அரசியல் தாக்கங்களை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியின் யாத்திரை
ஏற்படுத்துமென்றாலும், தமிழக மக்களிடம் தற்போது ராகுல் காந்திக்கான இமேஜ் உயர்ந்து கொண்டுள்ளது. அன்று பிரியாணி செய்யும் அறந்தாங்கி அருகிலுள்ள சின்ன வீரமங்கலம் கிராமத்து வில்லேஜ் குக்கிங் சேனல் சமையல் குழுவினருடன் இளைஞர்களுடன் ஏற்கனவே வந்து சேர்ந்து சமையல் செய்த நிலையில், நேற்று முன்தினம் அந்தக் குழுவினரையும் சந்தித்து பேசினார். அந்தக் குழுவிலிருந்த ஒரு வயதான தாத்தாவை, கையில் பிடித்தவாறு உற்சாகமாகப் பேசிய ராகுல்காந்தி நீண்ட தூரம் நடந்து சென்றது மிகுந்த கவனத்தை ஈர்த்தார்.
காங்கிரஸ் தொண்டர்கள், ராகுல்காந்திக்கு இளநீர் வெட்டித் தந்து அன்பை வெளிப்படுத்தினார்கள்.. அதற்கடுத்து திடீரென ஒரு தேனீர் கடையில் நுழைந்த ராகுல்காந்தி. தோட்டியோடு அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் உள்ள தேனீர் கடையில் டீ குடித்தார். அப்போது அங்கிருந்த லீலா என்ற பெண்மணி, இஞ்சி டீ தயாரித்துத் தந்தார்.
பிறகு, ஊராட்சிகளின் செயல்பாடுகளை அங்கிருந்தோரிடம் கேட்டறிந்தார். அப்போது தென்காசி மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.பி.டி. மகேந்திரன், ராகுல்காந்தி காலில் விழுந்து ஆசி பெற முயன்றதை பார்த்ததும் பதறிப்போய் தடுத்த ராகுல்காந்தி, "இப்படியெல்லாம் யாரும் காலில் விழக் கூடாது. யாரையும் பெரிய ஆள் என்று பஞ்சாயத்து தலைவர் நினைத்தால், அதிகாரம் எப்படி உங்கள் கைக்கு வந்து சேரும்?"
என்று வினா எழுப்பினார் இந்திய வரலாற்றைப் பொறுத்தவரை, பெரும் தலைவர்களுக்கு பெரிதும் கைகொடுத்து உதவியுள்ளது இதுபோன்ற யாத்திரைகள் தான். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் தண்டி யாத்திரை முதல் லால் கிஷன் அத்வானியின் ரத யாத்திரை வரை இந்தியா ஏராளமான யாத்திரைகளைக் கண்டுள்ளது இந்த நாடு.. ஏன், நமது தமிழகத்தல் இந்தி திணிப்பு முதல் வைகோவின் பாதயாத்திரை வரை, அழியாத தடங்களை பதித்துச் சென்றுள்ளதன் மூலம் மக்களுடன் நேரடியாக நெருங்கிச் சந்திப்பதால் ஏற்படக்கூடிய தாக்கங்கள், அதிர்வுகள் அதிகம்.. அந்தவகையில், ராகுலுக்கு இந்த யாத்திரை கைகொடுக்கும் என்கிறார்கள்.
அரசியலில் பார்வையாளர்கள் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் தேர்தல் வர உள்ள நிலையில், காங்கிரஸ் பக்கம் கவனத்தை ஈர்க்க இத்தகைய பெரிய அளவிலான நடைபயணங்கள் முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது. தமிழக நடைபயணத்தின் முதல்பகுதி வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. இது வரை இரண்டாம் நாள் நடைபயணத்தில் அவரோடு சற்றேக்குறைய் 30,000 பேர் உடன் நடந்தார்கள்..தமிழகம் அவர் மீது காட்டிய மகத்தான அன்பிற்கும்,ஆதரவிற்கும் அது உதாரணமாக அமைந்தது.
அதில் கன்னியாகுமரி மாவட்ட நாடாளுமன்ற ,சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ,வட்டாரத் தலைவர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகள், அனைத்து மாவட்ட ,வட்டாரதலைவர்கள் ,மாநில நிர்வாகிகள்,இளைஞர்,மகளிர் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் வந்து பின்னர் சென்றனர்.
சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு தெண்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் IPS, கன்னியாகுமரி எஸ்.பி .ஹரி கிரண் பிரசாத் IPS,தேனி எஸ் பி பிரவீண் டோங்கரே IPS,பாதுகாப்பு பிரிவு எஸ்.பி . சுவாமி நாதன் IPS ஆகியோர் எந்த அசம்பாவிதம் இல்லாமல் நடக்க காரணமாக இருந்தது
நாடு நெருக்கடியான காலகட்டத்தில் தவிக்கும் போது, ஒன்றிணைந்து செயல்படுவதின் அவசியத்தை காங் கட்சி தற்போது உணர்ந்து நடைபோடத் துவங்கிய நிலையில் ராகுல்காந்தியைச் சந்தித்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்த விவசாய சங்க நிர்வாகிகளும் அடங்கும்.
கருத்துகள்