இட்டா நகரில், நிர்வாகச் சீர்திருத்தங்கள் வாயிலாக குடிமக்களையும், அரசாங்கத்தையும் நெருக்கமாக இணைத்தல் குறித்த மாநாடு
பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
'நிர்வாகச் சீர்திருத்தங்கள் மூலம் குடிமக்களையும், அரசாங்கத்தையும் ஒன்றிணைத்தல்' என்ற தலைப்பிலான மாநாடு, இளம்சிந்தனையாளர்களின் தொலைநோக்குப்பார்வையுடன் நிறைவு பெற்றது
இந்திய அரசின் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் துறை, அருணாச்சலப் பிரதேச அரசுடன் இணைந்து, இட்டா நகரில், நிர்வாகச் சீர்திருத்தங்கள் வாயிலாக குடிமக்களையும், அரசாங்கத்தையும் நெருக்கமாக இணைத்தல் என்ற தலைப்பில், ஆகஸ்ட் 18,19 ஆகிய நாட்களில் இரண்டுநாள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இரண்டுநாள் மாநாட்டை, அருணாச்சலப் பிரதேச முதல்வர் திரு.பேமா கண்டுவுடன் இணைந்து, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், 2014-ம் ஆண்டுக்கு முன், மத்திய அரசின் தொலைநோக்குத் திட்டங்களால், வடகிழக்குப் பகுதிகள் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டன. ஆனால், 2014-ம் ஆண்டு மோடி அரசு பதவியேற்ற பின், நாட்டின் வளர்ச்சியடைந்த பிற பகுதிகளை போன்ற, இப்பகுதிகளையும் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பிரதமர் மோடி தலைமையின்கீழ், கடந்த 8 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களின் பணி கலாச்சாரத்தில் புரட்சிகர மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
இதன் பயனாக தற்போது, வடகிழக்கு மாநில வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியுதவி, 100 சதவீதமாக உள்ளது என்றும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திட்டங்கள் முடிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். ஒவ்வொரு மாநிலமும், அதன் தலைநகருடன் ரயில்வே மூலம் இணைக்கப்பட்டிருப்பதாகவும், 8 மாநிலங்கள் ஒவ்வொன்றும், அதற்கென விமான நிலையத்தை கொண்டுள்ளதாகவும் கூறினார். குவஹாத்தி விமான நிலையம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச விமான நிலையமாக மாறியுள்ளது என்றும் தெரிவித்தார்.
கருத்துகள்