தனி நபரின் உரிமையில் உள்ள, 10 சென்ட் வரையிலான விவசாய நிலத்தை,
வீட்டுமனையாக பதிவு செய்ய கோரும் பத்திரங்களை ஏற்கலாம்' என, சார் பதிவாளர்களுக்கு, பதிவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில், அங்கீகாரமில்லாத மனைகளை பதிவு செய்வதற்கான தடை அமலில் உள்ளது. இருப்பினும், மனைப்பிரிவு என்ற வரையறைக்குள் வராத விவசாய நிலங்களை, வீட்டுமனைகளாக பதிவு செய்வதில் சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து, பதிவுத்துறை சீராய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், சார் பதிவாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பதிவுத்துறை தலைமை அலவலகத்தில் இருந்து, சார் பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்:
தனி நபர் பெயரில் உள்ள, 10 சென்ட் விவசாய நிலத்தை, மனையாக பதிவு செய்ய வரும் பத்திரங்களை ஏற்கலாம்; இதை, 'லே அவுட்' எனப்படும் மனைப்பிரிவாக கருதக் கூடாது அதேபோல, தனி நபர் பெயரில் உள்ள, 10 சென்ட் வரையிலான விவசாய நிலத்தை, மூன்று மனைகளாக பிரித்தும் பதிவு செய்யலாம்
அங்கீகாரமில்லா மனை பதிவு தடை பிரிவு அமலுக்கு வந்த நாளுக்கு முன், பாகப்பிரிவினை, கிரைய உடன்படிக்கை, விடுலை ஆவணங்கள் வாயிலாக பெறப்பட்டு, வீட்டுமனையாக பதிவு செய்யப்பட்ட நிலங்களை பதிவுக்கு ஏற்கலாம்
அதிக பரப்பளவுள்ள விவசாய நிலத்தின், 5 சென்ட் அளவிலான ஒரு பகுதியை, மனை தானமாக அல்லது கிரைய பத்திரமாக பதிவு செய்யலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்