நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா மறைவுக்கு பிரதமர் இரங்கல்
பிரபல நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவாவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“ராஜு ஸ்ரீவஸ்தவா, நகைச்சுவை மற்றும் நேர்மறையான நடிப்பின் மூலம் நமது வாழ்க்கையை பிரகாசமாக்கினார். அவர் குறைந்த வயதில் நம்மை விட்டு பிரிந்து சென்ற போதிலும், அவர் பல ஆண்டுகளாக வெளிப்படுத்திய தனது செழுமையான நடிப்பால் எண்ணற்ற மக்களின் இதயங்களில் தொடர்ந்து வாழ்வார். அவரது மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.” என்று பதிவிட்ட நிலையில்
பாலிவுட் திரைப்படங்கள், டிவி ஷோக்களெனக் கலக்கி வந்த நகைச்சுவை நடிகர் ராஜூ ஸ்ரீ வஸ்தவாவுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வந்தவருக்கு திடீர் உடல்நலக் குறைவேற்பட்டது .
கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை குறைவு காரணமாக இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு. அதோடு மிகவும் கவலைக்கிடமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்னர் அவர் சுயநினைவில்லை என்றும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்பட்டது. கடந்த பத்தாம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராஜூ
தாது ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அறிந்த அவரது பயிற்சியாளர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் மாரடைப்பு என உறுதியானதை அடுத்து அவசர சிகிச்சையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ராஜு தொடர்ந்து வெண்டிலேட்டரில் தான் வைக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் நகைச்சுவை நடிகர் ராஜுவின் உடல் நலத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. சுயநினைவு இன்றி
இதய செயல்பாட்டை பராமரிக்க வழங்கப்பட்ட மருந்து மற்றும் சாதனங்கள் மட்டுமே குறைக்கப்பட்ட நிலையில் தாம். ராஜூ ஸ்ரீ வஸ்தவாவின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினர் முன்னதாக அறிக்கை வெளியிட்டனர். அதில் "வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அவரது உடல் நிலை சரியாக அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.
நடிகை சம்பவ்னா சேத் தனது ட்விட்டரில், அன்புள்ள அனைவருக்கும் ராஜூ ஸ்ரீ வஸ்தாவின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் விரைவில் குணமடைய பிரார்தனை செய்கிறோம். மருத்துவர்கள் அனைவரும் சிகிச்சை அளித்து தாங்கள் இயன்றவரை செய்து வருகின்றனர். அனைவருக்கும் நன்றி . தயவு செய்து வதந்திகளை போலி செய்திகளை புறக்கணிக்கவும் அவருக்காக பிரார்த்தனை செய்யவும் என குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் இறந்த நிலையில் பலரும் அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள்