இராஜஸ்தானில் 90 சதவிகித சட்டமன்ற உறுப்பினர்கள் விரும்பாத சச்சின் பைலட்டை முதல்வராக்கத் துடிக்கிறது
டெல்லி காங்கிரஸ் தலைமை ஜனநாயகப் பூர்வமாக தங்களின் சட்டமன்றக் கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமை காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மறுக்கபடுமானால், அங்கு காங்கிரஸ் கட்சி காலியாவதை யாராலும் தடுக்க முடியாது காங்கிரஸ்
அகில இந்தியத் தலைவராக பதவியை இராஜினாமா செய்தார்
அசோக்கெலாட் சாதாரண நிலைமையில் இருந்து படிப்படியாக கடும் உழைப்பையும், திறமையையும் வெளிப்படுத்தி உயர்ந்தவர். அசோக்கெலாட்டை வீழ்த்திய பிறகு, தான் முதல்வராக வேண்டும் என்ற கனவில் அவசரப்பட்டு 17 சட்ட மன்ற உறுப்பினர்களுடன் காங்கிரசிலிருந்து விலகி, பாரதிய ஜனதா கட்சியுடன் பேரம் பேசி, அது படியாத காரணத்தால் மீண்டும் காங்கிரஸுக்குள் வந்தவர் தான் இந்த சச்சின் பைலட்!
மீண்டும், மீண்டும் ஒரே தவறை திரும்பவும் செய்துள்ளது காங்கிரஸ் கட்சியின் தலைமை! ‘ஜனநாயக முறைப்படி ஒரு மாநிலத்தில் அதிக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றவர் தான் காங்கிரஸ் கட்சியில் முதல்வராக முடியாது. தலைமைக்கு வேண்டியவர் தான் முதல்வராக முடியும்’ என்பதை எழுதப்படாத சட்ட விதியாக காங்கிரஸ் கட்சியின் தலைமை கடைபிடிப்பது தான் அதன் மிகப் பெரிய வீழ்ச்சிக்கு வித்திடுகிறது.
இந்தியாவில் பல மாநிலங்களில் அங்கு மக்கள் செல்வாக்குப் பெற்று வளர்ந்த தலைவர்களை புறக்கணித்துவிட்டு, டெல்லியால் திணிக்கப்பட்ட தலைவர்களால் தான் காங்கிரஸ் கட்சி இப்போது வீழ்ச்சி கண்டுள்ளது..சச்சின் பைலட் உத்திர பிரதேச சஹாரான்பூரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜேஷ் பைலட்டின் மகனாவார் புது தில்லியில் பால பாரதி விமானப் படை பள்ளியில் கல்வி கற்றார். தில்லி பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பி.ஏ. ஹானர்ஸ் பட்டம் பெற்றார். பிறகு அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்ட்டன் வர்த்தகப் பள்ளியில் முதுகலை வணிக மேலாண்மைப் பட்டம் பெற்றார். அவரது தந்தை ராஜேஷ் பைலட் 2000 ஆம் ஆண்டு சாலை விபத்தில் மரணமடைந்ததைத் தொடர்ந்து இந்தியா திரும்பிய சச்சின் பைலட் தனது தந்தையின் பிறந்த நாளான பிப்ரவரி 10, 2002 ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து 2004 நாடாளுமன்றத் தேர்தலில் ராஜஸ்தான் மாநிலம் தவுசா நாடாளுமன்ற தொகுதியிலிருந்து மக்களவைக்கு 1.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அஜ்மீர் தொகுதியிலிருந்து 15 வது நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்வானார். தொகுதி மறு சீரமைப்பினால் இவர் தொகுதி மாற நேரிட்டது. 2009 ஆம் ஆண்டில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் கிரண் மகேஸ்வரியை 76,000 க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பிறகு 2014 ஆம் ஆண்டு மீண்டும் அஜ்மீர் தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற இராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் டோங்க் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்
26 வயதில் நாடாளுமன்ற உறுப்பினரான சச்சின் பைலட் இந்தியாவில் மிகக் குறைந்த வயதில் நாடாளுமன்ற உறுப்பினரானவராவார். இவர் உள்துறை விவகாரங்களைக் கவனிக்கும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். மேலும் இவர் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் ஆலோசனைக்குழுவின் உறுப்பினராகவும் செயல்பட்டார். மேலும் மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
இவர் இந்திய அமைச்சராக பதவி வகித்த முதல் இராணுவ அதிகாரியாகும்இராஜஸ்தானிலும் நடந்துகொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு வரப்போகும் காரணமாக முதல்வர் பதவியை இராஜினாமா செய்த அசோக் கெலாட்டுக்கும் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையிலான அதிகார போட்டி மோதலால் பல அரசியல் அவலங்கள் அரங்கேற்றம்.
