திருச்சிராப்பள்ளி மாநகரில் இன்று முதல் அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு பொதுக்கூட்டங்கள் , ஊர்வலங்கள் நடத்தத் தடை விதிக்கப்ட்டுள்ளது.
பொது அமைதி ,பாதுகாப்பிற்காக தமிழ்நாடு நகர காவல் சட்டம் 1888 பிரிவு 41 ன் கீழ் திருச்சிராப்பள்ளி காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டம் மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் அவர் வீட்டருகே. அப்பகுதியில் வேகமாக வந்த நபர் ஒருவர் வாசலில் நின்றவாறு அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகளை வீசினார். அதனால், அவரது வீடு தீப்பற்றி எரிந்ததையடுத்து அங்கு இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்த நபருடன் ஏறி அந்த நபர் தப்பியோடுவது தெரிகிறது.
கோயமுத்தூர், ஈரோட்டைத் தொடர்ந்து மதுரையிலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது. இதன் சிசிடிவி. காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்துகின்றனர். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பங்கள் இப்படி அதிகரித்து வரும் சூழலில் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருவாரூரில் பாட்டில்களில் பெட்ரோல் வழங்கக்கூடாதென பெட்ரோல் பங்குகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற உத்தரவை வெளியிட வேண்டும் என்றும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை அரசு தடுக்க வேண்டிய நிலையில் தமிழகத்தில் பல பகுதிகளிலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், தற்போது மதுரையில் உள்ள ஆர் எஸ் எஸ் நிர்வாகியின் வீட்டில் பெட்ரோல் குண்டு எறியப்பட்டது.
கோயமுத்தூர் மாவட்டத்தில் சித்தாபுதூர் பகுதியில் சில நாட்களுக்கு முன்பாக பாஜகவின் அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. இதேபோல், தமிழ்கத்தின் பல பகுதிகளிலும் பெட்ரோல் குண்டு வீசும் சம்பவம் நடந்துள்ளது. . மேலும், ஈரோட்டிலும், பொள்ளாச்சியிலும் பாஜக நிர்வாகிகள் வீட்டில் குண்டு வீசப்பட்டதால் அருகிலிருக்கும் சிசிடிவி கேமராக்களை சோதனை நடத்தினர். அப்போது அதில், இச் சம்பவம் பதிவானது கண்டறியப்பட்டது. காணொளியில் இரண்டு மர்ம நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து மூன்று பெட்ரோல் குண்டுகளை கார் ஷெட்டின் மீது வீசுவது பதிவாகியுள்ளது. இதனால் மற்ற பகுதிகளை தொடர்ந்து மதுரையிலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கருத்துகள்