குரு சாஹிப்களின் கனவை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவோம்: பிரதமர்
ஹேம்குந்த் சாஹிப் ரோப்வே குறித்த மகிழ்ச்சிகரமான மற்றும் அன்பான வார்த்தைகளுக்காக, சீக்கிய சமூகத்தின் மதிப்பிற்குரிய ஆன்மிகப் பிரமுகர்கள் மற்றும் ஜதேதார் ஸ்ரீ அகால் தகாத் சாஹிப் அவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நன்றி தெரிவித்தார்.
பத்திரிகை தகவல் அலுவலகத்தின் ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக, பிரதமர் ட்வீட் செய்ததாவது:
“ஜதேதார் ஸ்ரீ அகால் தகாத் சாஹிப், முக்கிய ஆன்மீக பிரமுகர்கள் உட்பட சீக்கிய சமூகத்தின் மரியாதைக்குரிய உறுப்பினர்கள், ஹேம்குந்த் சாஹிப் ரோப்வே குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
தங்களின் அன்பான வார்த்தைகளுக்கு நான் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் குரு சாஹிப்களின் கனவை நிறைவேற்ற நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம் என்று சங்கத்திற்கு உறுதியளிக்கிறேன்.”
கருத்துகள்