காரைக்குடியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பொதுக்கூட்டத்தில் வெளி மாவட்டங்களிலிருந்து வந்த நபர்களின் எண்ணிக்கை தான் அதிகம்
பல்வேறு கட்டங்களாக பாரதீய ஜனதா கட்சியின்
மாநில மாவட்ட பிரதான நிர்வாகிகளுடன்,
அக் கட்சியை பலப்படுத்துவது குறித்தும், 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்த அகில இந்திய தலைவரான ஜே.பி நட்டா இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தந்தார் அப்போது மதுரை விமான நிலையத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் பாஜகவின் தலைவர் அண்ணாமலை தலைமையிலான நபர்கள் உற்சாகமாக வரவேற்பளித்தனர். தவில் நாதஸ்வரம்,
முழங்க மற்றும் வழி நெடுகிலும் மலர் தூவி ஜே.பி.நட்டாவிற்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.பின்னர் விமான நிலையம் அருகில் தனியார் ஹோட்டலில் பல்வேறு துறைகளின் பிரபலங்கறளைச் சந்தித்துப் பேசினார் மதுரையிலிருந்து ஹெலிகாப்டரில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு புறப்பட்ட நட்டா மாலை 3.30 மணிக்கு காரைக்குடி எம்.ஏ.எம் மகாலில் நடைபெறும் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டும், பிரதான நிர்வாகிகளுடன் தனியாக ஆலோசனையும் நடத்தினார். பாஜக மகளிர் நிர்வாகிகளுடனும் தனியாக ஆலோசனை நடத்தினார்.இரவு என்.ஜி.ஓ காலனி விளையாட்டுத் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனைகளை விளக்கிப் பேசினார் பொதுக்கூட்டம் முடிந்து இரவில் காநாடுகாத்தான் ராஜா செட்டிநாடு இல்லத்தில் தங்கினார்.
அப்போதும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார் என்று தெரிகிறது.காரைக்குடியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் நட்டா உரையாற்றிய போது எதிர்பார்த்த கூட்டம் இல்லை மேலும் உள்ளூர் முகங்கள் அரிதாகவே இருந்தது வெளி மாவட்டங்களில் இருந்து வந்த நபர்கள் மட்டுமே காணப்பட்டனர் ஏராளமான சேர்கள் காலியாகக் கிடந்த நிலையில் புகைப்படக் கலைஞர் கண்களில் பதிவாகி இருக்கிறது.
ஜூலை மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்ற பாஜக செயற்குழுக் கூட்டத்தில் ஆபரேசன் சவுத் இந்தியா திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார் அன்றிலிருந்தே தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவை வளர்க்கும் பணிகளில் அக்கட்சியின் தலைவர்கள் முழு வீச்சில் இறங்கியுள்ளனர். மத்திய அமைச்சர்களும் பாஜக தலைவர்களும் அடிக்கடி தென்னிந்தியாவுக்கு வருகின்றனர். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன் தயாரிப்பு பணிகளையும் இப்போதே தொடங்கி இருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. குறுகிய கால இடைவெளியில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு முறை தமிழ்நாடுக்கு வந்து சென்றார். இதேபோல் கேரளா,
தெலுங்கானாவுக்கு அமித்ஷா அண்மையில் தான் சென்றார்.இந்த நிலையில் பாஜக வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தமிழ்நாடு வந்தார். சிவகங்கை மாவட்டத்தில் கட்சி மற்றும் பொது நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார் . காரைக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இந்த நிகழ்வில் தமிழர்கள் பாரம்பரிய உடைகளில் வேட்டி, துண்டு போட்டு கலந்துகொண்டார். விழாவில்
பாரத் மாதா கி ஜே, வெற்றி வேல், வீரவேல் என முழக்கமிட்டவர் பின்னர் தனது உரையைத் தொடங்கினார். 'இந்த பொதுக்கூட்டத்தை பார்க்கையிலும், இங்கு எழுப்பப்படும் கரகோசத்தை காணும்போதும் ஒரு தெளிவான உண்மை எனக்கு தெரிகிறது. என் தொடர்ந்து பேசினார். அவருக்கு முன் பேசிய கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் தற்போது திமுக என்ற இருள் சூழ்ந்துள்ளதாக கூறினார். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை பொருள்கள விற்பனை செய்யபபடுவதாகவும் குற்றம் சாட்டினார்.தேசிய தலைவர் காரைக்குடி வந்திருப்பது கட்சியை பலப்படுத்தி நம்மையெல்லாம் ஊக்குவித்து வளர்பதற்காகவே.
எட்டு முறை பதவியில் இருந்து மாவட்டத்திற்கு ஒன்றும் செய்யாத குடும்பத்திடம் இருந்து சிவகங்கையை காப்பாற்றி பாஜகவை கொண்டு வருவது தான் நமது லட்சியமாக இருக்க வேண்டும். அதனை நாம் முனைப்புடன் செய்ய வேண்டும்” என்று பேசினார்.கூட்டத்தில் அதிகம் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த நபர்களின் எண்ணிக்கை அளவு அதிகம் சிவகங்கை மக்கள் இந்த நிகழ்வுகளை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை மறுநாள் காலையில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார்.இன்று 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் குறித்து பிஜேபி தேசிய தலைவர் ஜே பி நட்டா மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் காரைக்குடியில் விவாதித்தார்.
பின்னர் திருப்பத்தூர் தாலுகா பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் வழிபட்டார்.
அவரை பிச்சைக்குருக்கள் வரவேற்றார் தரிசனம் செய்ய அவருடன் எச்.ராஜா,அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் வந்திருந்தனர்.பாஜக வின் தேசியத் தலைவர் ஜே பி நட்டா சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை தெற்கு மண்டலத் தலைவர் ராமலிங்கம் வீட்டில் கட்சி நிர்வாகிகளுடன் உணவுண்டு கலந்துரையாடினார்
.பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் அடக்குமுறையை எதிர்த்து வீரத்துடன் போராடி, உயிர்த்தியாகம் செய்த மாவீரர்கள் முடிசூடா மன்னர்கள் மருது சகோதரர்களுக்கு, அவர்கள் நினைவிடத்தில் பா.ஜ.க தேசியத் தலைவர் மரியாதை செலுத்தினார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தாயார் பிறந்த வீட்டில் இரவு தங்கினார் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அங்கு உடனிருந்த அணைவரும் முக்கியமான அக் கட்சியின் தலைவர்கள் மட்டுமே ராஜா சர் இல்லத்தில் ஆலோசனையின் போது உடனிருந்தனர்.
கருத்துகள்