புதிதாகத் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் அதில் தண்டனைகள் குறித்து தமிழ்நாடு உள்துறை முதன்மைச் செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள
அரசாணையில் தெரிவிக்கப்பட்ட விவரப்பட்டியலில் கண்டுள்ள படி 44 வகை அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளது. குற்றத்தின் தன்மை மற்றும் தண்டனைக்குரிய
சட்டப் பிரிவு மற்றும் முதல்முறை குற்றமும் அபராதமும், இரண்டாவது முறை குற்றமும் அபராதமும் அதில் விளக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனச் சட்டம் 1988 க்கு முரணான செயல்கள் பிரிவு 177 ன் படி ரூ.500 ரூ.1500
மோட்டார் வாகன உரிமம் புதுப்பிக்காமல் இருந்தால் ரூ.500 ரூ.1500
உரிமத்தை 12 மாதத்துக்குள் புதுப்பிக்காமல் இருந்தால் ரூ.500 ரூ.1500
குறிப்பிட்ட காலத்துக்குள் மோட்டார் வாகனம் கை மாறியது குறித்து தெரிவிக்கத் தவறினால் ரூ.500 ரூ.1500
போக்குவரத்துக் குறியீடுகளை மீறினால் ரூ.500 ரூ.1500
போக்குவரத்துக்கு குறியீடுகளை மாற்றினாலோ, மீறினாலோ ரூ.500 ரூ.1500
பொது இடங்களில் அபாயகரமான வகையில் வாகனங்களை நிறுத்தினால் ரூ.500 ரூ.1500
வாகனத்தின் மேற்கூரை, உள்ளிட்ட மற்ற இடங்களில் பயணம் செய்தால் ரூ.500 ரூ.1500
ஓட்டுநருக்கு இடைஞ்சலாக பயணிகள் அமர்ந்து செல்வது ரூ.500 ரூ.1500
ஓட்டுநர் அருகில் உரிமம் இல்லாத பொருட்களை வைத்துச் செல்வது ரூ.500 ரூ.1500
சோதனையின் போது உரிய உரிமங்களையும்,அனுமதிச் சான்றுகளையும் காட்டவில்லை என்றால் ரூ.500 ரூ.1500
காப்பாளர் இல்லாத இரயில்வே கேட்டில் நிறுத்தாமல் சென்றால் ரூ.500 ரூ.1500
பயணிகள் வாகனத்துக்கான உரிய சான்றுகள் இல்லை என்றால் பிரிவு 178 (1) ன் படி ரூ.500-
உரிய அதிகாரிகளின் உத்தரவுகளைச் செய்ய மறுப்பது, தகவல் கொடுக்காமல் இருந்தால் பிரிவு 179 (2) ன் படி ரூ.2000 -
உண்மைக்கு மாறான தகவல்களை அலுவலர்களுக்குத் தெரிவிப்பது பிரிவு 179 (2)ன்படி ரூ.2000 -
தகுதியில்லாத நபர்களை வாகனம் ஓட்ட அனுமதிப்பது பிரிவு 180 ன் படி ரூ.5000 -
விதி 3 மற்றும் 4 க்கு புறம்பாக உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கினால் பிரிவு 181 ன் படி ரூ.5000 -
உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டினால் பிரிவு 182(1) ன் படி ரூ.10000 -
உரிமம் இல்லாமல் நடத்துனர் பணிக்குச் சென்றால் பிரிவு 182(1) ன் படி ரூ.10000 -
சட்டத் தொகுதி 7க்கு முரணாக மோட்டார் வானகங்களை விற்பது பிரிவு 182 ஏ (1) ன் படி ரூ.1 லட்சம் -
பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள வாகனங்களை விற்பனை செய்தால் பிரிவு 182ஏ(3) ன் படி ரூ.1 லட்சம் -
