இரட்டை செயல்பாட்டு திறனுடன் கூடிய பிரம்மோஸ் ஏவுகணையை கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்து
ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தில் உள்ள இலக்கை தாக்கவல்ல இரண்டு வகை செயல்பாட்டுடன் கூடிய பிரம்மோஸ் ஏவுகணைக்காக பிஎபிஎல்-டன் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது
பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் தற்சார்புக்கு மேலும் வலுவூட்டும் வகையில், ரூபாய் 1700 கோடி மதிப்பில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தில் உள்ள இலக்கை தாக்கவல்ல இரட்டை செயல்பாட்டு திறனுடன் கூடிய பிரம்மோஸ் ஏவுகணையை கொள்முதல் செய்ய பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தனியார் நிறுவனத்துடன் (பிஎபிஎல்) பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. இரட்டை செயல்பாட்டு திறன் கொண்ட இந்த ஏவுகணைகள், இந்திய கடற்படையின் திறனை மேம்படுத்தும்.
பிரம்மோ ஏரோஸ்பேஸ் தனியார் நிறுவனம் என்பது இந்தியா-ரஷ்யா கூட்டு நிறுவனமாகும். நிலத்தில் செயல்படக் கூடியதாகவும், கப்பல் மீதான தாக்குதலை முறியடிக்கும் வகையிலும், இந்த புதிய வகை ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்