பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், எகிப்து அதிபர் திரு அப்தல் ஃபத்தாஹ் எல்-சிசி-யை கெய்ரோவில் சந்தித்தார்
பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், எகிப்து அதிபர் திரு அப்தல் ஃபத்தாஹ் எல்-சிசி-யை செப்டம்பர் 19, 2022 அன்று கெய்ரோவில் சந்தித்தார். இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ ஒத்துழைப்பை பாராட்டுவதாக கூறிய அவர், பாதுகாப்புத்துறையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது பெரிய சாதனை என்று தெரிவித்தார்.
ராணுவ ஒத்துழைப்பு, கூட்டுப்பயிற்சியில் கவனம், பாதுகாப்பு தளவாட உற்பத்தி மற்றும் தளவாடங்களின் பராமரிப்பு ஆகிய துறைகளில், மேலும், வலுவாக செயல்படுவது என்று இருதலைவர்களும் அப்போது ஒப்புக்கொண்டனர். தீவிரவாதத்திற்கு எதிராக எகிப்து மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை திரு ராஜ்நாத் சிங் பாராட்டினார். தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவும் எகிப்தும் சிறந்த நடைமுறைகளில் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று அதிபர் திரு சிசி அப்போது வலியுறுத்தினார்.
ஆப்பிரிக்க நாடுகளில், இந்தியாவில் முக்கிய வர்த்தக கூட்டாளியாக எகிப்து திகழ்கிறது என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார். இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், பெருமளவில் விரிவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.கெய்ரோவில் மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மற்றும் எகிப்து அமைச்சர் ஜெனரல் முகமது ஜாகி இருதரப்பு பேச்சுவார்த்தை
எகிப்தின் கெய்ரோவில் மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெனரல் முகமது ஜாகி ஆகியோர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
எகிப்து நாட்டிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கிற்கு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் சிறப்பான வரவேற்பு அளித்தது. அதனைத் தொடர்ந்து, இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவது, கலவரங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சி போன்றவைகள் விவாதிக்கப்பட்டது.
இந்தியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் பாதுகாப்புத் துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை குறிப்பிட்ட காலத்திற்குள் விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் இரு நாட்டு அமைச்சர்களும் தெரிவித்துள்ளனர். பிராந்திய பாதுகாப்பு மற்றும் உலக அமைதிக்காக இந்தியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் பங்களிப்பு குறித்து இருவரும் கருத்து பரிமாற்றம் செய்துகொண்டனர். கொவிட்-19 தொற்றுநோயை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் பகிர்ந்துகொண்டனர்.
மேலும் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு குறித்து இரு பாதுகாப்பு அமைச்சர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்தது.
கருத்துகள்