தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15 வது தேர்தல் தலைவராக இரண்டாவது முறையாக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டின் ஆட்சி செய்யும் கட்சியாகத் திகழும் திராவிட முன்னேற்ற கழகம் ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்தி அதன் தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுத்துள்ளது.
அதன்படி திமுகவின் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரண்டாவது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், மேலும் பொதுச்செயலாளராக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஜனநாயகமுறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் தலைமை கழக நிர்வாகிகளாக பலரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஜனநாயக மரபுகளைப் பேணிப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறையும் ஆர்வமும் கொண்டதன் அடையாளம் தான் திமுகவின் உட்கட்சி தேர்தலை நடத்தி தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை முறைப்படி தேர்ந்தெடுத்துள்ளனர்
கழகப் பொதுச்செயலாளர் பொருளாளர் ஒருமனதாகத் தேர்வு!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15 ஆவது பொதுத்தேர்தலை யொட்டி இன்று, சென்னையில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் கழகப் பொதுச்செயலாளராக நீர்வளத்துறை அமைச்சர் . துரைமுருகன், கழகப் பொருளாளராக நாடாளுமன்ற உறுப்பினர். டி.ஆர்.பாலு ஆகியோர் இரண்டாவது முறையாக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், முதல்வரின் ஐம்பெரும் முழக்கங்கள்!
1. கலைஞரின் கட்டளையைக் கண்போல் காப்போம்!
2.தமிழரை வளர்த்து, தமிழைப் போற்றுவோம்!
3.அதிகாரக் குவியலை அடித்து நொறுக்குவோம்!
4.மதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம்!
5.வளமான தமிழகத்தை வளர்த்து எடுப்போம்!
தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர்கள் அறிவிப்பு!
இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அமைச்சர் இ. பெரியசாமி, அமைச்சர் .க. பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர்.ஆ.ராசா, .அந்தியூர் செல்வராஜ், கவிஞர் கனிமொழி ஆகியோர் கழக துணைப்பொதுச் செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துகள்