ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி உலக சுற்றுலா தினமாகும் . நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலா முக்கியப் பங்கு வகிக்கிறது.
சுற்றுலாவில் வெற்றியாளர்கள் பயண ஏற்பாட்டாளர்கள் மற்றும் புதிய உத்திகளை கையாள்பவர்களுக்கு தமிழக சுற்றுலாத் துறை முதல் முறையாக சுற்றுலா விருதுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் முதன் முறையாக சிறந்த சுற்றுலா இயக்குனர்கள், சிறந்த சுற்றுலா வழிகாட்டிகள், அதாவது கைடுகள், சிறந்த தங்கும் விடுதிகள், சிறந்த விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட17 விருதுகளை அறிவித்து அதற்கான விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றதில் சிறந்த சுற்றுலா வழிகாட்டிக்கான விருதுக்கு ஐந்து நபர்கள் தேர்வு செய்யப்பட்டதில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் மணிகண்டன் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் விருதை வழங்கினார்.
விருது பெற்ற ஆசிரியர் மணிகண்டனை சக ஆசிரியகள், மாணவர்கள் தலைமையாசிரியர், உள்பட பலர் பாராட்டினர். விருது பெற்ற ஆசிரியர் மணிகண்டன் சுற்றுலாத்துறையில் பிரெஞ்சு மொழி பேசும் நபர்களுக்கான வழிகாட்டியாகவும், அழகப்பா பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு மொழி கற்பிக்கும் கௌரவ விரிவுரையாளராகவும், மற்றும் ஒரு தனியார் ஆங்கிலப் பள்ளியில் பிரெஞ்சு மொழி கற்பித்தல் ஆசிரியராகவுமிருந்து வருகிறார். ஆங்கிலத்தில் மொழிப் புலமை என்பதில் பலர் உள்ளனர், ஆனால் பிரஞ்சு மொழி பேசும் மக்கள் தமிழகத்தில் குறைவு அதில் விருது பெற்ற ஆசிரியர் பாராட்டுக்குரியவர். புதுச்சேரி யூனியன் பிரதேசங்களில் பிரஞ்சு மொழியில் உள்ள வாய்ப்புகள் தமிழகத்தின் கல்வி நிறுவனங்களில் இல்லை என்பதே உண்மை.. நாமும் வாழ்த்துவோம். பிரஞ்சு மொழியில்..Public Justice Magazine félicite l'auteur primé



கருத்துகள்