தங்கக் கடத்தல் முயற்சியை முயற்சியை முறியடித்த வருவாய்ப் புலனாய்வு துறையினர், மும்பை, பாட்னா மற்றும் டெல்லியில் 65.46 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்
வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம், சுமார் 65.46 கிலோ எடையுள்ள 394 வெளிநாட்டு தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்துள்ளது. இதன் மதிப்பு ரூ.33.40 கோடி. இவை பெரும்பாலும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து கடத்தப்பட்டவை.
மிசோராமில் இருந்து ஒரு கும்பல், கொரியர் சரக்குகள் மூலம் வெளிநாட்டிலிருந்து தங்கத்தை கடத்த இருப்பதாக வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
கடத்தலை தடுக்க “Op Gold Rush” பிரிவை ஏற்படுத்திய வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம், மும்பைக்கு அனுப்பப்பட்ட சரக்குப் பெட்டகங்களை சோதனை செய்தது.
19.09.2022 அன்று பிவாண்டியில்(மகாராஷ்டிரா) சரக்குப் பெட்டகங்களை ஆய்வு செய்தபோது, சுமார் 19.93 கிலோ எடையுள்ள 120 வெளிநாட்டு தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.10இ18 கோடி.
இரண்டாவது சரக்கு பாட்னாவில் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தளவாட நிறுவத்தின் கிடங்கில் ஆய்வு நடத்தியபோது ரூ.14.50 கோடி மதிப்பீட்டிலான 28.57 கிலோ எடை கொண்ட 172 வெளிநாட்டு தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மூன்றாவதாக, தளவாட நிறுவனத்தின் டெல்லி மைய சரக்குகள் சோதனை செய்யப்பட்டது. அப்போது, ரூ.8.69 கோடி மதிப்பிலான 16.96 கிலோ எடை கொண்ட 102 வெளிநாட்டு தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த தொடர் பறிமுதல் நடவடிக்கைகள், வடகிழக்குப் பகுதியிலிருந்தும், தளவாட நிறுவனத்தின் உள்நாட்டு கொரியர் வழித்தடங்களிலும் வெளிநாட்டு தங்கத்தை இந்தியாவுக்குள் கடத்தி வர முயற்சி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இத்தகைய பறிமுதல் நடவடிக்கைகள் வருவாய்ப் புலனாய்வு பிரிவினரின் தனித்துவமான மற்றும் நவீன கடத்தல் முறைகளைக் கண்டறிந்து, அவற்றை தடுக்கும் திறனை வலுப்படுத்துகின்றன. பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் சுமார் 65.46 கிலோ எடை கொண்ட ரூ.33.40 கோடி மதிப்பிலான 394 வெளிநாட்டு தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது
கருத்துகள்