ரூ.82.41 லட்சம் மதிப்பிலான 1.85 கிலோ தங்கம் பறிமுதல்
28.10.2022 அன்று விமானம் மூலம் துபாயிலிருந்து வந்த ஒரு பயணியை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் இடைமறித்து சோதனையிட்டனர். அவரை பரிசோதித்ததில், அவரது உடலில் இருந்து பேஸ்ட் வடிவில் மூன்று தங்க பண்டல்கள் மீட்கப்பட்டன. 1036 கிராம் எடையுள்ள அந்த தங்கக் கட்டியின் மதிப்பு ரூ. 46.15 லட்சம் ஆகும்.
மற்றொரு நிகழ்வில், துபாயில் இருந்து வந்த மற்றொரு பயணியின் பொருட்களை ஆய்வு செய்ததில், ரூ.36.26 லட்சம் மதிப்புள்ள 814 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலிகள் மீட்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
சுங்கச் சட்டம் 1962-ன் கீழ் ரூ.82.41 லட்சம் மதிப்புள்ள 1.85 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று சுங்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது
கருத்துகள்