காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவருக்கான தேர்தலில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் அது முதன் முதலாக ஒரு சிந்தாந்த பின் புலத்தை நோக்கி நகர முயல்கிறது. ஜவகர்லால் நேருவுக்குப் பின்னர் ராகுல்காந்தி அதன் மிகச்சிறந்த வழி நடத்துனராக கிடைத்துள்ளார். ஆனால் ராகுல்காந்தி நேரடியாக மோதுவது ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் என்பதால் அவர் தாக்குப்பிடிக்க முடியுமா என்பது தான் உண்மை நிலைபாஜகவின் அரசியல் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் பிளவுகளை ஊதி விட்டு கட்சியை குழப்புகிறது என்று கட்சி நிர்வாகிகள் பேசும் நிலையில். இதை எல்லாம் மீறி இந்த அளவு காங்கிரஸ் கட்சி தாக்குப்பிடிப்பதே பெரிய விஷயம்.என்ற நிலையில்
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆகிறார் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே- ஆனால் திக்விஜய்சிங் தலைவராகியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்றாலும் மல்லிகார்ஜுன கார்கே நல்ல தலைவர்தான். நாடு முழுக்க காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளும் நெருக்கடியில் இருந்து அக்கட்சியை மீட்க மல்லிகார்ஜுன கார்கே பெரிதும் உதவுவார் என அக் கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் நம்பப்படுகிறது. ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கே என் திரிபாதியும் காங்கிரஸ்
தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்துள்ளார்.
கருத்துகள்