புவிவியல்,இயற்பியல்,வரலாறு பாடங்களில் தேர்வு செய்யப்பட்ட முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் விபரம் வெளியீடு
புவிவியல்,இயற்பியல்,வரலாறு பாடங்களில் தேர்வு செய்யப்பட்ட முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பட்டியலை தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெர்வானவர் பட்டியலை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்யலாம். இதற்கிடையே, முதுகலைப் பட்டதாரி ஆசிரியருக்கான கல்வித் தகுதிகளை தமிழ் வழியில் பயின்றதாக தெரிவித்த சில விண்ணப்பதாரர்கள், அதற்குரிய ஆவணங்களை முறையாகப் பதிவேற்றம் செய்யவில்லை அந்த மாணவர்கள் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை இணைய தளம் வழியாக தங்களது ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது .முன்னதாக, 2020-2021 ஆம் கல்வியாண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்,உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினிப் பயிற்றுநர் நிலை - 1 நேரடி நியமனத்திற்கான ஆள் சேர்ப்பு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
இதற்கான, விண்ணப்பங்கள் பெறப்பட்டு,2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கணினிவழித் தேர்வுகள் (Computer Based Test) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதனையடுத்து, ஆள் சேர்ப்பு அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள 17 பாடங்களுக்கு மட்டும் சான்றிதழ் சரிபாரிப்புப் பணிகள் செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட நிலையில், புவிவியல்,இயற்பியல்,வரலாறு ஆகிய மூன்று பாடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வான பட்டியலை தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட நிலையில் தேர்வாணையத்தின் trb.tn.nic.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து தேர்வுப் பட்டியலை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் ம்.
கருத்துகள்