தொண்டு நிறுவனங்களின் (என்.ஜி.ஓ.) எஃப்.சி.ஆர்.ஏ பதிவு கால அவகாசம் நீட்டித்து உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.
தொண்டு நிறுவனங்களின் (என்.ஜி.ஓ.) எஃப்.சி.ஆர்.ஏ பதிவு கால அவகாசம் நீட்டித்து உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.
கல்கத்தாவில் அன்னை தெரசாவால் நிறுவப்பட்ட மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி எனும் தொண்டு நிறுவனத்தின் புதுப்பிப்பு விண்ணப்பத்தை கடந்து டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி உள்துறை அமைச்சகம் ஏற்க மறுத்த சில நாட்கள கழித்து இந்த அறிவிப்பு வெளியானது. வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் (எஃப்.சி.ஆர்.ஏ) படி தொண்டு நிறுவனங் (என்.ஜி.ஓ.)களின் பதிவு செல்லுபடியாகும் காலத்தை செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி, 2020 ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 31 ஆம் தேதி, 2022 ஆம் ஆண்டு வரை உள்துறை அமைச்சகம் நேற்று நீட்டித்துள்ளது. முன்னதாக, இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை மட்டுமே புதுப்பிப்பதற்கான நீட்டிப்பு வழங்கப்பட்டது.
“மத்திய அரசு பொது நலன் கருதி, எஃப்.சி.ஆர்.ஏ பதிவுச் சான்றிதழ்களின் செல்லுபடியாகும் காலத்தை மார்ச் 31, 2022 வரை அல்லது புதுப்பித்தல் விண்ணப்பத்தின் முடிவு தேதி வரை அல்லது எந்த தேதி முன்னதாக வருகிறதோ அந்த தேதி வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது” என்று உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
சில பாதகமான தகவல்களின் படி அன்னை தெரசாவால் நிறுவப்பட்ட தொண்டு நிறுவனத்தின் புதுப்பித்தலை ஏற்க மறுத்ததாக உள்துறை அமைச்சகம் கூறியது. தொண்டு நிறுவனத்தின் பதிவு அக்டோபர் 31 ஆம் தேதி காலாவதியானதால் புதுப்பித்தலுக்கு விண்ணப்பித்திருந்தது. உள்துறை அமைச்சகம் புதுப்பிப்பதற்கு மறுத்ததைத் தொடர்ந்து, இந்தத் தொண்டு நிறுவனம் அதன் அனைத்து மையங்களுக்கும் தொண்டு நிறுவனங்களின் வெளிநாட்டு பங்களிப்பு வங்கிக் கணக்குகளை இயக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியது.1962 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்ட 25 ஆண்டிற்கு முன்பே இந்திய அரசால் அன்னை தெரேசா அடையாளங்காணப்பட்டுள்ளார். 1972- ஆம் ஆண்டில், பன்னாட்டு புரிந்துணர்வுக்கான பன்டித ஜவகர்லால் நேரு விருது, 1980-ஆம் ஆண்டில் இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதான பாரத ரத்னா உட்பட இந்திய உயர்விருதுகளை அடுத்த பத்தாண்டுகளில் பெற்றார்., அவரது வரலாறு இந்திய ஆட்சிப் பணியாளரான நவீன் சாவ்லாவால் எழுதப்பட்டு 1992 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
அன்னை தெரசாவைப் பற்றிய எல்லா இந்தியாரும் உயர்வாகப் பார்க்கவில்லை. கல்கத்தாவில் பிறந்து லண்டனில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவரது விமர்சகரான அரூப் ச்சேட்டர்ஜி அவர் வாழ்ந்த காலத்தில் கல்கத்தாவின் முக்கிய அங்கமாக இருக்கவில்லையெனக் குறிப்பிட்டுள்ளார். அன்னை தெரேசா தனது சொந்த ஊரான கல்கத்தாவின் புகழைக் குலைத்து விட்டதாகக் அவர் குறை கூறியுள்ளார். அவரது தன்னலமற்ற சேவை செய்யும் சக்தியையும், தைரியத்தையும் புகழ்ந்தபோதிலும், பொது கூட்டங்களில் அவர் கருக்கலைப்பை எதிர்ப்பதையும், அதை அரசியல் நோக்கமில்லாததாகக் காட்டிக்கொள்வதையும் குறை கூறியுள்ளார்.அன்னை தெரேசா, ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி, 1910 - ஆம் ஆண்டு பிறந்தார் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி, 1997 ஆம் ஆண்டு காலமானார்), அல்பேனியா நாட்டில் பிறந்த பூர்வீகம் கொண்டு இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியாவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ. 1950 ஆம் ஆண்டு, இந்தியா வந்துகொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர். முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார். ஆனால் இவர் கிருஸ்தவ மதம் சார்ந்தே தொண்டு செய்தார்.
இந்த நிலையில். எஃப்.சி.ஆர்.ஏ திருத்தம் மோசமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டதால், தொற்றுநோய்க்கு மத்தியில் எதுவும் செய்ய முடியவில்லை என்று பல்வேறு நீதிமன்றங்களில் பல தொண்டு நிறுவனங்கள் வழக்கு மனுக்களைத் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சகம் புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது எவ்வாறாயினும், சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் தொண்டு நிறுவனங்கள் (என்ஜிஓ) மட்டுமே புதுப்பித்தலில் அங்கீகரிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.
அமைச்சகத்தின் அறிக்கை வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) விதிகள், 2011-ன் விதி 12 ன் படி பதிவுச் சான்றிதழ் காலாவதியாகும் முன் நிறுவனங்கள் எஃப்.சி.ஆர்.ஏ தளத்தில் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.எனவே, அனைத்து எஃப்.சி.ஆர்.ஏ பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்கள் மற்றும் சங்கங்களும், பதிவுச் சான்றிதழைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் மறுக்கப்பட்டால், புதுப்பித்தல் விண்ணப்பத்தை மறுத்த தேதியில் சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் காலாவதியாகிவிட்டதாகக் கருதப்படும். வெளிநாட்டு பங்களிப்பைப் பெறவோ அல்லது பெறப்பட்ட வெளிநாட்டு பங்களிப்பைப் பயன்படுத்தவோ சங்கம் தகுதி பெறாது” என்று உள்துறை அமைச்சகம் அறிவிப்பில் கூறியுள்ளது.
எஃப்.சி.ஆர்.ஏ திருத்தமானது வெளிநாட்டு உதவி பெறும் அனைத்து தொண்டு நிறுவனங்களும் பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) புது டெல்லி கிளையில் கணக்கு தொடங்குவதை கட்டாயமாக்கியுள்ளது. இருப்பினும், வெளிநாட்டவரின் அமைச்சுப் பிரிவின் காரணமாக, தேவையான அனுமதிகளை வழங்குவதில் உள்துறை அமைச்சகத்தின் தாமதத்தால் செயல்முறை தடைபட்டது. “இந்த காரணத்தால்தான் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கணக்கைத் தொடங்கிய இதுபோன்ற தொண்டு நிறுவனங்களின் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் தாமதமாகின்றன” என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள்