இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி நாளை இயக்கப்பட உள்ளது.
ஐஎன்எஸ் விக்ராந்த் இயக்கப்படுவதன் மூலம், இந்தியாவில் இரண்டு செயல்பாட்டு விமானம் தாங்கி கப்பல்கள் இருக்கும். இது நாட்டின் கடல் பாதுகாப்பை மேம்படுத்தும். கொச்சியில் உள்ள கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் செப்டம்பர் 2 ஆம் தேதி இந்தியா கடல் பாரம்பரியத்தை குறிக்கும் புதிய கடற்படைக் கொடி அறிமுகம் பிரதமரின் இன்று கேரள பயணம் பிரதமர் இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலை நாட்டுக்காக அர்ப்பணிக்கிறார். இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் இயக்கப்படுவதன் மூலம், இந்தியாவில் இரண்டு செயல்பாட்டு விமானம் தாங்கி கப்பல்கள் இருக்கும்.
இது நாட்டின் கடல் பாதுகாப்பை மேம்படுத்தும். கொச்சியிலுள்ள கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் செப்டம்பர் இரண்டாம் ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட இந்தியாவின் முதல் விமானம் தாங்கி கப்பலான 'ஐஎன்எஸ் விக்ராந்த்'ஐ அறிமுகப்படுத்துகிறார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கையில், செப்டம்பர் முதல் மற்றும் இரண்டாம் தேதிகளில் பிரதமர் கேரளா மற்றும் கர்நாடகாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில். இதற்காக தற்போது பிரதமர் கேரளாவிற்கு வருகை தந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. "பாதுகாப்புத் துறையில் தன்னிறைவுக்கான ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கும் வகையில் INS விக்ராந்த் என உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட மற்றும் கட்டப்பட்ட விமானம் தாங்கி கப்பலை பிரதமர் தொடங்குவார்
இந்திய கடற்படையின் உள்நாட்டு போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் (WDB) வடிவமைக்கப்பட்டது மற்றும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனமான கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் மூலம் கட்டப்பட்டது. விக்ராந்த் நவீன தன்னியக்க அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளது மற்றும் மிகப்பெரிய கப்பலாகும்.
இந்த நிகழ்வின் போது, காலனித்துவ காலத்தை ஒழித்து இந்திய கடல் பாரம்பரியத்தை குறிக்கும் புதிய கடற்படைக் கொடியையும் மோடி வெளியிடுகிறார். கடற்படைக் கொடி என்பது கடற்படைக் கப்பல்களின் தேசியத்தைக் குறிக்கிறது.இந்திய கடற்படையின் தற்போதைய கொடியில் ஒரு சிகப்பு சிலுவை உள்ளது இது புனித ஜார்ஜ் என்பவருடைய சிலுவை உள்ளது சிலுவையின் வலது பக்கம் மேல்பகுதியில் இந்திய கொடியும் சிலுவையின் நடுவில் சார்நாத் சிங்கங்களும் உள்ளது.இது பிரிட்டிஷ் கடற்படையின் சின்னமாகும் இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்த போதிருந்தே இந்தச் சிலுவை இந்திய கடற்படைக்கும் வந்து சேர்ந்தது சுதந்திரம் அடைந்த பிறகும் இது இன்று வரை இந்தியக் கடற்படை கொடியில் இடம்பெற்றுள்ளது.
இனி உருவாக்கப்படும் கொடியில் சோழர்கள் முதல் மராத்தியர்கள் வரையிலான மிகவும் நீண்ட இந்திய கடல்சார் பாரம்பரியத்தை குறிக்கும் வகையில் சில வண்ணங்கள் சேர்க்கப்பட்டு இந்தியக் கடற்படை சின்னம் கொண்ட கொடி ஒன்று உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த புதிய கொடியை நாளை கொச்சியில் ஐஎன்எஸ் விக்ராந்த் விமானந்தாங்கி போர் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைக்க உள்ளார் என இந்திய கடற்படை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன
கருத்துகள்