இந்திய தொல்பொருள் இடமான அரிக்கமேட்டில் விழிப்புணர்வு மற்றும் தூய்மை இயக்க பணிகள் நடைபெற்றது
தூய்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் தென் மண்டல அலுவலகம், புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகம், ஹோட்டல் மேலாண்மை கழகத்துடன் இணைந்து இந்திய தொல்பொருள் இடமான அரிக்கமேட்டில் விழிப்புணர்வு மற்றும் தூய்மை இயக்க பணியை செப்டம்பர் 22, 2022 காலை 6 மணிக்கு மேற்கொண்டது.
இதில் கலந்துகொண்ட 75 பங்கேற்பாளர்கள், தூய்மை மற்றும் பசுமை சுற்றுச்சூழலை உறுதி செய்ய உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். அரிக்கமேடு தொல்பொருள் இடத்தை சுற்றி காலை 6 மணி முதல் 9 மணி வரை தூய்மை பணிகள் நடைபெற்றன.
சேகரிக்கப்பட்ட குப்பைகளை, மறுசுழற்சி செய்யவும் வழிகாட்டி நெறிமுறைகளின் படி, அப்புறப்படுத்தவும் உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இப்பணியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தவேண்டாம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
கருத்துகள்