முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருவனந்தபுரத்தில் 30 வது தெற்கு மண்டல கவுன்சில் கூட்டம்

மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் இன்று திருவனந்தபுரத்தில் 30 வது தெற்கு மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

2015 முதல் ரூ. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய தென் மாநிலங்களில் மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்திற்கு ரூ.4,206 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் துறைமுகங்கள் மற்றும் மீன்வளத்திற்கான அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்த 56 திட்டங்களுக்கு ரூ.2,711 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது

திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற 30வது தெற்கு மண்டல கவுன்சில் கூட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகளின் முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள், லட்சத்தீவுகளின் நிர்வாகிகள், தென் மண்டல கவுன்சில் மாநிலங்களின் தலைமைச் செயலர்கள், மத்திய உள்துறைச் செயலர், மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் செயலர், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் தமது தொடக்க உரையில், இயற்கை அழகின் உறைவிடமான கேரள மாநிலத்தின்  மக்களுக்கு 'ஓணம்' வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஓணம் கேரளாவின் முக்கிய பண்டிகை மட்டுமல்லாமல், இந்திய கலாச்சாரத்தின் முக்கியப் பண்டிகை என்றும் அவர் குறிப்பிட்டார்

இந்த ஆண்டு விடுதலையின் அமிர்தப்பெருவிழா ஆண்டாகக் கொண்டாடப்படுவதால், நாட்டின் வரலாற்றில் இந்த ஆண்டு மிகவும் முக்கியமானது என்றும் திரு அமித் ஷா கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட 'இல்லந்தோறும் மூவண்ணக்கொடி' பிரச்சாரத்தில், நாட்டு மக்கள் தங்கள் மாநில உறவுகள், ஜாதி, மதம் போன்றவற்றைக் கடந்து உயர்ந்து, தங்கள் வீடுகளில் மூவண்ணக் கொடியை ஏற்றி ஒற்றுமை மற்றும் தேசபக்திக்கு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள் என்றும் அவர் கூறினார். விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடிய அனைத்து மாநிலங்களுக்கும் திரு ஷா நன்றி தெரிவித்தார். நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், கடந்த எட்டு ஆண்டுகளில் மண்டல கவுன்சில்களின் தன்மை மாறியுள்ளது என்றும், கூட்டங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். 2014ஆம் ஆண்டுக்கு முன், மண்டல சபைகள் ஒரு வருடத்தில் சராசரியாக இரண்டு கூட்டங்களை நடத்தியது, இந்த அரசாங்கம் 2.7 ஆக அதிகரித்துள்ளது. சராசரியாக, நிலைக்குழுக்கள் 1.4 அமர்வுகளைக் கொண்டிருந்தன, இந்த அரசாங்கமும் கிட்டத்தட்ட இரு மடங்காக அதாவது, 2.75 ஆக அதிகரித்துள்ளது. 2006 முதல் 2013 வரை, மண்டல கவுன்சில் கூட்டங்களில் 104 பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன, 2014 முதல் 2022 வரை, 555 பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு, இதில் 64 சதவீத பிரச்சனைகள் பரஸ்பர ஒப்புதலுடன் தீர்க்கப்பட்டன. 9 கடலோர மாநிலங்களில் 4 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் 4 ஆகியவை தெற்கு மண்டல கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ளன, அதாவது மொத்தம் 7,500 கிமீ நீளமுள்ள கடற்கரையில், சுமார் 4,800 கிமீ இந்த மாநிலங்களின் கீழ் வருகிறது. இந்தியாவின் 12 பெரிய துறைமுகங்களில் 7 பெரிய துறைமுகங்கள் இந்தப் பகுதியில் இருப்பதாக  திரு ஷா கூறினார். இதன் மூலம், இப்போது இந்தியாவில் உள்ள மொத்தமுள்ள 3,461 மீனவக் கிராமங்களில், 1,763 மீனவக் கிராமங்கள் இந்த மண்டலத்தில் உள்ளன, மேலும் கடல்சார் பொருட்களின் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் கூறினார்.

