முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"5 ஜி மூலம், இந்தியா முதல் முறையாக தொலைதொடர்பு தொழில்நுட்பத்தில் உலகளாவிய தரத்தை பெற்றுள்ளதென பிரதமர் கருத்து

 பிரதமர் 5ஜி சேவைகளை தொடங்கி வைத்தார்

6வது இந்திய மொபைல் காங்கிரசையும் பிரதமர் தொடங்கி வைத்தார்

“5ஜி என்பது நாட்டில் ஒரு புதிய சகாப்தத்தின் கதவுகளைத் தட்டுகிறது. 5ஜி என்பது வாய்ப்புகளின் எல்லையற்ற வானத்தின் ஆரம்பம்”

"புதிய இந்தியா தொழில்நுட்பத்தின் நுகர்வோராக மட்டும் இருக்காது, அந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதிலும் செயல்படுத்துவதிலும் இந்தியா தீவிர பங்கு வகிக்கும்"

"5ஜி மூலம், இந்தியா முதல் முறையாக தொலைதொடர்பு தொழில்நுட்பத்தில் உலகளாவிய தரத்தை பெற்றுள்ளது"

2014ல் மொபைல் போன் ஏற்றுமதி செய்யாத நிலையில் இருந்து, இன்று ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள மொபைல் போன் ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியுள்ளோம்.

"நாட்டின் சாமானியர்களின் புரிதல், ஞானம் பற்றி எனக்கு எப்போதும் முழு நம்பிக்கை இருந்தது"

"டிஜிட்டல் இந்தியா சிறு வணிகர்கள், சிறு தொழில்முனைவோர், உள்ளூர் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு ஒரு தளத்தை வழங்கியுள்ளது"

"5ஜி தொழில்நுட்பம் வேகமான இணைய அணுகலுடன் மட்டும் நின்று விடாமல் வாழ்க்கையை மாற்றும் திறனைக் கொண்டுள்ளது"

புதிய தொழில்நுட்ப சகாப்தத்தை தொடங்கும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 5ஜி சேவையை தொடங்கி வைத்தார். ஆறாவது இந்தியா மொபைல் காங்கிரசையும்  பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் வைக்கப்பட்டிருந்த ஐஎம்சி கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இன்று நடைபெறும் மாநாடு உலகளாவியதாக இருக்கலாம் ஆனால் அதன் விளைவுகள் மற்றும் திசைகள் உள்ளுரில் உள்ளன என்றார். 21ம் நூற்றாண்டில் வேகமாக வளரும் இந்தியாவுக்கு இன்று சிறப்பான நாள் என்றார். “இன்று, 130 கோடி இந்தியர்கள் நாட்டிலிருந்தும் நாட்டின் தொலைத்தொடர்புத் துறையிலிருந்தும் 5ஜி வடிவில் அற்புதமான பரிசைப் பெறுகிறார்கள். 5ஜி என்பது நாட்டில் ஒரு புதிய சகாப்தத்தின் கதவுகளைத் தட்டுகிறது. “5ஜி என்பது எல்லையற்ற வாய்ப்புகளின் தொடக்கமாகும். இதற்காக ஒவ்வொரு இந்தியரையும் வாழ்த்துகிறேன்” என்று அவர் மேலும் கூறினார். இந்த 5ஜி அறிமுகம் மற்றும் தொழில்நுட்பத்தின் அணிவகுப்பில், கிராமப்புறங்கள் மற்றும் தொழிலாளர்கள் சம பங்காளிகள் என்று அவர் திருப்தியுடன் குறிப்பிட்டார்.

5ஜி அறிமுகம் பற்றிய மேலும் ஒரு செய்தியை வலியுறுத்திய பிரதமர், “புதிய இந்தியா வெறும் தொழில்நுட்பத்தின் நுகர்வோராக இருக்காது, ஆனால் அந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதிலும் செயல்படுத்துவதிலும் இந்தியா தீவிரப் பங்கு வகிக்கும். எதிர்கால வயர்லெஸ் தொழில்நுட்பத்தை வடிவமைப்பதிலும், அது தொடர்பான உற்பத்தியிலும் இந்தியா பெரும் பங்கு வகிக்கும் என்றார்.'' 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி தொழில்நுட்பங்களுக்காக இந்தியா மற்ற நாடுகளைச் சார்ந்து இருந்ததை பிரதமர் சுட்டிக்காட்டினார். ஆனால் 5ஜி மூலம் இந்தியா புதிய சரித்திரம் படைத்துள்ளது. "5ஜி மூலம், இந்தியா முதல் முறையாக தொலைதொடர்பு தொழில்நுட்பத்தில் உலகளாவிய தரத்தைப் பெற்றுள்ளது" என்று அவர் குறிப்பிட்டார்.