விதிகளுக்குப் புறம்பாக வாகனங்களில் பாகங்களை மாற்றுவது,பிரிவு 182ஏ(4)ன் படி ஒவ்வொரு மாற்றத்துக்கும் ரூ.5000 -
அதிவேகத்தில் வாகனத்தை இயக்கினால், பிரிவு 183(1)(i) ன் படி ரூ.1000 -
நடுத்தர அல்லது கனரக வாகனம் (சுமைகள், பயணிகள்) அதிவேகமாக இயக்கினால் பிரிவு 183(1)(i) ன் படி ரூ.2000 -
ஆபத்தான முறையில் ஓட்டுவது, செல்லுலர் போனில் பேசிக் கொண்டே இயக்கினால் பிரிவு 184 ன் படி ரூ.1000 --
மனநிலை மற்றும் உடல் நிலை பாதிப்பில் வாகனங்களை இயக்குவது பிரிவு186 ன் படி ரூ.1000 -
பொது சாலைகளில் வாகனப் பந்தயம் போல் வேகமாக இயக்கினால் பிரிவு 189 ன் படி ரூ.5000 -
சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறினால் பிரிவு 190(2) ன் படி ரூ.10000 -
பதிவில்லாத வாகனங்களை இயக்கினால் பிரிவு 192(1)ன் படி ரூ.2500 -
பர்மிட் இல்லாமல் வாகனங்களை இயக்கினால் பிரிவு 192ஏ(1) ன்படி ரூ.10000-
அனுமதிக்கப்பட்ட பகுதிகள் தவிர மற்ற இடங்களில் குறுக்கிடுவது, அனுமதிக்கப்பட்ட எடைக்கு அதிகமாக எடுத்துச் செல்வது பிரிவு 194(1) ன் படி ஒவ்வொரு டன்னுக்கும் ரூ.2000
,எடைக்கான அனுமதிச் சான்று வழங்க மறுப்பது, அதிக எடையை குறைக்க மறுப்பது பிரிவு 194(2) ன்படி ரூ.40000 -
வாகனங்களை மீறி சுமைகள் வெளியில் நீண்டு இருந்தால் பிரிவு 194(1ஏ) ன்படி ரூ.20000 -
பயணிகள் வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட பயணிகளுக்கு அதிமாக ஏற்றிச் சென்றால் பிரிவு 194ஏ ன் படி ஒவ்வொரு பயணிக்கும் ரூ.200 -
சீட் பெல்ட் அணியாவிட்டால் பிரிவு 194பி(1) ன் படி ரூ.1000 -
14 வயதுக்குட்பட்டவர்கள் வாகனங்களை இயக்கினால் பிரிவு 194பி(2) ன்படி ரூ.1000 -
மோட்டார் சைக்கிளில் கூடுதலாக நபர்களை ஏற்றிச் சென்றால் பிரிவு 194சி ன் படி ரூ.1000 -
மோட்டார் சைக்கிளை ஓட்டுவோர் மற்றும் அவர் பின் அமர்ந்து செல்வோர் தலைக்கவசம் அணியாவிட்டால் பிரிவு 194டி(1) ன் படி ரூ.1000 -
ஆம்புலன்ஸ், தீ அணைப்பு அல்லது தடுப்பு வாகனங்களுக்கு வழிவிடாவிட்டால் பிரிவு 194 இ ன் படி ரூ.10000 -
தேவையில்லாமல் ஹாரன் அடிப்பது, தடை செய்யப்பட்ட இடங்களில் அடிப்பது பிரிவு 194 எப் ன்படி ரூ.1000 -
காப்பீடு செய்யாத வாகனங்களை இயக்கினால் பிரிவு 196 ன்படி ரூ.2000 -
மோட்டார் வாகனத்தின் மெக்கானிசத்தை மாற்றி அமைத்தால் 198 ரூ.1000 -
இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளில் இருந்து நடைமுறைக்கு வருகிறது என தமிழ் நாடு அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் பணீந்திர ரெட்டி அரசாணையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்