தென்னிந்தியாவின் மீது பிரதமருக்கு சிறப்புப் பற்று உள்ளது, அதனால்தான் 2014-ல் பிரதமரான பிறகு, சாகர்மாலா திட்டத்துடன் இணைந்து கடலோரப் பகுதிகளின் மேம்பாட்டிற்காக முக்கியத் துறைமுகங்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்களைத் தொடங்கினார். இவற்றில் ரூ. 76,000 கோடி மதிப்பிலான 108 திட்டங்கள்  முடிக்கப்பட்டுள்ளன. 1,32,000 கோடி மதிப்பிலான 98 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு கடலோர மாநிலங்களுக்கு சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.2,00,000 கோடி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. கடலோர மாவட்டங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு 7,737 கோடி ரூபாய் செலவில் நீலப் புரட்சிக்காக பிரதமரின் மத்ஸ்ய சம்படா யோஜனா செயல்படுத்தப்படுகிறது. 2015 முதல்  ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய தென் மாநிலங்களில் மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதித் திட்டத்திற்கு ரூ.4,206 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் 56 திட்டங்களுக்கு மாநிலங்களில் துறைமுகங்கள் மற்றும் மீன்வளத்தின் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ. 2,711 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. 

திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற தென் மண்டல கவுன்சிலின் 30வது கூட்டத்தில் 26 பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு, 9 பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டது, 17 பிரச்னைகள் கூடுதல் பரிசீலனைக்கு ஒதுக்கப்பட்டது, இதில் ஆந்திரா மறுசீரமைப்பு தொடர்பான 9 பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் கூறினார்.  ஆந்திரா மற்றும் தெலங்கானா இடையே நிலுவையில் உள்ள பிரச்சனைகளை அந்த மாநிலங்கள் தங்களுக்குள் தீர்த்து கொள்ளுமாறு திரு ஷா வலியுறுத்தினார், இது அம்மாநில மக்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் நன்மை பயக்கும், அதோடு முழு தென் பிராந்தியத்தின் அனைத்து சுற்று வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். கவுன்சிலின் அனைத்து உறுப்பு மாநிலங்களும் நீர் பங்கீடு தொடர்பான பிரச்சனைகளுக்கு கூட்டுத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அதன் நிலைக்குழுவின் 12வது கூட்டத்தில், மொத்தம் 89 பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டதாகவும், இதில் 63 பிரச்சனைகள் பரஸ்பர ஒப்பந்தம் மூலம் தீர்க்கப்பட்டதாகவும் கூறிய திரு அமித் ஷா, இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்றார்.

பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் மத்திய, மாநிலங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான மோதல்களை சுமுகமாகத் தீர்த்து வைப்பது, மாநிலங்களுக்கு இடையே பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவது, அனைத்து மாநிலங்களுக்கும் ஆலோசனைக்காக  ஒரு மன்றத்தை உருவாக்குவது ஆகியவை மண்டல கவுன்சில் கூட்டத்தின் முக்கிய நோக்கங்கள் என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் கூறினார். பொதுவான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் மற்றும் அனைத்து பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒரு ஒத்துழைப்பு அமைப்பை அமைத்தல். நாட்டின் அனைத்துத் துறை வளர்ச்சிக்காக, பிரதமர் திரு நரேந்திர மோடி டீம் இந்தியா என்ற கருத்தை முன் வைத்துள்ளார் என்றும், அனைத்து மாநிலங்களும் இணைந்து டீம் இந்தியாவை உருவாக்குவதாகவும் திரு ஷா கூறினார்


உள்துறை அமைச்சகம் போதைப்பொருள் பிரச்சனையை மிகக் கண்டிப்புடன் ஒடுக்க முயற்சித்துள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். 12 லட்சத்திற்கும் அதிகமான மீனவர்களுக்கு கியூஆர் கோட் பிவிசி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் திரு ஷா தெரிவித்தார். இதன் மூலம் கடலோர மாநில மீனவர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பது மட்டுமின்றி கடலோர பாதுகாப்பும் பலப்படுத்தப்படும். தடய அறிவியல் ஆய்வகங்கள் அமைப்பதற்கான கொள்கை தயாரிக்கப்பட்டு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார். இதனால் தண்டனை விகிதம் அதிகரிக்கும். ஒவ்வொரு ஐந்து கிலோமீட்டருக்கும் ஒரு வங்கிக் கிளை வேண்டும் என்பதே மோடி அரசின் இலக்காகும். இதற்காக தென் மண்டல கவுன்சில் உறுப்பு நாடுகள் தங்கள் பகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஐந்து கிலோமீட்டருக்குள் வங்கி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும், கூட்டுறவு நிறுவனங்களை வலுப்படுத்தவும் முயற்சி எடுக்க வேண்டும் என்றார். வங்கிகள் கிளைகளை திறக்க வேண்டும். இது அரசின் திட்டங்களின் பலன்களை நேரடியாக பயனாளிகளுக்கு வழங்க உதவும் என்று திரு அமித் ஷா கூறினார். தக்க

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த