டிஜிட்டல் இந்தியா பற்றிப் பேசிய பிரதமர், இது வெறும் அரசின் திட்டம் என்று சிலர் நினைக்கிறார்கள் என்றார். “ஆனால் டிஜிட்டல் இந்தியா என்பது வெறும் பெயரல்ல, அது நாட்டின் வளர்ச்சிக்கான ஒரு பெரிய தொலைநோக்கு. மக்களுக்காக வேலை செய்யும், மக்களுடன் இணைந்து செயல்படும் அந்த தொழில்நுட்பத்தை சாமானிய மக்களிடம் கொண்டு செல்வதே இந்த தொலைநோக்குப் பார்வையின் குறிக்கோள்.

டிஜிட்டல் இந்தியாவுக்கான முழுமையான அணுகுமுறையின் அவசியத்தில் கவனம் செலுத்திய பிரதமர், “நாங்கள் ஒரே நேரத்தில் நான்கு திசைகளில் 4 தூண்களில் கவனம் செலுத்தினோம். முதலாவதாக, சாதனத்தின் விலை, இரண்டாவது, டிஜிட்டல் இணைப்பு, மூன்றாவது, தரவு செலவு, நான்காவது, மற்றும் மிக முக்கியமாக, 'டிஜிட்டல் ஃபர்ஸ்ட்' யோசனை .

முதல் தூண் குறித்து பிரதமர் கூறுகையில், குறைந்த விலையில் சாதனங்களை தற்சார்பு மூலம் மட்டுமே அடைய முடியும். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் இரண்டு மொபைல் தயாரிப்பு அலகுகள் மட்டுமே இருந்ததை பிரதமர் நினைவு கூர்ந்தார். "இந்த எண்ணிக்கை இப்போது 200 ஆக உயர்ந்துள்ளது" என்று மோடி கூறினார். 2014-ல் மொபைல் போன்களை ஏற்றுமதி செய்யாத நாம், இன்று ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள மொபைல் போன் ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியுள்ளோம் என்று பிரதமர் அடிக்கோடிட்டுக் கூறினார். "இயற்கையாகவே, இந்த முயற்சிகள் அனைத்தும் சாதனத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இப்போது நாம் குறைந்த விலையில் அதிக அம்சங்களைப் பெறத் தொடங்கியுள்ளோம்” என்று அவர் மேலும் கூறினார்.

டிஜிட்டல் இணைப்பின் இரண்டாவது தூணில், 2014ல் 6 கோடியாக இருந்த இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை 80 கோடியாக அதிகரித்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். 2014ல் 100க்கும் குறைவான பஞ்சாயத்துகளில் இருந்து இப்போது 1.7 லட்சம் பஞ்சாயத்துகள் ஆப்டிகல் ஃபைபர் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. “அரசு வீடு வீடாகச் சென்று மின்சாரம் வழங்கும் பிரச்சாரத்தை ஆரம்பித்தது போல, வீடு தோறும் குடிநீர் இயக்கம்  மூலம் அனைவருக்கும் சுத்தமான தண்ணீரை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பணியாற்றியது, உஜ்வாலா திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு எரிவாயு சிலிண்டர்களை வழங்கியது போல  அனைவருக்கும் இணையம் என்ற இலக்கில் எங்கள் அரசாங்கம் இதேபோன்ற முறையில் செயல்படுகிறது," என்று அவர் கூறினார்.

மூன்றாவது தூண், தரவுகளின் விலை குறித்தது. தொழில்துறைக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டதாகவும், 4ஜி  போன்ற தொழில்நுட்பங்கள் கொள்கை ஆதரவைப் பெற்றதாகவும் பிரதமர் கூறினார். இது தரவுகளின் விலையைக் குறைத்தது. மேலும் நாட்டில் தரவுப் புரட்சி ஏற்பட்டது. இந்த மூன்று தூண்களும் தங்கள் இருப்பை எல்லா இடங்களிலும் காட்ட ஆரம்பித்தன, என்றார்.

