தமிழ்நாடு காவல்துறை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பதில். காவல்துறை தலைமையகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அண்ணாமலையின் சில கருத்துக்களுக்கு காவல்துறை தரப்பு கடுமையான பதில் தந்துள்ளது.
கோயம்புத்தூரில் கார் வெடித்தது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தயாளர்களிடம் தொடர்ந்து தகவல் கூறி வருகிறார். இந்த கார் வெடிப்பில் காவல்துறை தகவல்களை வெளியிடும் அண்ணாமலை பல உறுதிப்படுத்தாத தகவல்களை வெளியிட்ட நிலையில். அதில் கோயமுத்தூர் குண்டு வெடிப்பு சம்பவத்தை பலர் சேர்ந்து செய்திருக்கிறார்கள். ஆனால் முபின் என்று ஒருவர் மீது மட்டுமே குற்றச்சாட்டுகளை அடுக்குவது தவறு.
டிஜிபி ஒருவர் மீது மட்டும் குற்றச்சாட்டு வைக்கிறார். அவர் வைக்கும் குற்றச்சாட்டு காமெடியாக இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகம் இதில் எச்சரிக்கை விடுத்தும் தமிழ்நாடு காவல்துறை கோட்டை விட்டுவிட்டதாக அண்ணாமலை தெரிவித்தார். காவல்துறை இதில் துரிதமாகச் செயல்படவில்லை. என்ஐஏ இதை உடனே விசாரிக்க வேண்டும். நிலைமை மோசமாக்கிக்கொண்டிருக்கிறது, என்று அண்ணாமலை குற்றச்சாட்டு வைத்தார். இந்த நிலையில்தான் தமிழ்நாடு காவல்துறை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பதிலளித்துள்ளது.
இதில் அண்ணாமலைக்கு எதிராக முக்கியமான விமர்சனம் ஒன்றை காவல்துறை தரப்பு வைத்துள்ளது. அதில், திடீரென்று வெடிகுண்டு நிகழ்வு கோயமுத்தூரில் நடக்கப் போவதாக டெல்லி உள்துறை அமைச்சகம் முன்பாகவே தமிழ்நாடு அரசுக்கு எச்சரித்ததாக அண்ணாமலை புகார் கூறுகிறார். இது அபத்தமானது.
இது பொய்யான பழி. என தமிழ்நாடு . காவல்துறைத் தலைமையகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அண்ணாமலையின் சில கருத்துக்களுக்கு காவல்துறை தரப்பின் பதிலாக அமைகின்றன,.
மேலும் அதில்
"பொய் ஏனென்றால், அவர் குறிப்பிடுவது, புது டில்லி உள்துறை அமைச்சகத்திலிருந்து அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும அனுப்பப்பட்ட பொதுவான சுற்றறிக்கையாகும். இதில் கோயமுத்தூர் சம்பவம் பற்றி எந்த இடத்திலும் கூறப்படவில்லை. அந்த சுற்றறிக்கை மாநில அரசாங்கங்களுக்கு குண்டு வெடிக்கப் போவதாக முன்கூட்டியே எச்சரித்ததாகவும் காவல்துறை அதை அலட்சியப்படுத்தியதாகவும் பொய்யாகப் பழி சுமத்தி ஒரு பொய் பிம்பத்தை எற்படுத்த முயல்கிறார். அது உண்மை கிடையாது. குறிப்பிட்ட சுற்றறிக்கையில் கோயமுத்தூர் மாநகரைப்பற்றி எந்தத் தகவலுமில்லை. அப்படி எந்த விதமான எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. .
இவர் சொல்வது போல் கோயமுத்தூரில் இந்த சம்பவம் சில குறிப்பிட்ட நபர்கள் நடத்தப் போகிறார்கள் என்ற தகவல் கிடைத்திருத்தால் தமிழ்நாடு காவல்துறை அந்த நிமிடமே அந்த நபர்களைக் கைது செய்து , வீடுகளை சோதனையிட்டு , வெடி பொருட்களைக் கைப்பற்றி இருக்கும். 18.10.2022 ஆம் தேதியிட்ட வழக்கமான சுற்றறிக்கை 21ஆம் தேதி பெறப்பட்டு உடனே அனைத்து நகரங்களுக்கும், மாவட்ட காவல் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. மற்றபடி கோயமுத்தூருக்கு என்று தனியாக எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
எனவே இது போன்ற உண்மையில்லாத மிகைபடுத்தப்பட்ட செய்திகளையும் வதந்திகளையும் முன்னாள் கர்நாடக காவல் துறை அதிகாரி பரப்பி தமிழ்நாடு காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் சாராம்சம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பொய்யான செய்திகளைப் பரப்பி வருவதாகவும், அதை நிறுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு காவல்துறை நேரடியாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த நிலையில் கோயமுத்தூரில் நடந்த கார் வெடிகுண்டு்த் தாக்குதல் தற்கொலைப்படைத் தாக்குதல் என விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும்
வெடிகுண்டு தயாரிப்பதில் போதிய அனுபவம் இல்லாத காரணத்தால் கோட்டைமேடு பெரிய அளவு பாதிப்பில் இருந்து காப்பாற்றப்பட்டதெனவும்
முபின் வீட்டிலிருந்து 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு பெரும்பாலானவை வெடிகுண்டு தயாரிக்க பயன்படுபவை என முதல் தகவல் அறிக்கையில் தகவல் தெரிகிறது.
அதில் பொட்டாசியம் நைட்ரேட், பிளாக் பவுடர், தீப்பெட்டி, இரண்டு மீட்டர் நீளமுள்ள கிராக்கர் ஃபீஸ், நைட்ரோ க்ளைரசின், சிகப்பு பாஸ் பரஸ், பிஇடிஎன் பவுடர் (பென்டா எரித்திரிடால் டிரை நைட்ரேட்), அலுமினியம் பவுடர், ஓஎக்ஸ்ஒய் 99, ஆக்ஸிஜன் சிலிண்டர், சல்ஃபர் பவுடர், அறுவை சிகிச்சைக்கு பயன் படுத்தப்படும் பிளேடு, கண்ணாடிகள், 9 வாட்ஸ் பேக்டரி, 9 வாட்ஸ் பேட்டரி கிளிப், வயர், ஆணிகள், சுவிட்ச், சிலிண்டர், ரெகுலெட்டர், டேப், கையுறைகள், ஜிகாத் வரிகள் கொண்ட நோட்டுகள் உள்ளிட்ட 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன
எஃப்ஐஆரில் கார் சிலிண்டர் வெடித்தது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சங்கமேஸ்வரர் கோவில், முந்தி விநாயகர் கோவில் மற்றும் கோனியம்மன் கோவில்; முபின் ஒரு தனி ஆளாய் உளவு பார்த்ததாக புலனாய்வாளர்கள் கருதி அவற்றை சரிபார்க்க இந்த கோவில்களை இணைக்கும் பகுதிகளிலிருந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைச் சேகரித்து வருகின்றனர் .
கருத்துகள்