முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜேஇஇ விண்ணப்பதாரர்களுக்கு கல்வி நிறுவனம் தொடர்பான அனுபவ ரீதியான தகவல்கள் வழங்கும் ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர்கள்

ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர்கள் ஜேஇஇ விண்ணப்பதாரர்களுக்கு கல்வி நிறுவனம் தொடர்பான அனுபவ ரீதியான தகவல்கள் மற்றும் கேள்விகளுக்கான பதில்களை வழங்கி உதவுகின்றனர்.

ஐஐடி ஜேஇஇ விண்ணப்பதாரர்கள் அடுத்த சில வாரங்களில் கூட்டு இடஒதுக்கீடு ஆணையத்தால் (JoSAA) தங்கள் கிளைகளையும், ஐஐடி-களையும் தேர்வு செய்ய இருப்பதால், அனுபவ ரீதியான தகவல்களை அறிந்துகொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர்கள் எடுத்துரைக்கின்றனர்.

சென்னை,  2 செப்டம்பர் 2022: இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து, ஜேஇஇ விண்ணப்பதாரர்கள் ஐஐடி மெட்ராஸ்-ஐத் தங்கள் முதன்மை விருப்பமாகத் தேர்வு செய்வதற்கான முக்கிய காரணங்களை விளக்குகின்றனர். (இணைப்பு-Iல் விரிவாகத் தரப்பட்டுள்ளது)

'AskIIM' நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, முன்னாள் மாணவர்கள் - askIITM.com -  என்ற இணையதளத்தை உருவாக்கி உள்ளனர். இதில் ஐஐடி மெட்ராஸ் தொடர்பான கேள்விகளை மாணவர்கள் கேட்கலாம். அத்துடன் - @askiitm - என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாணவர்களின் தற்போதைய வாழ்க்கைமுறை மற்றும் முன்னாள் மாணவர்களைப் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பல்வேறு தலைசிறந்த பள்ளிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துரையாடலில் பங்கேற்று கேள்விகளைக் கேட்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதில் முதல் நிகழ்வு சென்னையில் உள்ள ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் செப்டம்பர் 2-ந் தேதி நடைபெற்றது.

இந்நிகழ்வின் சிறப்பு அம்சமாக ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, ஐஐடி மெட்ராஸ் டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்) பேராசிரியர் மகேஷ் ஆகியோர் நேரடியாக கலந்துரையாட உள்ளனர்.

ஜேஇஇ (அட்வான்ஸ்) தேர்வு முடிவுகள் 11 செப்டம்பர் 2022 அன்று அறிவிக்கப்பட்டு, மாணவர் சேர்க்கையை 12 செப்டம்பர் 2022 அன்று தொடங்கத் திட்டமிட்டு உள்ள உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது.

2000 முதல் 2009 வரை 10 ஆண்டுகள் ஐஐடி-யில் நுழையும் மாணவர்களுக்கு ஆலோசகராக இருந்துவந்த, ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி இந்த முன்முயற்சி குறித்துப் பேசுகையில்,"பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு வரும் மாணவர்கள் தங்கள் எதிர்காலத் துறையைத் தீர்மானிக்கும் அடுத்த கட்டத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது முக்கியமான ஒன்றாகும். இந்த முயற்சியின் மூலம் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களை அணுகி, அவர்களின் கேள்விகளுக்கு உரிய பதில்களை அளிப்பதன் மூலம் தங்கள் வாழ்க்கையின் முக்கிய கட்டத்தில் உதவ விரும்புகிறோம்" எனக் குறிப்பிட்டார்.

இதேபோன்ற நிகழ்ச்சிகளை 3 செப்டம்பர் 2022 அன்று ஐதராபாத்திலும், 4 செப்டம்பர் 2022 அன்று விஜயவாடாவிலும் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும், "ஐஐடி மெட்ராஸ்-ல் ஒரு நாள்" என்ற தலைப்பில் 17 செப்டம்பர் 2022 அன்று மெய்நிகர்ப் பயணம் ஒன்றை நடத்திக் காட்டவும் ஏற்பாடு  செய்யப்பட்டு உள்ளது.

இப்போது ஏன்?