ராஜஸ்தானில் 2018-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்ததிலிருந்தே அங்கு உள்கட்சி மோதல் நடைபெறுகிறது. இளைஞரான சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவி வழங்கப்படுமென்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்சியின் சீனியரான அசோக் கெலாட் முதல்வரானார். சச்சின் பைலட்டுக்கு துணை முதல்வர் பதவி தரப்பட்டது. மேலும், ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியும் சச்சின் பைலட்டிடம் தான் இருந்தது. ஆனாலும், முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் அவர் இருந்தார். அதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே நடந்துவந்த அதிகார மோதல் சமீபத்தில் உச்சத்தை அடைந்தது. தம்மை கெலாட் ஓரம்கட்டுகிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து ஆட்சிக்கு எதிராக கலகம் செய்ய ஆரம்பித்தார் சச்சின் பைலட்.
இந்த நிலையில், சச்சின் பைலட்டை தன் பக்கம் வளைத்துப்போட்டு குதிரை பேரம் மூலம் ஆட்சியைப் பிடிப்பதற்கு பா.ஜ.க முயற்சி செய்கிறது என்று காங்கிரஸ் தரப்பு குற்றம் சாட்டுகிறது. ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 சட்டமன்ற உறுப்பினர் இடங்களில் 107 இடங்களில் 2018-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. தமக்கு 20 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக சச்சின் பைலட் கூறிவருகிறார். பா.ஜ.க-வின் பேச்சைக் கேட்டுக்கொண்டு காங்கிரஸ் கட்சியின் ஆட்சியைக் கவிழ்க்க சச்சின் முயற்சி செய்வதாகக் குற்றம்சாட்டி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தக் கூட்டத்தில் சச்சின் பைலட் உட்பட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. எனவே, கொறடா உத்தரவை அவர்கள் மீறியதாகக் குற்றம்சாட்டப்பட்டது. சச்சினிடமிருந்து துணை முதல்வர் பதவியையும் மற்ற 17 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியையும் பறிப்பது தொடர்பாக சபாநாயகர் ஜோஷி நோட்டீஸ் அனுப்பினார்
சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக சச்சின் பைலட் உள்ளிட்ட 19 பேரும் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த உயர் நீதிமன்றம் சச்சின் உட்பட 19 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சபாநாயகர் மேல்முறையீடு செய்தார். அதற்கான மனுவில், "சச்சின் பைலட் உள்ளிட்ட 19 பேருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரத்தில், உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது. அதற்கான அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்குக் கிடையாது. எனவே, உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கத் தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர். இந்த மனு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர்.கவாய், கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
சபாநாயகர் ஜோஷி தரப்பில் கபில் சிபல் ஆஜரானார். அவர், "பதவிநீக்கம் விவகாரத்தில் சபாநாயகர் எடுக்கும் முடிவே இறுதியானது. சச்சின் பைலட் உள்ளிட்டோரைக் காப்பாற்றுவதற்காக, ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதை ஏற்க முடியாது. மாநில ஆளுநர் அரசியல் சாசனத்தின்படி செயல்பட வேண்டும். ஆனால், அவர் மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்படுகிறார்" என்று குற்றம்சாட்டினார். மேலும், "பதவிநீக்கம் தொடர்பான விவகாரத்தில் சட்டமன்ற சபாநாயகர் எடுக்கும் முடிவில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை மீறுவதாக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு அமைந்துள்ளது" என்றும் கபில் சிபல் குற்றம்சாட்டினார்.
