தமிழ் சமூகம் சார்ந்த பாஜக மூத்த தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி 83 வது பிறந்த நாள் விழா மதுரை வர்த்தக மையத்தில்
தமிழ் சமூகம் சார்ந்த பாஜக மூத்த தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி பிறந்த நாள் விழா மதுரையில் நடந்தது.உலகெல்லாம் மிகபெரும் கல்விமானாக, ஞானவானாக வலம் வந்தார். அவருக்கென தனி இடமிருந்தது
துர்வாச முனிவர் போல யாருக்கும் அடங்காமல் நியாயத்தை மட்டுமே பேசிவந்தவரை ஜனசங்கம் அடையாளம் கொடுத்து நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர் ஆக்கியது, பின் ஜனதா கட்சியில் மொரார்ஜி தேசாய் மற்றும் சரன்சிங் உடனிருந்தார்
பின்னர் ஜனதாவே அவரது வசமானது.
அதன் பின் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து இன்று மிகபெரும் சக்தி மிக்கவராக வலம் வருகிறார்
டாக்டர் சுவாமி நினைத்திருந்தால் அமெரிக்காவின் பல்கலைக்கழகப் பேராசிரியராக அமர்ந்து இன்று கமலா ஹாரிஸை விட பெரிய வராகியிருக்கலாம்
முன்னால் பிரதமர் இந்திரா காந்திக்கு அடிபணிந்திருந்தால் இங்கு சோனியா காலத்தில் பிரதமாராகியிருக்கலாம்
அட ரிசர்வ் வங்கியின் நிரந்தர ஆளுநராகியிருக்கலாம், பாஜகவில் சிலருக்கு ஜால்ரா தட்டியிருந்தால் இந்நேரம் மாநில கவர்ணர், உள்துறை அமைச்சர் என வரலாம்
ஆனால் டாக்டர் சுவாமி அப்படியல்ல, அவர் மனதில் பட்டதை மகேசனே முன் நின்றாலும் அஞ்சாமல் கூறும் சிங்கம்
அதனால் அரசியலுக்கு அவர் தேவையில்லை என்பது பலரின் முடிவு, அரசியல் அறத்துக்கு அது அப்பாற்பட்டது
ஆனால் டாக்டர் சுவாமி அறம் ஒன்றே தர்மம் என தனித்து நிற்பவர், அந்த அறமே இன்று அவருக்கு தனி அடையாளம் பெற்றுக் கொடுத்தது இன்றும் நரேந்திர மோடிக்கு எதிரான தலமை இல்லை எனும் நிலையில் டாக்டர் சுவாமி ஒருவர் தான் அவருக்கும் சில நேரம் குடைச்சல் தருகிறார்
அதுதான் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி, அதுதான் நாட்டுபற்று
டாக்டர் சுவாமியின் சாதனைகள் ஏராளமுண்டு. முன்னால் பிரதமர் இந்திரா காந்தியின் பொருளாதாரத் திட்டத்தை எதிர்த்து நின்றது முதல் அவர் ஈழத்தில் தலையிட்டு புலிகளை வளர்த்தது வரை துணிச்சலாக எதிர்த்தவர் டாக்டர் சுவாமி
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எங்கெல்லாம் தேச ஒருமைபாட்டுக்கு குந்தகம் விளையுமோ அங்கெல்லாம் டாக்டர் சுவாமி முதல் ஆளாக இருப்பார்
அப்படியே இந்துக்களின் நலன் காக்கவும் அவர் முதல் ஆளாக நின்றார் சேது சமுத்திர திட்டத்திற்கு தடை வாங்கியது, மானசரோவர் செல்ல சீன அரசிடம் அனுமதி பெற்றதென ஏராளமுண்டு
திருப்பதி கோவிலுக்குள் தங்கக் கவசம் பொருத்தும் முயற்சியை அவர் தடுத்ததிலும் விஷயமிருந்தது
கீழ் விஷாரத்தில் கொடுமைப் படுத்தப் பட்ட இந்துக்களின் நிலைமையையும் உச்சநீதிமன்றம் கொண்டு சென்று அவர்களுக்கு தனி பஞ்சாயத்து பெற்றது. அரசாங்கத்தின் பிடியிலிருந்து இந்துக் கோவில்களை மீட்க்க வழக்கு போட்டிருப்பது என்பதெல்லாம் குறிப்பிடத் தக்கவை திருப்பதி கோவில் சொத்துக்களை மத்திய தணிக்கை துறை ஆய்வு செய்ய உத்தரவு பெற்றவர்.