யுனிலீவர் நிறுவனத்தில் தமது பணியைத் தொடங்கி, தொடர் தொழில் முனைவோராகத் திகழும் ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவரான (இயந்திரப் பொறியியல், 2008) திரு.அம்ருதாஷ் மிஸ்ரா இந்த முன்முயற்சி குறித்துப் பேசும்போது,"28 ஆகஸ்ட் 2022 அன்று நடைபெற்ற இந்த ஆண்டுக்கான இறுதிக்கட்ட ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வை மாணவர்கள் எழுதி கடைசி தடைக்கல்லைக் கடந்துள்ளனர். எந்த ஐஐடி-யில் சேர்வது, எந்தப் பிரிவைத் தேர்வு செய்வது போன்ற சிந்தனைகளில் மாணவர்கள் ஆழ்ந்திருப்பார்கள் என்பதை சொந்த அனுபவத்தின் மூலம் எனக்குத் தெரியும்" எனத் தெரிவித்தார்.

ஐஐடி மெட்ராஸ் மற்றொரு முன்னாள் மாணவரான (சிவில் என்ஜினியரிங், 2008) திரு. அம்ரித் வத்சா கூறுகையில்,"ஐஐடி மெட்ராஸ் பற்றி மாணவர்கள் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லாத பல்வேறு விஷயங்கள் உள்ளன.உதாரணமாக, மாணவர்கள் தங்கள் படிப்புகளில் 50 விழுக்காடு அளவுக்கு எந்தத் துறையை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். அதாவது மாணவர்கள் சுயமாகவே தங்கள் கற்றலை வடிவமைத்துக் கொள்ள முடியும். ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவதில் கவனத்தை செலுத்தவே நாம் விரும்புகிறோம். ஏதர் (Ather)  போன்ற நிறுவனங்கள் இக்கல்வி நிறுவன வளாகத்தில் தொழில் தொடங்க வழிவகுக்கப்பட்டு உள்ளது" என்றார்.

திரு.அம்ரித் வத்சா பி.டபிள்யூ.சி நிறுவனத்தில் உள்கட்டமைப்பு ஆலோசகராக வளாக அயலகப் பணியில் சேர்ந்து, தற்போது திரைப்படத் தயாரிப்புத் துறையில் ஈடுபட்டுள்ளார். திரு.அம்ரித், திரு.அம்ருதாஷ் ஆகியோர் தற்போது மார்க்கெட்டிங் ஆலோசனை நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளனர்.

"மாணவர்களைப் பொறுத்தவரை வேலைவாய்ப்பை பெறுவது என்பதுதான் அவர்களின் மிக முக்கிய குறிக்கோள்! கடந்த சில ஆண்டுகளாக வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதில் ஐஐடி மெட்ராஸ் சாதனைகளைப் படைத்து வருகிறது"எனக் குறிப்பிட்டார் ஐஐடி மெட்ராஸ்-ல் 2022 தமது பட்டப் படிப்பை முடித்த மாணவரான எஸ்.சித்தார்த்த நாராயண்.

மாணவராக இருந்தபோது வேலை வாய்ப்புக்கான குழுவை தலைமை வகித்து நடத்தி வந்த திரு.சித்தார்த், தற்போது பெயின் கன்சல்டிங் நிறுவனத்தில் சேர்ந்து உள்ளார். ஐஐடி மெட்ராஸ்-ன் வேலை வாய்ப்புக்கான குழுவின் அறிக்கைப்படி, 2022-ம் ஆண்டுக்கான பேட்ச்-ன் சராசரி சிடிசி (Cost to company) ரூ.18 லட்சம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. ரூ.1 கோடிக்கும் அதிகமான சிடிசி யுடன் 27-க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பைப் பெற்று உள்ளனர்.

மாணவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்குக் கிடைக்கும் தகவல்களை நன்கு ஆராய்ந்து, கேள்விகளை எழுப்பி, தகவல் அறிந்த முடிவுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என முன்னாள் மாணவர்கள் குறிப்பிட்டனர். "தரவரிசையில் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் நம்பர் ஒன் இடத்தில் ஐஐடி இருப்பதற்கு காரணம் உண்டு. அதற்கான காரணங்களை மாணவர்கள் அறிந்து கொள்வதுடன், அதற்கு மேலும் உள்ள காரணங்களைக் கண்டறிய வேண்டும்" என முன்னாள் மாணவர்கள் மேலும் தெரிவித்தனர்.

ஐஐடி மெட்ராஸ்- ஓர் அறிமுகம்

இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் (IITM) 1959-ம் ஆண்டில் இந்திய அரசால் 'தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவன'மாகத் தொடங்கப்பட்டது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 16 கல்வித் துறைகள் மற்றும் மேம்பட்ட இடைநிலை ஆராய்ச்சிக் கல்வி மையங்கள் மூலம் இக்கல்வி நிறுவனத்தின்  செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இக்கல்வி நிறுவனம்  பி.டெக்., எம்.எஸ்சி., எம்.பி.ஏ., எம்.டெக்., எம்.எஸ்., பிஎச்.டி., போன்ற வெவ்வேறு பிரிவுகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களை வழங்குகிறது. ஐஐடிஎம் 600-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 9,500 மாணவர்களுடன் இயங்கும் உண்டு உறைவிடக் கல்வி நிறுவனமாகும். இங்கு 18 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். வலுவான பாடத்திட்டங்கள் மற்றும் 'ஐஐடிஎம் இன்குபேஷன் செல்' ஆகியவற்றின் மூலம், ஐஐடிஎம் தொழில் முனைவுக்கு  ஊக்கமளித்து வருகிறது.

2019-ம் ஆண்டில் இன்ஸ்டிடியூட் ஆஃப் எமினன்ஸ் (IoE) கல்வி நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்ட ஐஐடிஎம், இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தேசியக் கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலில் 'ஒட்டுமொத்த'ப் பிரிவில் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக அகில இந்திய அளவில் முதலிடத்தைத் தக்க வைத்துள்ளது. இதே தரவரிசைப் பட்டியலில் 'பொறியியல் கல்வி நிறுவனங்கள்' பிரிவிலும்2016 முதல் 2022-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக ஏழு ஆண்டுகளாக இக்கல்வி நிறுவனம் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. புதுமைக் கண்டுபிடிப்பில் சாதனை படைத்த கல்வி நிறுவனங்களுக்கான அடல் தரவரிசையில் (ARIIA) 'சிறந்த புத்தாக்க கல்வி நிறுவன'மாக 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டது.

Follow IIT Madras on FACEBOOK / TWITTER / LINKEDIN / INSTAGRAM / YOUTUBE

MEDIA CONTACT FOR IIT MADRAS

IIT Madras Media Cell - Email: media.iitmadras@imail.iitm.ac.in / Landline: 044 2257 9785

Footprint Global Communications

Bhavani Giddu - Cell: 99995 00262

Sairam Radhakrishnan - IIT Madras Media Cell, Chennai, - Cell: 984010 8083

Archana PN - Cell: 87545 41894

இணைப்பு-1

ஐஐடி மெட்ராஸ்-ஐ விருப்பமான இடமாக மாற்றும் பத்து அம்சங்கள் கீழே பட்டியல் இடப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்புகள்-வேலைவாய்ப்புகளுக்கு பதிவு செய்திருந்த ஏறத்தாழ 80 விழுக்காடு மாணவர்கள் 2021-22ம் ஆண்டிற்கான கடைசி பேட்ச்-ல் பணிவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இக்கல்வி நிறுவனம் 1,199 வேலைவாய்ப்புகள், 231 பணிக்கு முந்தைய வேலைவாய்ப்புகள் என மொத்தம் 1,430 பணிவாய்ப்புகள் கிடைத்துள்ளன. முதல்கட்டத்தில் மட்டும் மொத்தம் 45 வெளிநாட்டு பணிவாய்ப்புகள் கிடைத்திருப்பது மற்றுமொரு அதிகபட்ச சாதனை அளவாகும்.

உள்ளகப் பயிற்சி- உள்ளகப் பயிற்சி (இன்டர்ன்ஷிப்) பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையில் 48 விழுக்காடு அதிகரித்துள்ளது. உள்ளகப் பயிற்சிக்காக ஐஐடி மெட்ராஸ்-க்கு வருகை தந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 28 விழுக்காடு உயர்வு. முதல்நாள் பணிவாய்ப்பு முகாம் மூலம் 2022-23 ம் ஆண்டுக்கான நடப்பு பேட்ச்-ல் உள்ள மாணவர்களுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஹாங்காங், சிங்கப்பூர், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள நிறுவனங்களிடம் இருந்து வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

தலைசிறந்த கல்வி நிறுவனம்: NIRF தரவரிசையில் ஐஐடி மெட்ராஸ் தொடர்ந்து நான்கு வருடங்களாக 'ஒட்டுமொத்த' பிரிவில் முதலிடத்தையும், 'பொறியியல் நிறுவனங்கள்' பிரிவில் 2016 முதல் 2022 வரை தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக முதலிடத்தையும் பெற்றுள்ளது. 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் புத்தாக்க சாதனைகளுக்கான நிறுவனங்களின் அடல் தரவரிசையில் (ARIIA) நாட்டின் ‘சிறந்த புதுமையான நிறுவனம்’ என்று இக்கல்வி நிறுவனம் அறிவிக்கப்பட்டது. கல்வி அமைச்சகத்தின் புத்தாக்கப் பிரிவால் ARIIA தரவரிசை தொடங்கப்பட்டது.

புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவு-மாணவர்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்முனைவை ஊக்கப்படுத்தும் விதமாக ஐஐடி மெட்ராஸ் மிகத் துடிப்பான சுற்றுச்சூழல் அமைப்பை வழங்குகிறது.

மாணவர்களால் நடத்தப்படும் புத்தாக்க மையம் (Centre for Innovation -CFI) பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றிணைந்து தங்களுக்கு ஆர்வமான திட்டங்களை செயல்படுத்துவதற்கான தளத்தை வழங்குகிறது. Team Raftar , Team Avishkar Hyperloopபோன்ற புத்தாக்க மையத்தின் மாணவர்கள் பல்வேறு சர்வதேச விருதுகளைக் கைப்பற்றி உள்ளனர். ஏதர் எனர்ஜி (Ather Energy), ஹைபர் வெர்ஜ் (HyperVerge) போன்ற நிறுவனங்கள் புத்தாக்க மையத்தில் இருந்து வந்து வெற்றிகரமான பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைத் தொடங்கி உள்ளன.

நிர்மாண் (Nirmaan) என்பது ஐஐடி மெட்ராஸ் மாணவர்களால் நடத்தப்படும் தொழில் ஊக்குவிப்புக்கு முந்தைய செயல்திட்டம் (pre incubator) ஆகும். நிர்மாண் திட்டம் மூலம் 20க்கும் மேற்பட்ட குழுக்களைச் சேர்ந்தவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிலர் வெற்றிகரமாகத் தொழில் ஊக்குவிப்புகளைத் தொடங்கி ஒரு மில்லியன் டாலருக்கும் மேலாக நிதி திரட்டி உள்ளனர். கல்வி தொழில்நுட்பம், வேளாண் தொழில்நுட்பம், நுகர்வோருக்கான தயாரிப்புகள், மேம்பட்ட தொழில்நுட்பத் தீர்வுகள் உள்ளிட்ட பல்வேறு வணிகக் களங்களில் ஏறத்தாழ 20 குழுக்களை தற்போதைய கூட்டுக் குழு தன்னகத்தே வைத்துள்ளது.

புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோருக்கான பாலகிருஷ்ணன்- தேஷ்பாண்டே மையம் , இந்தியா முழுவதும் உள்ள STEM பல்கலைக் கழகங்களில் தொழில்முனைவு அமைப்புமுறை மற்றும் செயலாக்கத்தை உருவாக்கும் வகையில் சிந்தனைத் தலைமை மற்றும் நெட்வொர்க்கிங் உத்வேகத்தை அளிக்க வடிவமைக்கப்பட்டு உள்ளது. STEM பல்கலைக்கழகங்களுடன் இணைந்து 'லேப் டு மார்க்கெட்' என்ற புதுமையான பணியை செயல்படுத்துகிறது. இதன் மூலம் ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஆராய்ச்சி யோசனைகளை வணிகமயமாக்கவும், வலுவான தொடக்கங்களை உருவாக்கவும் உதவ முடியும்.

ஐஐடி மெட்ராஸ் இன்குபேஷன் செல்  (ஐஐடிஎம்ஐசி) என்பதுஇந்தியாவின் முன்னணி டீப்-டெக் ஸ்டார்ட்அப் மையமாகும். இன்றைய நாள்வரை 233 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்பட்டதால், அவை 296 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளன. இதன் ஒட்டுமொத்த மதிப்பீடு 1.5 பில்லியன் அமெரிக்க டாலராகும். அவர்கள் 400 க்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்கியுள்ளனர் மற்றும் 125 க்கும் மேற்பட்ட காப்புரிமைகளை உருவாக்கியுள்ளனர்.

