலைச்செல்வி காரைக்குடி சிக்ரியில் பணியில் சேர்ந்து, இயக்குனர் பொறுப்பில் உயர்த்தப்பட்டார். தற்போது அகில இந்திய அளவில் டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். சிக்ரி போன்ற 40 ஆய்வகங்களின் தலைமை பொறுப்புக்கு இந்திய அரசு இவரை நியமித்துள்ளது என்பது தான் சிறப்புத் தகவல்.
சி.எஸ்.ஐ.ஆர் இயக்குநர் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்ட மூத்த விஞ்ஞானி டாக்டர் என்.கலைச்செல்விக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, இந்தியாவின் உயர் அறிவியல் ஆய்வு நிறுவனமான சி.எஸ்.ஐ.ஆர் இந்தியாவின் முதல் பெண் தலைமை இயக்குநர் என்ற சிறப்பைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த நல்லதம்பி கலைச்செல்வி அடைந்திருக்கிறார். வாழ்த்துகள்! தமிழ்வழிக்கல்வி அறிவியலைக் கற்றுணரத் தடையாகாது என்பதற்குக் கலைச்செல்வியின் இந்தச் சாதனையே சிறந்த சான்று! எனக் கூறப்பட்டுள்ளது.அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக்குழுமம் (CSIR) 1942ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ம் நாள் டெல்லியில் நிறுவப்பட்டது. இந்த தன்னாட்சி அமைப்பு இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் அமைச்சகத்தின் பங்களிப்புடன் நாட்டின் ஆய்வு மற்றும் தொழில் வளர்ச்சியில் ஒரு முன்மாதிரி அமைப்பாகத் திகழ்கிறது. மேலும் இந்தியாவின் மாண்புமிகு பிரதம மந்திரி அவர்கள் இந்த தன்னாட்சிக் குழுமத்தின் தலைவராவார். இந்த ஆய்வுக் குழுமம் நாடு முழுவதும் 38 தனித்துவம் வாய்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களையும் 50 களப்பணி நிலையங்களையும் கொண்டுள்ளது. இதன் ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பணிகளின் துறைகளாக விண்வெளிப் பொறியியல் (Aerospace Engineering), கட்டமைப்புப் பொறியியல் (Structural Engineering), கடல் அறிவியல், மூலக்கூறு உயிரியல், உலோகவியல், வேதியியல், மின்வேதியியல், சுரங்கம், உணவு, பெட்ரோலியம், தோல், நுண்ணுயிரியல், மரபணு மற்றும் தொகுப்புயிரியல், நஞ்சாய்வு, புவியியற்பியல், உப்பு மற்றும் கடல் வேதியியல், இமாலயா உயிர்வளம், தாவரவியல் மற்றும் சுற்று சூழல் ஆகியனவற்றில் முதன்மை ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
உலகளவில் முதன்மையான அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாக சி.எஸ்.ஐ.ஆர். நிறுவனமும் திகழ்ந்துவருகிறது. இதில் 17,000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதில் நிபுணத்துவமும், அனுபவமும் வாய்ந்த சுமார் 4600 விஞ்ஞானிகள், 8000 தொழில்நுட்ப அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள், 8000 ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோர் அறிவியல் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்