மகள் திட்டியதால் மனமுடைந்து, கொள்ளிடம் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 90 வயது மூதாட்டி
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம் முதலைமேடு திட்டு கிராமத்தின் அஞ்சலை ( வயது 90). மகள் வீட்டில் வசித்து வந்த அஞ்சலை, குடும்பப் பிரச்னையில் மகள் திட்டியதால் மனமுடைந்து, 28 ஆம் தேதியன்று கொள்ளிடம் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற போது அதை நாகப்பட்டினம் ஆயுதப்படைக் காவலர் தனஞ்ஜெயன் என்பவர் பணியை முடித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் கடலூர் மாவட்டத்திலுள்ள தனது வீட்டுக்குத் திரும்பிய நிலையில். மூதாட்டி ஆற்றில் குதித்தைக் கண்ட தனஞ்செயன் சற்றும் தாமதிக்காமல் ஆற்றில் குதித்து நீந்திச் சென்று, மூதாட்டியை மீட்டு அந்தப் பகுதி மீனவர் சேகர் உதவியுடன் படகிலேற்றி கரைக்குக் வந்து சேர்த்ததையடுத்து அஞ்சலையின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களிடம் பாட்டி அஞ்சலை பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார். துரிதமாகச் செயல்பட்ட ஆயுதப்படைக் காவலர், மீனவர்கள் உதவியுடன் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை காப்பாற்றிய தனஞ்செயனுக்கும் மீனவர்களுக்கும் பாராட்டுதா தெரிவித்தனர்.
கருத்துகள்