சென்னை விமான நிலைய சுங்கத்துறையினரால் ரூ.2.60 கோடி மதிப்புள்ள 5.935 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது
விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, மும்பையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த மூன்று நபர்களை விமான நிலைய சுங்கத்துறைனர் சோதனை செய்தனர். அப்போது நூதன முறையில் பசை வடிவிலான தங்கத்தை கடத்தி கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. 3.74 கிலோ எடை கொண்ட இந்த தங்கத்தின் மதிப்பு ரூ.1.63 கோடியாகும்.
மற்றொரு சம்பவத்தில், கேட்பாரற்று கிடந்த பொருளை சோதனையிட்ட போது ரூ 96.09 லட்ச மதிப்புள்ள 2.195 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது
இவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கூறிய மூன்று நபர்களையும் கைது செய்து விசாரண செய்து வருகின்றனர்.
மொத்தத்தில் சென்னை விமான நிலைய சுங்கத்துறையினரால் ரூ.2.60 கோடி மதிப்புள்ள 5.935 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் திரு எம் மேத்யூ ஜாலி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள்