இரயில் நிலையத்தின் பெயர்ப் பலகையிலும், இணையப் பதிவுகளிலும் பாவூர்சத்திரம் ஊரின் எழுத்துப்பிழை திருத்தம்
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் இரயில் நிலையத்தின் பெயர்ப் பலகையில் ஊரின் பெயர் 'பாவூர்சுத்திரம்' என, தவறாக எழுதப்பட்டிருந்தது.
இரயில் நிலையத்தின் முக்கிய மஞ்சள் நிறப் பெயர்ப் பலகையில், பாவூர்சத்திரம் ஊரின் பெயர் ஆங்கிலத்தில் 'Pavurchutram' என தவறாக எழுதப்பட்டு இருப்பதையும், பயணச் சீட்டு முன்பதிவு உள்ளிட்ட இணையப் பதிவுகள் அனைத்திலும் இவ்வாறே தவறாக ஊரின் பெயர் குறிப்பிடப்பட்டு இருப்பதையும் சுட்டிக் காட்டி 24.07.2022 அன்று, தென்மண்டல இரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையாவுக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதியிருந்த நிலையில்
தென்மண்டல இரயில்வே பொது மேலாளர், 16.09.2022 அன்று, எழுதிய பதில் கடிதத்தில், மதுரை கோட்டத்திற்குட்பட்ட பாவூர்சத்திரம் ஊரின் பெயரில் உள்ள எழுத்துப்பிழை இரயில் நிலையத்தின் பெயர்ப் பலகையிலும், இணையப் பதிவுகள் அனைத்திலும், தங்கள் கோரிக்கையின் பேரில் ஆய்வு செய்யப்பட்டு, உரிய திருத்தம் மேற்கோள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
வைகோ முயற்சியால் பாவூர்சத்திரம் ஊரின் பெயர்ப் பலகை மற்றும் முக்கிய ஆவணங்களில் உள்ள ஆங்கில எழுத்துப் பிழை சரி செய்யப்பட்டுள்ள செய்தியை, மறுமலர்ச்சி திமுக பகிர்ந்து கொள்கிறேன்.
தென்மண்டல இரயில்வே பொது மேலாளருக்கும் மறுமலர்ச்சி தி.மு.க தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ சார்பில் தெரிவித்துள்ளார்.
இந்தக் கோரிக்கையை, வைகோவின் கவனத்திற்கு கொண்டு வந்த துணைப் பொதுச்செயலாளர் தி.மு.இராசேந்திரனுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
கருத்துகள்