வளரும் நாடுகளில் உள்ள சிறிய பால்பண்ணைகளை கூடுதல் உற்பத்தியுடன், நீடிக்கவல்ல, தரம் மிக்க, லாபகரமானதாக மாற்றுவதற்கான, நீடித்த முயற்சிகளை மேற்கொள்ள வழிகாட்டுமாறு சர்வதேச பால்வள கூட்டமைப்பை திரு பியூஷ் கோயல் கேட்டுக் கொண்டுள்ளார்.
வளரும் நாடுகளில் உள்ள சிறிய பால்பண்ணைகளை கூடுதல் உற்பத்தியுடன், நீடிக்கவல்ல, தரம் மிக்க, லாபகரமானதாக மாற்றுவதற்கான, நீடித்த முயற்சிகளை மேற்கொள்ள வழிகாட்டுமாறு சர்வதேச பால்வள கூட்டமைப்பை மத்திய தொழில், வர்த்தகம், நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கேட்டுக் கொண்டுள்ளார். கிரேட்டர் நொய்டாவில் இன்று சர்வதேச பால்வள கூட்டமைப்பில் உலக பால்வள உச்சிமாநாடு 2022-ல் அவர் உரையாற்றினார்.
பண்ணை அளவில் ஆராய்ச்சி மேற்கொள்ள இந்தியாவில் நிபுணர்களின் சிறிய குழு ஒன்றை நிறுவுவதற்கான சாத்தியக் கூறு பற்றி ஆய்வு செய்யுமாறு சர்வதேச பால்வள கூட்டமைப்பை வலியுறுத்திய அவர், இந்தியாவின் மாறுபட்ட பருவநிலைகளை, ஆய்வு செய்து தீர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் இது உலக தரங்களுடன் உலகளாவிய கரியமில வாயு வெளியேற்ற விதிகளையும் ஒழுங்குபடுத்த நமக்கு உதவும் என்றும் தெரிவித்தார். “தீர்வின் பகுதியாக இருக்கவே இந்தியா விரும்புகிறது, பிரச்சனையில் அல்ல என்பதை உங்களுக்கு நான் உறுதியாக கூறுவேன்” என்று அவர் குறிப்பிட்டார்.
உலகின் பால் பொருட்களின் மிகப் பெரிய உற்பத்தியாளராக இருக்கும் இந்தியாவின் நிலையை எடுத்துரைத்த அமைச்சர், உலகின் பால் உற்பத்தியில், சுமார் நான்கில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ளது என்று கூறினார். மகத்தான சர்வதேச ஈடுபாடு, அரசு, கூட்டுறவுத்துறை மற்றும் விவசாயிகளால் மேற்கொள்ளப்படும் உறுதியான முன்முயற்சி ஆகியவற்றால் வரும் ஆண்டுகளில் உலகளாவிய பால்சந்தையில் இந்தியாவின் பங்கு கணிசமான அளவு அதிகரிக்கும் என்று திரு பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார். இது இந்தியாவின் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு மாபெரும் பயனை தரும் என்றும் அவர்களுக்கு அதிகம் தேவைப்படும் கூடுதல் வருவாயை வழங்கும் என்றும் அவர்களின் குழந்தைகளுக்கு சிறந்த ஊட்டச்சத்துக்கு வழி வகுக்கும் என்றும் அவர் கூறினார். பால் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு தங்களின் குடும்ப நுகர்வுக்காக விவசாயிகளால் பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
நேர்மையான விவாதங்கள் நடந்த போது வளரும் நாடுகளின் அக்கறைகள் குறித்து வளர்ச்சி அடைந்த நாடுகளின் பல பகுதிகள் மிகவும் உணர்வுவயப்பட்டதாக இருந்தன என்றும் அவர் தெரிவித்தார். ஆஸ்திரேலிய அரசுடன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும் போது இருந்த நிலையை உதாரணமாக அவர் குறிப்பிட்டார். வளர்ச்சியடைந்த நாடுகளில் இயந்திரமயமாக்கப்பட்ட பால்வள தொழில்துறையுடன் இந்தியாவின் பால்பண்ணைத் தொழில் துறையை ஒப்பிடும் எந்த பகுப்பாய்வாக இருப்பினும், நீடிக்கவல்லதாக மாறும்போது இந்தியா வெற்றியாளராக வரும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
கருத்துகள்