ரூ.48.35 லட்சம் மதிப்பிலான 1083 கிராம் தங்கம் மற்றும் 9400 சிகரெட்டுகள் பறிமுதல்
துபாயில் இருந்து விமானம் மூலம் 20-ந் தேதி சென்னை வந்த பயணியை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் இடைமறித்து சோதனையிட்டு நூதன முறையில் மறைத்து எடுத்துவரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதனை உருக்கிய போது 1083 கிராம் எடை கொண்ட தங்கம் கிடைத்தது. இதன் மதிப்பு ரூ.47.41 லட்சமாகும்.
மேலும் 9400 சிகரெட்டுகளை கொண்ட 47 பெட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு 94 ஆயிரம் ரூபாயாகும். மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் திரு மேத்யூ ஜோலி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்