இராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரை நகரைச் சேர்ந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பண்முகத் திறமை கொண்டவர் ஜெ.மொஹிதீன் அப்துல் காதர் என்ற ராஜ்கிரண்.
இவருக்கு ஜீனத் பிரியா என்ற வளர்ப்பு மகளும் நையினாமுகமது என்ற மகனும் உண்டு ஜீனத் பிரியா என்பவர் நடிகர் சண்முகராஜாா வின் உடன் பிறந்த தம்பி
சின்னத்திரை நடிகரான முனீஷ்ராஜாவை காதலித்து சுயமாகத் திருமணம் செய்து கொண்டார். முனீஷ்ராஜா நாதஸ்வரம் என்ற சின்னத்திரை நாடகத்திலும் , இன்னும் சில நாடகங்களிலும் நடித்தவர். முகநூல் மூலம் பழகி இருவரும் சில ஆண்டுகளாக காதலித்துள்ளனர். இருவீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள இருவரும் காத்திருந்தனர் என்றும் .
ஆனால் இவர்களது காதலுக்கு நடிகர் ராஜ் கிரண் குடும்பத்தில் எதிர்ப்புக் கிளம்பியதாகவும் அதனால் இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிகிறது திருமணம் குறித்து இருவரும் வெளியிட்டுள்ள காணொளி காட்சியில் விளக்கமளித்துள்ளனர்.
அதில் இருவரும் காதலித்து பதிவுத் திருமணம் செய்து கொண்டதாகவும் முறைப்படி பத்திரிகை அடித்து உங்களை அழைக்கலாமென்று இருந்தோம். ஆனால் அதற்குள் செய்திகளில் தவறான தகவல்கள் பரவி வருகிறது. கூடிய விரைவில் இருவீட்டு சம்மதத்துடன் திருமணம், வரவேற்பு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ளோம். இதுவரை எங்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார் அதையடுத்து நடிகர் ராஜ்கிரண் தனது முகநூல் பக்கத்தில் ஓரு விளக்கத்தை அளித்துள்ளார். என் "மகளை", ஒரு சீரியல் நடிகர் கல்யாணம் பண்ணியிருப்பதாக ஒரு தவறான தகவல் என் பார்வைக்கு வந்தது.
என் மீது அபிமானம் கொண்டுள்ள அனைவருக்கும், உண்மையை விளக்க வேண்டியது என் கடமை. எனக்கு திப்பு சுல்தான் என்ற நைனார் முஹம்மது என்றஒரே ஒரு மகனைத்தவிர,வேறு பிள்ளைகள் கிடையாது.
இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு வளர்ப்பு மகள் இருந்தார். அவர் பெயர் பிரியா.அவர் மனம் சந்தோசப்படுவதற்காக, அவரை "வளர்ப்பு மகள்" என்று நான் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் சொந்த மகள் என்றே சொல்லி வந்தேன்.
முகநூல் மூலம் அவருடன் நட்பு ஏற்படுத்திக்கொண்ட சீரியல் நடிகர், என்னென்ன முறையிலோ அந்தப்பெண்ணை, தன் வசப்படுத்தி, கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு கொண்டு வந்திருக்கிறார். இந்த விசயம் என் காதுக்கு வந்ததும், அந்த நடிகரைப்பற்றி நான் விசாரிக்க ஆரம்பித்ததில், அவர் மகா மட்டரகமான புத்தியும், பணத்துக்காக எதையும் செய்யும் ஈனத்தனமும் கொண்டவர் என்பது, எனக்குத்தெரிய வந்தது. அவரது நோக்கம் பெண்ணை வைத்து வாழ்வதில்லை.
எனக்கு இருக்கும் நல்ல பெயரை பயன்படுத்தி, சினிமா துறையில் வாய்ப்புகளை பெறுவதும், என்னிடமிருந்து பணம் பறிப்பதும் மட்டுமே, அவரது குறிக்கோள். இதையெல்லாம் பலவிதமாக விசாரித்துத் தெரிந்து கொண்ட நான்,என் வளர்ப்பு பெண்ணிடம் சொன்னேன். அவர் காதில், நான் சொன்னது எதுவும் ஏறவில்லை. அவரைத்தான் கட்டிக்கொள்வேன் என்றும், உங்கள் பெண் என்று நானோ, அவரோ வெளியில் சொல்லிக்கொள்ள மாட்டோம் என்றும், அந்தப்பெண் சொல்லியிருந்தார். அப்பாவின் மனதை வேதனைப்படுத்தி இந்தக்கல்யாணம் வேண்டாம் என்று
என் மனைவி, அந்தப்பெண்ணிடம் அழுது மன்றாடி, எப்படியெப்படியோவெல்லாம் மடிப்பிச்சை கேட்டு, ஒரு வழியாக, " சரி, இவர் வேண்டாம், உங்கள் விருப்பப்படி நல்ல மாப்பிள்ளை பாருங்கள்" என்று சொல்ல, நாங்களும் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தோம். இந்தச் சூழ்நிலையில் தான், என் மனைவியின் தோழியான,"லட்சுமி பார்வதியை" பார்த்து விட்டு வருவதாக எங்களிடம் சொல்லிவிட்டு, இந்தப்பெண் ஆந்திரா போய் நான்கு மாதங்களாகி விட்டன,
இன்னும் எங்கள் வீட்டுக்கு திரும்பவில்லை. இந்த நிலையில் தான், இப்படி ஒரு செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது. தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, என் மனைவி தான் இதற்கெல்லாம் காரணம் என்பது போல், பொய் பொய்யாக பேசிக்கொண்டு திரிகிறது, இந்தப்பெண். இந்த விசயத்தில் நான் கோபப்பட்டபோது கூட, என்னை சமாதானப்படுத்தி, அந்தப்பெண்ணுக்காக பரிந்து பேசி இன்று வரை அந்தப் பெண்ணுக்குஉறுதுணையாக நிற்பது, என் மனைவி மட்டும் தான். பெண்பிள்ளையை வளர்க்கும் ஒவ்வொரு தாயும், தன் பிள்ளையை நல்லபடியாக வாழவைக்க வேண்டுமே என்ற அக்கறையில், எப்படியெல்லாம் கண்காணிப்பாளோ, அப்படி ஒரு தாய் நடந்து கொள்வது, வாழ்க்கை அனுபவமில்லாத சிறு பிள்ளைகளுக்கு தவறாக தோன்றுகிறது...
என் வளர்ப்புப்பெண், ஒரு தரமான மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்திருந்தால், சாதி பேதம் பார்க்காத நான், சந்தோசமாக கட்டிக்கொடுத்திருப்பேன்.
ஆனால், தரங்கெட்ட, பணத்துக்காக எதையும் செய்யத்துணியும் ஒருவனை தேர்ந்தெடுத்து, தன் வாழ்க்கையை நாசமாக்கிக்கொண்டாளே என்பது மட்டுமே என் வருத்தம்...
இதன் மூலம் நான் எல்லோரிடமும் சொல்லிக்கொள்வது, என்னவென்றால், என் பெயரைப்பயன்படுத்தி இவர்கள் உங்களை எந்த வகையிலாவது அணுகினால், அதனால் ஏற்படும் எந்தப்பிரச்சினைக்கும் நான் பொறுப்பல்ல, என்பது தான். இனிமேல் இவர்கள் இருவரில் யாராவது என் பெயரை எதற்காகப் பயன்படுத்தினாலும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். அந்த சீரியல் நடிகர், தன் குள்ளநரித்தனங்களால், என் வளர்ப்புப் பெண்ணிற்கு கணவனாகிக் கொள்ளக்கூடும். ஆனால், எந்தக்காலத்திலும் எனக்கு மருமகனாக முடியாது. இன்றிலிருந்து, இவர்கள் இருவருக்கும் என் குடும்பத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
நேர்மையும், சத்தியமுமே என்றும் வெல்லும். எனத் தெரிவித்துள்ளார். ஆனால் இப்போது அவரது உண்மையான பெற்றோர்கள் யார் என்று கூறியிருந்தால் இன்னும் சரியாக இருந்திருக்கலாம் என்பதே இங்கு பொது நீதி ! அதை இனிவரும் காலங்களில் பார்க்கலாம் , அதுவரை இந்தப் பாடல் தான் இனிமை.! "மனசுக்குள்ள நாய்களும் நரிகளும்
நால்வகைப் பேய்களும் நாட்டியமாடுதடா,
மனிதனென்னும் போர்வையிலிருக்குது
பார்வையில் நடக்குது நான் கண்ட மிருகமடா,
அட யாரும் திருந்தலையே
இதுக்காக வருந்தலையே,
நீயும் நானும் ஒன்னு இது
நெசந்தான் மனசுல என்னு
பொய்யையும் புரட்டையும் கொன்னு
இந்த பூமிய புதுசா பன்னு!.
சும்மா சொன்னத சொன்னத சொல்லவா
சொல்லாமல் என் வழி என் வழி செல்லவா
அட உன்னதா நம்புறன் நல்லவா!
உன்னால மாறுதல் வந்திடுமல்லவா?
உன் மதமா? என் மதமா? ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம். கணக்கிலொரு கூட்டலும் கழித்தலும்
வகுத்தலும் பெருக்கலும் இருப்பது உண்மையடா
கூட்டல் மட்டும் வாழ்க்கையில் நடக்குது
பாவத்தை பெருக்குது இது என்ன ஜென்மமடா
இப்ப புதுசா கணக்கெழுது
இங்கு வரட்டும் நல்ல பொழுது
அடியே ஞானத்தங்கம் இங்கு
நானொரு ஞானச்சிங்கம்
இதைப் பார்த்தா பொய்களும் ஓடும்
இரண்டு போட்டா உலகமும் மாறும்
அட பத்திரம் பத்திரம் பத்திரம்
தீர்ப்பு நாள் பக்கத்தில்
பக்கத்தில் வருது
இது சத்தியம் சத்தியம் சத்தியம்
சத்தியத்தின் சந்ததி சீக்கிரம் வருது
உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்.
அட போங்கடா போங்கடா போங்கடா
பொல்லாத பூசலும் ஏசலும் ஏனடா
கூட வாங்கடா வாங்கடா வாங்கடா
சொல்லாத சங்கதி சொல்லுறேன் கேளுடா
அந்த ஆன்டவன் தான் கிருஸ்துவனா
முஸ்லிமா இல்லை இந்துவா?
உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்" என்று பாடல் நம் காதில் ஒலித்தது....(இன்கேமராவில் ஒரு ஃபிளாஷ் பேக்) சில காலங்களுக்கு முன்னர் நடிகர் ராஜ்கிரண் கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, பத்மஜோதி என்பவரை இரண்டாவதாக தா திருமணம் செய்தவர் இரண்டாம் மனைவி மகன் தான் தற்போது உள்ளவர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவர் தனது முதல் மனைவி தன்னை நிம்மதியாக வாழ விடாமல் மிரட்டி வருவதாகவும் புகார் கூறி அப்போது இக் கருத்தைத் தெரிவித்தார் அதில் எனக்கும், என் முதல் மனைவி செல்லம்மாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், எட்டு வருடங்களுக்கு முன்பு அவரை நான் விவாகரத்து செய்து விட்டேன்
இஸ்லாமிய முறைப்படி தலாக் சொல்லி விட்டேன். இதுபற்றி கீழக்கரை பெரிய குத்பா பள்ளிவாசல் ஜமாத் கமிட்டிக்கும், கீழக்கரை டவுன் ஹாஜிக்கும் முத்தலாக் கடிதம் அனுப்பி விட்டேன். என் முன்னாள் மனைவி கீழக்கரை என்.எம்.டி. தெருவை சேர்ந்த செல்லம்மா என்பவருடன் எந்த வகையிலும் என்னால் சேர்ந்து வாழ முடியாது என்பதை கடிதத்தில் தெளிவுபடுத்தி இருக்கிறேன். திரைப்பட வினியோகம் செய்த நான் கடனிலும், கஷ்டத்திலுமிருந்த போது தான் இதெல்லாம் நடந்தது. அப்போது என் முன்னாள் மனைவி விவாகரத்தை ஏற்றுக்கொண்டு, அவரும் எனக்கு தலாக் சொல்லிவிட்டார். தவமாய் தவமிருந்து படத்துக்குப் பின்னர், சினிமாவில் நான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, கடன்களை எல்லாம் அடைத்து வருகிறேன். என் மனைவி பத்மஜோதியுடனும், மகன் நைனார் முகமதுவுடனும், நிம்மதியாக வாழ்கிறேன். அதைப் பொறுக்க முடியாமல், எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே கடந்த எட்டு வருடங்களாக என் முன்னாள் மனைவி பலவகைகளில் எனக்குத் தொந்தரவு கொடுத்து வருகிறார். என்னைப்பற்றி வதந்திகளைப் பரப்பி வருகிறார். ஏறுமுகத்திலிருக்கும் என் இமேஜைக் கெடுக்க வேண்டும் என்பதே அவருடைய ஒரே நோக்கம். சமீபகாலமாக எனக்கு கடிதம் மூலமும், போன் மூலமும் மிரட்டல்கள் வருகின்றன. இதுபற்றி நான் சென்னை நந்தம்பாக்கம் போலீசிலும், கீழக்கரை போலீசிலும் புகார் செய்துள்ளேன்" என்று கூறியிருத்த நிலையில் ராஜ்கிரண். வாழ்வில் வளர்ப்பு மகள் விஷயத்தில் இரண்டாவது பிரச்சினை என்பது இங்கு நினைவு கூர்வதால் இன்னும் சில உண்மைகள் வெளிவரலாம்.
கருத்துகள்