சுரங்கங்கள் அமைச்சகம் வடகிழக்கு புவியியல் மற்றும் கனிம வள அமைச்சர்கள் மாநாட்டிற்கு மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி தலைமை ஏற்கிறார்
நாகாலாந்தில் வரும் 31 ஆம் தேதி நடைபெறும் முதலாவது வடகிழக்கு புவியியல் மற்றும் கனிம வள அமைச்சர்கள் மாநாட்டிற்கு, மத்திய சுரங்கம், நிலக்கரி மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி தலைமை ஏற்கிறார்.
இந்த மாநாட்டின் முதல் நிகழ்வாக வடகிழக்கு மாகாணங்களை சேர்ந்த பல்வேறு அமைச்சர்கள் கலந்து கொண்டு அங்கு கனிமம் மற்றும் புவியியல் சார்ந்த நடவடிக்கைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். அதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து அவர்கள் பின்னர் அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷியிடம் எடுத்துரைக்கிறார்கள்.
இந்த மாநாட்டின் நோக்கமானது வடகிழக்கு மாகாணங்களில் நிலவும் பிரச்சினைகள் குறித்து விவாதித்து முக்கிய முடிவுகள் எடுப்பதற்காகத்தான். வடகிழக்கு மாகாணங்களில் கனிம வளம் அதிகளவில் இருப்பதால், அதுதொடர்பான நடவடிக்கைகள் குறித்து சுரங்கத்துறை அமைச்சகம் முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன் விளைவாக அந்த பகுதிகள் வளர்ச்சி அடையும்.
கனிம வள சுரங்க நடவடிக்கைகள், புவியியல் மற்றும் அதுசார்ந்த சுரங்க நடவடிக்கைகளுக்கு சுரங்கத்துறை அமைச்சகம் தொடர்ந்து பல்வேறு செயல்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஹைதராபாதில் தேசிய கனிம வள அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்