தசரா பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவரின் வாழ்த்துக்கள்
தசரா பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தமது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
"புனிதமான விஜயதசமி விழாக்காலத்தில், குடிமக்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களையும் நல்விருப்பங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தீமைக்கு எதிராக நன்மை, அசத்தியத்திற்கு எதிராக சத்தியம், ஒழுக்கக்கேட்டிற்கு எதிராக ஒழுக்கம் வெற்றிபெற்றதன் அடையாளமாக இந்தியா முழுவதும் விஜயதசமி விழா கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் இது 'தசரா' என்று கொண்டாடப்படுகிறது; ராவணனுக்கு எதிராக பகவான் ராமர் வெற்றி பெற்றது 'ராவண தஹன்' என சித்தரிக்கப்படுகிறது. ஸ்ரீ ராமரின் லட்சிய நடத்தை மற்றும் ஒழுக்கம் பற்றிய செய்தி தலைமுறை தலைமுறையாக மக்களுக்கு ஊக்கமளிக்கிறது.
கிழக்கு இந்தியாவில், இந்த நாளில் 'துர்கா சிலையை நீர்நிலையில் கரைக்கும்' விழா உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இவ்வாறு, இந்த விழா இந்தியாவின் கலாச்சார ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
நெறிமுறைகள், உண்மை, நன்மை என்ற வாழ்க்கையின் விழுமியங்களை உள்வாங்கவும், அமைதி மற்றும் நல்லிணக்க வாழ்க்கையை வாழவும் இந்த விழா தொடர்ந்து நம்மை ஊக்குவிக்க நான் வாழ்த்துகிறேன்.தசரா பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்குக் குடியரசு துணைத் தலைவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
தசரா பண்டிகையையொட்டி குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவரது செய்தியின் முழு விவரம் பின்வருமாறு –
“இந்தியா முழுவதும் பாரம்பரிய உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படும் தசராவின் மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நல் விருப்பங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தீமைக்கு எதிராக நன்மையின் வெற்றியின் அடையாளமான தசரா, 'தர்மம்' அல்லது நீதியின் மீதான நமது நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. பகவான் ராமரால் போற்றப்பட்ட உண்மை, நீதி, இரக்கம், கடமை, தைரியம் ஆகிய நற்பண்புகளைப் போற்றுவதற்கும் உத்வேகம் பெறுவதற்கும் இது ஒரு நிகழ்வாகும்.
இந்தப் பண்டிகை நாட்டில் அமைதி, செழிப்பு மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டுவரட்டும்
கருத்துகள்