நிதி அமைச்சகம் சார்பில் “சட்டவிரோதமான கடன் செயலிகள்” குறித்த ஆலோசனைக் கூட்டம் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றதில்
முறைப்படியான வங்கி நடவடிக்கைகளுக்கு வெளியே “சட்டவிரோத கடன் செயலிகள்” தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்
இந்தக் கூட்டத்தில் நிதி அமைச்சகத்தின் நிதிப்பிரிவு செயலாளர் பொருளாதார விவகாரங்கள் பிரிவுச் செயலாளர், வருவாய் மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் (கூடுதல் பொறுப்பு) செயலாளர், நிதிச் சேவைகள் பிரிவுச் செயலாளர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலாளர், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ)யின் துணை ஆளுநர், இந்திய ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நலிந்த பிரிவு மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு அதிக வட்டி விகிதங்கள், செயல்முறை கட்டணங்கள் இல்லாமல் கடன்கள் மற்றும் நுண் கடன்கள் வழங்குவதாக சட்டவிரோத கடன் செயலிகள் பற்றிய தகவல்கள், மிரட்டுதல் மற்றும் குற்றச் செயல்கள் மூலம் முன்கூட்டியே பணத்தை திரும்ப பெறுதல் போன்ற சம்பவங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர் கவலை தெரிவித்தார். இதன் மூலம் கருப்புப் பணத்தை வெள்ளையாக்குதல், வரிஏய்ப்பு, தனிநபர் தரவுப்பாதுகாப்பை மீறுதல், ஒழுங்குப்படுத்தப்படாமல் பணம் செலுத்து முறையை தவறாகப் பயன்படுத்துதல். போலி நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் செயல்பாடின்மை போன்றவற்றுக்கான சாத்தியக் கூறுகளையும் திருமதி சீதாராமன் சுட்டிக்காட்டினார்.
இந்தப் பிரச்சனையின் சட்ட ரீதியான, நடைமுறை ரீதியான, தொழில்நுட்ப ரீதியான, அம்சங்கள் குறித்து விரிவாக விவாதித்த பின்னர் கீழ் காணும் முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
அனைத்து சட்டப்பூர்வமான செயலிகளின் “வெள்ளை அறிக்கை”யை ஆர்பிஐ தயாரிக்கும். இந்த வெள்ளை அறிக்கையில் உள்ள செயலிகளை மட்டும் ஆப் ஸ்டோர்கள் வழங்குவதை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உறுதி செய்யும்.
கருப்புப் பணத்தை வெள்ளையாக்க பயன்படுத்தும் போலிக் கணக்குகளை ஆர்பிஐ கண்காணிக்கும் செயல்படாத வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்க அது ஆய்வு செய்யும் அல்லது ரத்து செய்யும்.
குறிப்பிட்ட கால வரம்புக்குள் வர்த்தக கணக்கு வைத்திருப்போர் பதிவு பூர்த்தி செய்யப்படுவதை ஆர்பிஐ உறுதிப்படுத்தும். இதன் பிறகு பதிவு செய்யப்படாத வர்த்தக கணக்கு வைத்திருப்போர் பணம் செலுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்க போலி நிறுவனங்களை கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சகம் கண்டறிந்து அவற்றை பதிவிலிருந்து நீக்கும்.
வாடிக்கையாளர்கள், வங்கி ஊழியர்கள், சட்ட அமலாக்க முகமைகள் மற்றும் தொடர்புடையவர்களுக்கு கணினி சார்ந்த விழிப்புணர்வை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இத்தகைய சட்டவிரோத கடன் செயலிகள் செயல்படுவதை தடுப்பதற்கு அனைத்து அமைச்சகங்களும், முகமைகளும், சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.
இவை நடைமுறைப்படுத்தப்படுவதை தொடர்ச்சியாக நிதியமைச்சகம் கண்காணித்து வரும். என்பதாகும் மேலும்
டிஜிட்டல் மயமாகிவரும் உலகில் எல்லாமே ஆன்லைன் மூலம்தான் நடைபெறுகிறது. வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம், தொலைபேசி கட்டணம் எனத் தொடங்கி, வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் வரை அனைத்தும் ஆன்லைன் மூலமே கிடைப்பதால். எந்தளவுக்கு இவை நமக்குப் பயன்படுகிறதோ, அந்தளவுக்கு இந்த ஆன்லைன் பயன்பாட்டில் சில கெடுதல்களும் உள்ளன. அதூபோலவே, ஆன்லைன் ரம்மி எனும் சூதாட்டம் சிலரின் உயிரைப் பறித்தது. இதையும் அரசு தடை செய்தது. இப்போது புது அரக்கனாக ஆன்லைனில் கடன் வழங்கும் ஆப்-ஸ் தோன்றி, பலருக்கும் கடன் வழங்கி, இறுதியில் கந்துவட்டி போல அவர்களின் உயிரை எடுத்து வருகிறது. முன்பெல்லாம் லோன் வாங்க வேண்டுமென்றால் வங்கிகளுக்கு லோ- லோவென மக்கள் அலைய வேண்டியிருந்தது. ஆனால் இப்போது தேவையில்லை. இதற்கென ஏராளமான ஆப்ஸ் ஆன்லைனில் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை மொபைலில் டவுன்லோடு செய்து முகவரி, வங்கிக் கணக்கு போன்ற சில தகவல்களை அளித்தால் . உடனடியாக ஆபத்பாந்தவன் போல கடன் தொகையை வழங்கி விடுகின்றனர்.
அதற்குப் பிறகுதான் சிக்கலே தொடங்குகிறது. அவர்கள் வழங்கும் அந்தக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வாங்கிய கடனை கட்டவில்லை எனில், வட்டிக்கு வட்டி போட்டு, அது வாங்கிய அசல் கடனில் பத்து மடங்குக்கு மேலாகி, கடன் வாங்கியவரின் பாடு திண்டாட்டமாகிறது.
கடனை கட்டவில்லையென்றால் கடன் வாங்கியவரின் மொபைலிலுள்ள அவரின் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்து மிகவும் அருவெறுப்பாகவும், ஆபாசமாகவும் கடன் வாங்கியவரைப் பற்றி பேசுகின்றனர் இந்த ஆப் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள். சில ஆப் நிறுவனங்கள் அதற்கும் ஓர் படி மேலே போய் மொபைல் கேலரியில் உள்ள படங்களைத் திருடி (குறிப்பாக பெண்கள்) மார்பிங் செய்வது, பிளாக்மெயில் செய்வது என கடன்வாங்கியவர்களை கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி கடனை வசூலிக்கின்றன.
கடனை கட்ட இயலாத சிலர் அவமானம் தாங்காமல் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்களும் தற்போது தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் கூட புத்தாண்டையொட்டி, இதுதொடர்பான வழக்கில் இரண்டு சீனர்களை காவல்துறை கைது செய்து உள்ளனர். இதுபோன்ற ஆப்-களின் பின்னணியில் பெரும்பாலும் சீனர்கள் இருப்பதாகவும் தெரியவருகிறது.
-
கருத்துகள்