ஐந்து நாடுகளின் தூதர்கள் நியமன உத்தரவுகளை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தனர்
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (26.10.2022) நடைபெற்ற நிகழ்ச்சியில், உகாண்டாவின் துணைத் தூதர் மற்றும் வியட்நாம், ஈரான், ஸ்வீடன், பெல்ஜியம் தூதர்களின் நியமன உத்தரவுகளை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஏற்றுக் கொண்டார். தங்களின் நியமன உத்தரவுகளை சமர்ப்பித்தவர்களின் விவரம்:
மேன்மைதங்கிய திருமதி ஜாய்ஸ் கக்குராமட்ஸி கிகாபண்டா, உகாண்டா குடியரசின் துணைத் தூதர்
மேன்மைதங்கிய திரு நகுயன் தான் ஹய், வியட்நாம் சோஷலிச குடியரசின் தூதர்
மேன்மைதங்கிய டாக்டர் இராஜ் இலாஹி, ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதர்
மேன்மைதங்கிய திரு ஜேன் தெஸ்லெஃப், ஸ்வீடன் தூதர்
மேன்மைதங்கிய திரு டிடைர் வந்தேர்ஹேசெல்ட், பெல்ஜியம் அரசின் தூதர்.
கருத்துகள்