பணியாளர்கள், பொது நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை முதன்மைச் செயலாளர்களின் ஆண்டு கூட்டத்தில் அமைச்சர் உரை
பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
இந்திய குடிமைப்பணி மற்றும் இதர அகில இந்திய பணி அதிகாரிகளை மத்திய பணிக்கு அனுப்ப வகை செய்யுமாறு மாநில அரசுகளை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கேட்டுக்கொண்டுள்ளார்
இந்திய குடிமைப்பணி மற்றும் இதர அகில இந்திய பணி அதிகாரிகளை மத்திய பணிக்கு அனுப்புவதற்கு வகை செய்யுமாறு மாநில அரசுகளை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு ஓய்வூதியம் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.
பணியாளர்கள், பொது நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை கவனிக்கும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் முதன்மை செயலாளர்களின் ஆண்டு கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், நமது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பில் மத்திய பணி என்பது ஒரு பகுதியாகும் என்று தெரிவித்தார். மேலும் மாநில அரசுகள், மத்திய அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அகில இந்திய பணி அதிகாரி என்பவர் மாநில, மத்திய அரசுகளின் முக்கியமான ஒருங்கிணைப்பாளர் என்று தெரிவித்தார்.
நடப்பு ஆண்டில், குடிமைப்பணி தேர்வு மூலம் 180 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மத்திய அரசு வெற்றிகரமாக பணிகளை ஒதுக்கியுள்ளது என்றும், மாநிலப் பணிகளில் இருந்து 434 காலியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாகவும் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். மேலாண்மை தொடர்பான வழிகாட்டுதல்களை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்
கருத்துகள்