முல்லையாறும் பேரியாறும் சேறுமிடம் அந்த அணையில் 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்தக்கோரி 1997–ஆம் ஆண்டு டாக்டர் சுப்பிரமணிய சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த வழக்கு 9 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி அணையில் 142 அடியாக நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. அதே தீர்ப்புதான் இன்றும் 142 அடியாக உயர்த்த தடையில்லை என்று கூறப்பட்டுள்ளது.
தர்மம் எப்பொழுதும் அதர்மத்துக்கு எதிராய் ஒரு சக்தியினை நிறுத்தி அதை காத்தும் நிற்கும், அப்படி தமிழகத்தின் கட்சிகளின் அராஜகங்களை தனி மனிதனாக எதிர் கொண்டு நின்று வென்றவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி
எல்லோரும் வாய்பேச அஞ்சிய காலத்தில் ஈழ விடுதலை புலிகளை கிழித்தவர் அவர்தான், ராஜிவ்காந்தி பற்றி புலிகள் வெளியிட்ட அறிக்கையினை உன்னிப்பாக கண்டவர், அக்கொலை நடந்ததும் இதைச் செய்தது புலிகள் என தெளிவாகச் சொன்னார்
புலிகள் இந்தியாவினை நம்பி இருக்க வேண்டியவர்கள் என அவர்களை கணக்கில் எடுக்கா விசாரணை குழு பின் புலிகள் தான் குற்றவாளி என கடைசியாகக் கண்டறிந்தது
இந்த அதீதமான முன்னெச்செரிக்கைதான் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி
முன்னால் முதலமைச்சரின் மகன் முக அழகிரியினை மதுரையில் முதலில் எதிர் கொண்டவரும் அவரே, ஜெயலலிதாவின் ரவுடிகள் கூட்டத்தால் சந்திரலேகா மேல் அமிலம் ஊற்றபட்ட காலங்கலில் உயிர் ஆபத்தினை சந்தித்தவரும் அவரே
கலைஞர் மு.கருணாநிதி திமுகவின் சார்பில் அதிமுக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவினை பலவீனபடுத்த சில வலுவில்லா வழக்குகளை தொடுத்திருந்ந்தார், அதிமுக பலம் குறையவேண்டுமே அன்றி அழிய கூடாது எனும் அரசியலதில் இருந்தது
டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி தொடுத்த வலுவான வழக்கே பின் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் தண்டனை ஆனது, இல்லையேல் இன்று சசிகலா முதல்வராக வீற்றிருப்பார்
2000 ஆம் ஆண்டுக்குப் பின் டெல்லியில் மிகபெரும் ஊழலை செய்த திமுகவினை கேட்க யாருமன்று இருந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் எனும் மிகபெரிய முறைகேட்டினை டாக்டர் சுவாமி தான் வெளிக் கொண்டு வந்தார்
தமிழகம் என்றல்ல கர்நாடாகவிலும் 1988 ஆம் ஆண்டில் கர்நாடகாவில் ராமகிருஷ்ணஹெக்டெ ஆட்சியில் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்பதாக டாக்டர் சுவாமி தொடர்ந்த வழக்கில் ராமகிருஷ்ண ஹெக்டே ராஜினாமா செய்தார்
இன்றும் காங்கிரஸின் தூக்கத்தை கெடுக்கும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை ஊழல் வழக்கினை வெளிக் கொண்டு வந்தவரும் அவர்தான்
அலகாபாத் நீதிமன்றம் இராமர் கோவில் கட்ட தீர்ப்பு வழங்கியிருந்தது, அதை விரைவுபடுத்த உயர்நீதி மன்றம் சென்றவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி தான், அந்த வழக்குத்தான் வெற்றியாய் முடிந்தது
ஒரு மனிதன் ஆளும்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் எதிராக ஒரே நேரத்தில் இயங்கமுடியுமென்றால் அவனிடம் 100 சதவீதம் உண்மை இருக்க வேண்டும், அது டாக்டர் சுவாமிக்கு உண்டு
விழா வர்த்தக மையத்தில் நடக்கும் பிறந்த நாளில் ஆலோசனை சொல்லும் ராஜகுருவாகவும் அவரே விளங்குகின்றார்
மாரிதாஸ் மேல் திமுக வழக்குகளை தொடுப்பதை கண்ட டாக்டர் சுவாமி, மாரிதாஸுக்கு ஆதரவாக ஒரே ஒரு டிவிட் போட்டதில் திமுக மகா அமைதி
ஆம், சுவாமியின் பலம் அவர்களுக்கு தெரியும். அதுதான் டாக்டர் சுவாமி
இன்று 83 வயதை கடக்கும் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி , இன்னும் நீண்ட ஆயுளுடன் தேசத்துக்கு மகத்தான தொண்டுகளை செய்ய வேண்டும் என பப்ளிக் ஜஸ்டிஸ் இதழ் வாழ்த்துகிறது.