நான்காவது தூண், அதாவது 'டிஜிட்டல் ஃபர்ஸ்ட்' என்ற ஐடியா. ஒரு சில உயரடுக்கு வகுப்பினர், ஏழைகள் டிஜிட்டலின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வார்களா என்று கேள்வி எழுப்பிய நேரத்தை நினைவு கூர்ந்த பிரதமர், அவர்களின் திறனைப் பற்றி சந்தேகம் இருப்பதாக கூறினார். நாட்டின் சாமானியரின் புரிதல், ஞானம் மற்றும் விசாரிக்கும் திறன் மனதில் எப்போதும் நம்பிக்கை இருந்ததைக்காட்டியது. நாட்டின் ஏழைகள் எப்போதும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை துறையில் அரசின் முயற்சிகளை எடுத்துரைத்த பிரதமர், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை எளிதாக்கியது அரசுதான் என்று குறிப்பிட்டார். “அரசாங்கமே பயன்பாட்டின் மூலம் குடிமக்களை மையமாகக் கொண்ட விநியோக சேவையை மேம்படுத்தியது. அது விவசாயிகளாக இருந்தாலும் சரி, சிறு கடைக்காரர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் அன்றாட தேவைகளை இந்த செயலி மூலம் பூர்த்தி செய்வதற்கான வழியை நாங்கள் வழங்கியுள்ளோம்” என்று திரு மோடி மேலும் கூறினார். பல நாடுகள் இந்தச் சேவைகளைத் தொடர்வது கடினமாக இருந்தபோது, பெருந்தொற்றின்போது, டிபிடி, கல்வி, தடுப்பூசி, சுகாதார சேவைகள் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்வது ஆகியவற்றின் தடையற்ற தொடர்ச்சியை அவர் விவரித்தார்.

டிஜிட்டல் இந்தியா ஒரு தளத்தை வழங்கியுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், சிறு வணிகர்கள், சிறு தொழில்முனைவோர், உள்ளூர் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் இப்போது அனைத்தையும்  சந்தைப்படுத்த முடியும் என்றார். “இன்று நீங்கள் உள்ளூர் சந்தை அல்லது காய்கறி சந்தைக்குச் சென்று பாருங்கள், ஒரு சிறிய தெருவோர வியாபாரி கூட, பணமாக அல்ல, ஆனால் ‘யுபிஐ’ மூலம் பரிவர்த்தனை செய்யச் சொல்வார். "ஒரு வசதி கிடைக்கும்போது, சிந்தனையும் தைரியமாகிறது என்பதை இது காட்டுகிறது " என்று பிரதமர் மேலும் கூறினார். அரசாங்கம் தூய்மையான நோக்கத்துடன் செயல்படும் போது, குடிமக்களின் எண்ணங்களும் மாறுகின்றன என்றார் பிரதமர். "2ஜி மற்றும் 5ஜியின் நோக்கத்தில் முக்கிய வேறுபாடு இதுதான்" என்று அவர் குறிப்பிட்டார்.

தரவுகளின் விலை உலகிலேயே மிகக் குறைவு என்று பிரதமர் கூறினார். ஒரு ஜிபிக்கு 300 ரூபாயில் இருந்து சுமார் 10 ரூபாயாக குறைந்துள்ளது. நுகர்வோரை மையமாகக் கொண்ட அரசாங்கத்தின் முயற்சிகளைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவில் தரவுகளின் விலை மிகவும் குறைவாகவே உள்ளது என்று கூறினார். பிரதமர் குறுக்கிட்டு, “நாங்கள் பெரிய விளம்பரங்களை வெளியிடவில்லை என்பது வேறு விஷயம். நாட்டு மக்களின் வசதி மற்றும் வாழ்க்கை வசதி எவ்வாறு அதிகரித்தது என்பதில் நாங்கள் கவனம் செலுத்தினோம். "முதல் மூன்று தொழில் புரட்சிகளால் இந்தியா பயனடையாமல் இருக்கலாம், ஆனால் 4வது தொழிற்புரட்சியின் முழுப் பலனையும் இந்தியா பெறும் என்றும், உண்மையில் அதை வழிநடத்தும் என்றும் நான் நம்புகிறேன்" என்று அவர் மேலும் கூறினார்.

5ஜி தொழில்நுட்பத்தின் பயன்பாடு வேகமான இணைய அணுகலுடன் மட்டும் நின்றுவிடாது.  அது வாழ்க்கையை மாற்றும் திறனைக் கொண்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். தொழில்நுட்பத்தின் வாக்குறுதிகளை நம் வாழ்நாளில் நிறைவேற்றுவதைக் காண்போம் என்றார் அவர். நாட்டின் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் கட்டவிழ்த்துவிடுமாறு தொலைத்தொடர்புத் துறை சங்கத்தின் தலைவர்களை திரு மோடி வலியுறுத்தினார். எலக்ட்ரானிக் உற்பத்திக்கான உதிரி பாகங்களைத் தயாரிக்க எம்எஸ்எம்இ-களுக்கு உதவும் சூழலை உருவாக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார். நாட்டில் ஒரு புரட்சியை ஏற்படுத்த 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆளில்லா விமானக் கொள்கைக்குப் பிறகு ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை பிரதமர் எடுத்துரைத்தார். பல விவசாயிகள் ட்ரோன்களை பறக்கவிடக்  கற்றுக்கொண்டதாகவும், பூச்சிக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை வயல்களில் தெளிப்பதற்கும் அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எதிர்கால இந்தியா, வரவிருக்கும் தொழில்நுட்பத் துறையில் உலகிற்கு வழிகாட்டும் என்றும், இந்தியாவை உலகளாவிய தலைவராக மாற்றும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

