இந்திய கடற்பகுதியில் இந்திய கடலோர காவல்படை மற்றும் குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படை இணைந்து பாகிஸ்தானிலிருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட 200 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்
இந்திய கடற்பகுதியில் இந்திய கடலோர காவல்படை மற்றும் குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படை இணைந்து பாகிஸ்தானிலிருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட சுமார் 40 கிலோ கிராம் எடையிலான 200 கோடி ரூபாய் மதிப்புடைய போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இந்திய கடலோரக் காவல் படையுடன் இணைந்து செப்டம்பர் 13-14 நள்ளிரவு அன்று சர்வதேச கடல் எல்லைப்பகுதியில் ரோந்து பணியை மேற்கொண்டது.
அப்போது, பாகிஸ்தானைச் சேர்ந்த படகு ஒன்று, சந்தேகத்திற்கிடமான வகையில் இந்திய கடற்பகுதிக்குள் உலாவியது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு ரோந்து கப்பல்கள் மூலம் அங்கு விரைந்த இந்திய கடலோர காவல் படை படகை மறித்து அதிலிருந்தவர்களை கைது செய்தனர்
இதுகுறித்த மேல் விசாரணைக்காக அப்படகு ஜக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
கருத்துகள்