இராணுவ செவிலியர் பிரிவு, வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு அதியற்புதமான சேவைகளை அளிக்கிறது
இராணுவ செவிலியர் பிரிவு, வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு அதியற்புதமான சேவைகளை அளிக்கிறது
இந்தியாவில் உள்ள அமைதி மற்றும் கள நிலையங்களிலும், மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஐநாவின் அமைதி பராமரிப்பு நிலையங்களிலும் உள்ள ராணுவ செவிலியர் பிரிவு, வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு அதியற்புதமான சேவைகளை வழங்கி வருவதாக ராணுவ மருத்துவமனையின் கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் அசோக் ஜிண்டால் தெரிவித்தார். புதுதில்லியில், ராணுவ மருத்துவமனை செவிலியர் கல்லூரியின் 5-வது பிரிவு செவிலியர் பட்டதாரி மாணவிகளிடையே உரையாற்றிய அவர் இதனை தெரிவித்தார்.
லெப்டினன்ட் ஜெனரல் அசோக் ஜிண்டால், செவிலியர்களின் கண்ணியம் மற்றும் நெறிமுறைகளை நிலைநிறுத்த வேண்டும் என்றும், வளர்ந்து வரும் மருத்துவ தொழில்நுட்பங்களுடன் இணைந்திருக்க வேண்டும் என்றும் இளம் லெப்டினன்ட்களுக்கு அறிவுறுத்தினார். ராணுவ செவிலியர் பிரிவின் கூடுதல் இயக்குநர் மேஜர் ஜெனரல் ஸ்மிதா தேவ்ராணி, புதிதாக நியமிக்கப்பட்ட செவிலியர் பிரிவு அதிகாரிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். சிறந்த செவிலிய பட்டதாரிகளை சிறப்பு விருந்தினர் பாராட்டி, கௌரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மூத்த அதிகாரிகள், மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட செவிலியர் பிரிவு அதிகாரிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்