நிகழ்ச்சியில், மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ், மத்திய தகவல் தொடர்பு இணை அமைச்சர் திரு தேவுசின் சவுகான், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் திரு முகேஷ் அம்பானி, பார்தி எண்டர்பிரைசஸ் தலைவர் திரு சுனில் மிட்டல், ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் திரு குமார் மங்கலம் பிர்லா மற்றும் தொலைத்தொடர்பு துறை செயலாளர் திரு கே ராஜாராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னணி

5ஜி தொழில்நுட்பம் சாமானிய மக்களுக்கு பலவிதமான நன்மைகளை வழங்கும். இது தடையற்ற விரைவான அதிக தரவு வீதம், மிகவும் நம்பகமான தகவல்தொடர்புகளை வழங்க உதவும். மேலும், இது ஆற்றல் திறன், ஸ்பெக்ட்ரம் திறன் மற்றும் நெட்வொர்க் செயல்திறனை அதிகரிக்கும். 5ஜி தொழில்நுட்பம், உயர்தர வீடியோ சேவைகளை அதிக வேகத்தில் இயக்கப் பயன்படும்.

5ஜி, பேரழிவுகளை நிகழ்நேர கண்காணிப்பு, துல்லியமான விவசாயம், ஆழமான சுரங்கங்கள், கடல்சார் செயல்பாடுகள் போன்ற ஆபத்தான தொழில்துறை நடவடிக்கைகளில் மனிதர்களின் பங்கைக் குறைக்க உதவும். தற்போதுள்ள மொபைல் தொடர்பு நெட்வொர்க்குகளைப் போலல்லாமல், 5ஜி நெட்வொர்க்குகள் ஒவ்வொன்றிற்கும் தேவையான தேவைகளை வடிவமைக்க அனுமதிக்கும்.

"புதிய டிஜிட்டல் யுனிவர்ஸ்" என்ற கருப்பொருளுடன் அக்டோபர் 1 முதல் 4 ஆம் தேதி வரை இந்திய மொபைல் காங்கிரஸ் நடைபெற உள்ளது. இது டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் விரைவான தத்தெடுப்பு மற்றும் பரவலில் இருந்து வெளிப்படும் தனித்துவமான வாய்ப்புகளை விவாதிக்க மற்றும் வெளிப்படுத்த முன்னணி சிந்தனையாளர்கள், தொழில்முனைவோர், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளை ஒன்றிணைக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

பதிவு செய்யும் பத்திரங்களில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் கட்டாயம் பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை

ஆவணங்கள் பதிவு செய்யும் போது எழுதிய பத்திரங்களின் கடைசி பக்கத்தில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால் பதிவு செய்த பத்திரப் பதிவு செல்லாது      அதோடு தற்போது அவரது புகைப்படம் இணைப்பு வேண்டும். கடைபிடிக்காத ஆவண எழுத்தர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை   பத்திர பதிவுத்துறைமின் சுற்றறிக்கை முழு விபரம்‌ பத்திரப் பதிவு செய்யும் ஆவணங்களில் பதிவு ஆவண எழுத்தர் பெயர், உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால், அந்த பத்திரப்பதிவு செல்லாது. தமிழகத்தில் போலியான பத்திரங்கள் பதிவாவதைத் தடுக்க மாநில பதிவுத்துறைத் தலைவர் சிவன் அருள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை அதில், ஆவணத்தை தயார் செய்த ஆவண எழுத்தர் அல்லது வழக்குறைஞர் பார் கவுன்சில் பதிவு எண் பெயர் மற்றும் உரிமம் எண் உடன் புகைப்படம் இணைத்து பதிவு செய்ய வேண்டும். ஆவண எழுத்தரின் புகைப்படமும் அதன் கீழ் அவரது கையொப்பமும் வேண்டும். இந்த நடைமுறை ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறதென அனைத்து பதிவுத்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ள இந்த நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் மாதிரிப் படிவம் ஒன