ஏற்கெனவே மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு பா.ஜ.க ஆட்சிக்கு வந்துள்ளது. ராஜஸ்தானைப் போலவே மத்தியப் பிரதேசத்திலும் 2018-ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. இளம் தலைவரான ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு முதல்வர் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மூத்த தலைவரான கமல்நாத் முதல்வராக்கப்பட்டார். அதனால் ஏற்பட்ட மோதல்களால் தான், ஜோதிராதித்யா சிந்தியாவின் துணையுடன் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை பா.ஜ.க கவிழ்த்தது. அதே கதைதான் இராஜஸ்தானில் தற்போது நடந்துகொண்டிருக்கிறது. ராஜஸ்தானில் அசோக் கெலாட் ஆட்சிக்கு எதிராகக் கலகம் செய்த சச்சின் பைலட், உடனடியாக பா.ஜ.க-வில் சேர்ந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பா.ஜ.க-வில் நான் சேரமாட்டேன் என்று அவர் அறிவித்ததுடன், தமது தரப்புக்கு எதிரான தகுதி நீக்க நோட்டீஸுக்கு எதிராக நீதிமன்றம் சென்றுவிட்டார் சச்சின் பைலட்.
ஜோதிராதித்யா சிந்தியா
தற்போது, சட்டமன்றத்தை உடனே கூட்டுங்கள் என்று குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி தரப்பு. ஆனால், அதற்கு மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா முட்டுக்கட்டை போட்டுவருகிறார். சட்டப்பேரவையைக் கூட்டுவதற்கு வேண்டுமென்றே ஆளுநர் தாமதம் செய்கிறார் என்றும், மத்திய அரசுத் தரப்பிலிருந்து ஆளுநருக்கு அழுத்தம் தரப்படுகிறது என்றும், அசோக் கெலாட் தரப்பு குற்றம்சாட்டுகிறது. இந்த நிலையில், ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை முதல்வர் அசோக் கெலாட் ஜூலை மாதம் 24ஆம் தேதி சந்தித்துப் பேசினார். இந்தத் தகவல் வெளியானதால் அசோக் கெலாட் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் மாளிகையில் திரண்டனர். பிறகு, சட்டமன்றத்தை உடனடியாகக் கூட்ட வேண்டுமென்று வலியுறுத்தி ஆளுநர் மாளிகையில் அவர்கள் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
பா.ஜ.க-வின் பக்கம் சாய்வதற்குத் தயாராக இருக்கும் எம்.எல்.ஏ-க்கள் ஹரியானா மாநிலம் குருகிராம் மாவட்டத்தில் உள்ள ஐ.டி.சி கிராண்டு பாரத் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஊடகங்கள் நெருங்கவிடாமல் இருப்பதற்காக 500 மீட்டர் தூரம்வரை தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக ஜோதிராதித்யா ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களும் இதே ஹோட்டலில் தான் தங்க வைக்கப்பட்டனர். தன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை குருகிராம் ஹோட்டலில் சச்சின் பைலட் சந்தித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அங்கு 12 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள் என்றும், 30 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள் என்றும் மாறுபட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராகுல்காந்தி
இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் அதில் “அரசியல் சாசனத்தின்படி இந்த தேசம் ஆளப்படுகிறது. பெரும்பான்மை மக்கள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் அரசுகள் அமைக்கப்படுகின்றன. அப்படியிருக்கும்போது, ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு பா.ஜ.க சதிச்செயலில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் 8 கோடி ராஜஸ்தான் மக்களை பா.ஜ.க அவமதிக்கிறது. சட்டமன்றத்தை ஆளுநர் உடனடியாகக் கூட்டி, உண்மையை நாட்டு மக்கள் அறியச் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.
ஆளுநர் மாளிகை முன்பாக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஐந்து மணி நேரத்துக்கு மேலாக அமர்ந்து, `எங்களுக்கு நீதி வேண்டும்’, ‘சட்டமன்றத்தை உடனே கூட்டு’ என்ற கோஷங்களை எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்படியொரு சம்பவம் இதற்கு முன்பு அங்கு நடைபெற்றதில்லை. அரசுக்கு ஆதரவு அளிக்கும் 102 எம்.எல்.ஏ-க்களின் பட்டியல் ஆளுநரிடம் அளிக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ் சர்மா கூறினார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகள் என்று விரைவில் அறியலாம்.
கருத்துகள்