டாக்டர் அகிலேஷ் குப்தா எஸ்இஆர்பி செயலாளராக கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்
டாக்டர் சந்தீப் வர்மா தனது பதவிக்காலம் முடிந்து எஸ்இஆர்பி செயலாளர் பொறுப்பை அக்டோபர் 7 அன்று ராஜினாமா செய்தபின், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் மூத்த ஆலோசகர் டாக்டர் அகிலேஷ் குப்தா, அக்டோபர் 8, 2022 அன்று அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தின் (எஸ்இஆர்பி) செயலாளராக கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
டாக்டர் குப்தா தற்போது கொள்கை ஒருங்கிணைப்பு மற்றும் திட்ட மேலாண்மைப் பிரிவின் தலைவராக உள்ளார். மேலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் 5 தேசிய இயக்கங்களுக்கு ஒட்டுமொத்த பொறுப்பாளராக உள்ளார்.
புகழ்பெற்ற வளிமண்டல விஞ்ஞானியான டாக்டர் குப்தா தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 200 க்கும் அதிகமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். 5 புத்தகங்களின் ஆசிரியரான அவர், 350 க்கும் அதிகமான கட்டுரைகள் சுமார் 1000 அறிக்கைகளை எழுதியுள்ளார்.
டாக்டர் அகிலேஷ் குப்தா, லக்னோ பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுகலை பட்டம் பெற்றவர் (1984). வளிமண்டல அறிவியலில் ஐஐடி டெல்லியில் முனைவர் பட்டம் பெற்றவர் (1999). 1985ல் இந்திய வானிலைத் துறையில் சேர்ந்தார், பின்னர் 1994 இல் நடுத்தர தொலைவு வானிலை முன்னறிவிப்புக்கான தேசிய மையத்தில் சேர்ந்தார். இவை தற்போது புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ளன.
கருத்துகள்