கல்விநெகிழ்வுத்தன்மை-ஐஐடி மெட்ராஸ் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது கல்வி நெகிழ்வுத் தன்மையை வழங்கி வருகிறது. மாணவர்கள் தாங்கள் படிக்கும் படிப்புகளில் சுமார் 50 விழுக்காடு பாடத்திட்டங்களை அவர்களே தேர்வு செய்யும் சுதந்திரம் உள்ளது. இதனால் செமஸ்டர் முழுவதையும் வெளிநாட்டு பல்கலைக் கழகத்திலேயே படிக்க முடியும். அதேபோன்று எந்தத் துறையில் இருந்தும் விருப்பப் பாடங்களைத் தேர்வு செய்யலாம். விருப்பப் பாடங்களைப் பொறுத்தவரை, ஐஐடி மெட்ராஸ்-ல் உள்ள 16 துறைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பிற கல்வி நிறுவனங்களில் இருந்து 8 படிப்புகளை (சுதந்திரமான விருப்பப் பாடங்கள் என்றழைக்கப்படும்) விருப்பப்படி தேர்வுசெய்யலாம்.  'இந்தியாவின் வரலாறு, உளவியல் பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களில் தொடங்கி செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் வரை 72 வகையான பலதரப்பட்ட படிப்புகளை மாணவர்கள் கற்க முடியும்.

சர்வதேச வாய்ப்புகள் - ஐஐடி மெட்ராஸ் உலகம் முழுவதும் உள்ள ஏறத்தாழ 250 சர்வதேச பல்கலைக் கழகங்களுடன் முக்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதுடன், வெளிநாடுகளில் இருந்து மாணவர்களையும் அனுமதிக்கிறது. ஐஐடி மெட்ராஸ் கூட்டு முனைவர் பட்டங்களை  (JDPs) வழங்குகிறது. இதனால் புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் மற்றம் ஐஐடி மெட்ராஸ்-ன் கூட்டுப் பட்டங்களைப் பெற வாய்ப்புள்ளது. உலகம் முழுவதும் உள்ள கூட்டாண்மை கல்வி நிறுவனங்களுடன் மாணவர் பரிமாற்ற திட்டங்களையும் ஆராய்ச்சி வாய்ப்புகளையும் இக்கல்வி நிறுவனம் வழங்குகிறது.

ஆராய்ச்சி வசதிகள் - ஐஐடி மெட்ராஸ், ஆராய்ச்சியின் தரம் மற்றும் பன்முகத்தன்மைக்காக சர்வதேச அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனமாகும். ஐஐடி மெட்ராஸில் உள்ள ஆராய்ச்சியானது, துறைகளால் நடத்தப்படும் பல்வேறு கல்வித் திட்டங்கள் மூலமாகவும், தேசிய நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களால் நிதியளிக்கப்பட்ட திட்டங்கள் மூலமாகவும் வளர்க்கப்படுகிறது. ஐஐடி மெட்ராஸ், அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் 100 க்கும் மேற்பட்ட ஆய்வகங்களுடன், அதிநவீன ஆராய்ச்சி வசதிகளை வழங்குகிறது.

பன்முகக் கலாச்சார வளாகம் -  நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏறத்தாழ 10,000 மாணவர்கள், 600 ஆசிரியர்கள், கணிசமான எண்ணிக்கையிலான சர்வதேச மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் நிறைந்திருப்பதால் இந்தியாவின் உயர் கலாச்சாரம் மிக்க, பன்முக கலாச்சார கல்வி நிறுவனமாக ஐஐடி மெட்ராஸ் விளங்கி வருகிறது. இந்திய மற்றும் சர்வதேச உணவு வகைகளின் நல்ல வகைகள், இக்கல்வி நிறுவன வளாகத்திலேயே கிடைக்கின்றன.

விளையாட்டுவசதிகள்- கல்வி மட்டுமின்றி, ஒலிம்பிக் போட்டிகளுக்கு இணையான தரம் வாய்ந்த நீச்சல் குளம், நவீன சாதனங்களுடன் கூடிய உடற்பயிற்சி கூடம், அனைவரையும் ஈர்க்கும் வகையில் ஐஐடி-செம்பிளாஸ்ட் கிரிக்கெட் மைதானம், பரந்த மைதானம்,  உயர் தொழில்நுட்ப மரப்பலகையாலான தரையுடன் பன்னோக்கு உள்விளையாட்டு அரங்கு போன்றவை மாணவர்கள் செயல்பாட்டில் உள்ள குறிப்பிடத்தக்க இடங்களாகும்.

துடிப்பான சேவை வழங்கும் நகரம்: இந்தியாவில் பன்முகக் கலாச்சாரமும், பாதுகாப்பும், துடிப்பான மக்கள் என பல்வேறு அம்சங்கள் நிறைந்த மாநகரங்களில் சென்னையும் ஒன்று. தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் மைய நகராக விளங்கும் சென்னையில் உலகின் தலைசிறந்த முன்னணி நிறுவங்கள் தங்கள் உற்பத்தித் தொழிற்சாலைகளையும், அலுவலகங்களையும் நிறுவி உள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த