டாக்டர் சுவாமியிடம் ஒவ்வொரு இந்திய மாணவனும் கற்றுகொள்ள வேண்டிய விஷயம் நிறைய உண்டு
அவரின் கல்வி, தைரியம், நாட்டுபற்று, பதவிக்கு ஆசைபடா தன்மை, பணபற்று இல்லாமை மகா முக்கியமாக அவரின் ஒழுக்கம்
இன்றுவரை தனிபட்ட ஊழலோ இல்லை இதர விவகாரங்களிலோ சிக்காத மிகபெரிய கண்ணியவான் அவர், அதனை அவரின் எதிரிகளும் மறுக்க முடியாது
எவ்வளவு எதிர்ப்புகள்? எவ்வளவு மிரட்டல்கள்? எவ்வளவு ஆபத்தான சவால்கள்?
டாக்டர் சுவாமி அதை எப்படிக் கடந்தார்? உண்மையினை பேசுவோர் மதுரையிலும் சென்னையிலும் இன்னும் பல இடங்களில் வெட்டியும் , சுட்டும் கொல்லபடும் நாட்டில், வெடி குண்டிலோ விஷ உணவிலோ கொல்லபடும் நாட்டில் டாக்டர் சுவாமி இதுகாலமும் எப்படித் தப்பி வந்தார்?
தர்மம் அவரை காத்து வருகின்றது, அவர் காத்த உண்மைகள் சத்தியமாய் அவரை காத்து நிற்கின்றன.
டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியின் வாழ்வும் தொண்டும் ஒவ்வொரு பள்ளியிலும் போதிக்க வேண்டிய பாடம்
சமயநூல்கள் உண்மையினை சொல்லும் என்பது போல, டாக்டர் சுவாமியின் வார்த்தைகள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட உண்மை என்பதுதான் அவரின் பலம், மிகபெரும் பலம்
நாட்டுக்காய் வாழும் ஒரு தவமுனியின் அந்த வார்த்தைகள் எக்காலமும் உண்மை ஒன்றே சுமந்து வந்தன,வருகின்றன இன்னும் வரும்
ஒரு காலம் வரும், அன்று சுதந்திர இந்தியாவில் ஒரு மிகபடித்த அறிவாளி, மிகபெரிய கல்விமான் பதவிக்கும் பணத்துக்கும் ஆசைபடாமல், வளமான வாழ்க்கைக்கும் சுகமான வாழ்க்கைக்கும் ஆசைபடாமல் , உயிரை பணயம் வைத்து உண்மை பேசினான் என்றால் அப்பொழுது டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியினைத்தான் தேசம் கைகாட்டும் காமராஜர், கலாம் போலவே தமிழரின் மிகபெரும் அடையாளம் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை
சுப்பிரமணியனை மிஞ்சிய காக்கும் காக்கும் தெய்வமில்லை என பொருள்
அப்படி தேசத்தின் மிகபெரிய காவல்காரனுக்கு , ராஜ குருவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை பெரு மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றது தேசம்
வாழ்க நீ எம்மான்.. இந்நாடு பயனுற வாழ்வதற்கே.
கருத்துகள்