மனித உரிமைகள் நீதிமன்றம் அறிவோம்
மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டப் பிரிவு 30-ன்படி மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்கள் மனித உரிமை நீதிமன்றங்களாகவும் செயல்படுகிறது.
மனித உரிமை மீறல்களில் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட மனித உரிமை நீதிமன்றத்தில் புகார் கொடுக்கலாம்.
வாழ்க்கை, சுதந்திரம், சமத்துவம், தனி மனித கௌரவம் மற்றும் ஊழல் காரணமாக பொய் வழக்கு போடும் காரணமாக அது குறித்த மனித உரிமைகள் பாதுகாக்க மனித உரிமை பாதுகாப்பு சட்டம், பிரிவு 2(D) தெரிவிக்கிறது. இவற்றை தவிர மற்றவை தொடர்பான புகார்களை மனித உரிமை நீதிமன்றத்தில் புகார் கொடுக்கக் கூடாது.
தேசிய, மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்கள் விசாரணை செய்து வழங்கும் தீர்ப்பானது பரிந்துரைகள் மட்டுமே. இவ்வாறான பரிந்துரைகள் பல நடைமுறைப் படுத்தப்படாமல் இதுவரை நிலுவையிலுள்ளன. பல சமயங்களில் மாநில ஆணையங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிகள் காலியாகவே விடப்படுகிறது. ஆனால் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களுக்கு தவறிழைத்தவர்களுக்கு நிரூபனமானால் தண்டனை வழங்கும் அதிகாரமுண்டு.
மாவட்ட மனித உரிமை நீதிமன்றத்தில் நேரடியாகப் புகார் தாக்கல் செய்ய இயலாது. மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்டவர் தமது புகாரை தாமாகவோ அல்லது அவர் நியமிக்கும் வழக்கறிஞர் மூலமாகவோ தனி புகாராக (private Complaint) ஆகத் தயாரிக்க வேண்டும்.
இந்த புகாரானது மனித உரிமை பாதுகாப்பு சட்டத்தையும், குற்றவியல் விசாரணை முறை சட்ட பிரிவு 200 ஆகியவற்றையும் இணைத்துத் தாக்கல் செய்ய வேண்டும்.
குற்றம் நிகழ்ந்த இடம் உள்ள பகுதிக்கு ஆள்வரையுள்ள (jurisdiction) குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (Judicial Magistrate Court) தாக்கல் செய்ய வேண்டும்.
புகாரைப் பெற்ற குற்றவியல் நடுவர் நீதிமன்றம் குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் பிரிவு 202-ன்படி விசாரணை செய்து புகாரில் அடிப்படை முகாந்திரம் (Prima facie ) உள்ளதென முடிவு செய்தால் எதிரிகளுக்கு அழைப்பாணை அனுப்பி புகாரின் நகலை வழங்கி கேள்வி கேட்டு பதில் பெற்ற பின்பு விசாரணைக்கு மாவட்ட மனித உரிமை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கும்.
மனித உரிமைகள் நீதிமன்றம் அந்த வழக்கினை அமர்வு நீதிமன்ற வழக்குகள் போல விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்.
மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களில் பிரிவு 31-ன்படி அரசு குற்றஞ்சாட்டுனர்கள் பாதிக்கப்பட்ட நபருக்கு வழக்கு நடத்துவார்கள்.
கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களில் சமர்பிக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை -167 மட்டுமே
பொது மக்கள் மத்தியிலும், வழக்கறிஞர்கள் மத்தியிலும் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாமல் உள்ளதும் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட போலி மனித உரிமைகள் அமைப்புக்களின் தவறான வழிகாட்டுதல்களும் அதன் பெயரிலுள்ள அடிப்படை பயம் தான் காரணமாகும்.
சிறைத் தண்டனை வழங்க அதிகாரம் இல்லாத மனித உரிமைகள் ஆணையத்தை எளிதாக அணுகும் பாதிக்கப்பட்ட நபர்கள் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களைப் பயன்படுத்தி மனித உரிமைகள் மீறல்கள் குறித்த குற்றம் இழைத்தவர்களை சிறைச்சாலைகளுக்கும் அனுப்பி வையுங்கள் என்பதே பல நேர்மையான ஊழல் தடுப்பு நபர்கள் கூறும் அறிவுரையாகும் ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் குறித்தே சரியான புரிதல் இல்லாமல் இருக்கும் மக்கள் தான் இந்த நீதிமன்றம் குறித்து உண்மை நிலை தெரியாமல் உள்ளனர், ஆனால் சிலர் தவறுகள் செய்து தப்பிக்க சில இரக்கப்பட்ட நபர் சரி ஒரு முறை மன்னிப்போம், மீண்டும் தேவையில்லாமல் மனித உரிமைகள் மீறப்பட்டால் பார்க்கலாம் என்பதே மனித உரிமை மீறல்கள் செய்த நபர்களின் அதிர்ஷ்டம் எனலாம். தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை ஆய்வாளருக்கு ரூபாய் 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது
மனித உரிமை ஆணையம் வழங்கிய உத்தரவு
சீர்காழியில் போராட்டத் தில் ஈடுபட்ட வழக்கறிஞரைத் தாக்கிய காவல்துறை ஆய்வாளருக்கு ரூபாய்.1 லட்சம் அபராதம் விதித்தும், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது குறித்து விபரம் வருமாறு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 2017 ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவனைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் எதிர் போராட்டத்தில் ஈடுபட்டதால் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின் போது விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலாளரான வக்கீல் வேலு குபேந்திரன் என்பவரை அப்போது பணியில் இருந்த சீர்காழி காவல்துறை ஆய்வாளர் சிங்காரவேலு துரத்திச் சென்று தாக்கிக் கைது செய்தார். இந்த காட்சி அப்போது சமூக வலைதளங்களில் பரவியது. அது குறித்து
சென்னை மனித உரிமை ஆணையத்தில் செம்பனார்கோவிலைச் சேர்ந்த விஷ்ணு என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த தீர்ப்பு விவரம் வருமாறு:- பொதுவெளியில் வழக்குரைஞர் வேலுகுபேந்திரன் மீதான தாக்குதல் நடத்தப்பட் டது மனித உரிமைக்கெதிரானது. அவர் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை ஆய்வாளர் சிங்காரவேலுவுக்கு ரூபாய்.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் அந்தத் தொகையினை
தமிழ்நாடு அரசு, வழக்குரைஞர் வேலு குபேந்திரனுக்கு கொடுத்து விட்டு காவல்துறை ஆய்வாளர் சிங்காரவேலுவின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்து கொள்ள வேண்டும். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆணைய நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். காவல்துறை ஆய்வாளர் சிங்காரவேலு தற்போது பொறையாறு காவல் நிலையத்தில் பணியில் உள்ளது குறிப்பிடத் தக்கது.
கருத்துகள்